Published:Updated:

`ஃபேஷன் உடைகள் வாடகைக்கு...!' - வாடிக்கையாளர்களைக் கவரும் நிறுவனம்

இந்த ஃபேஷன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒரு பை நிறைய பழைய துணிகளை வழங்கினால் அதற்குப் பதிலாக...

உடைகள் வாடகைக்கு
உடைகள் வாடகைக்கு ( pixabay )

சுற்றுச்சூழல் மாசடைவதில் ஃபேஷன் துறையின் பங்கு பெருமளவில் இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த கடந்த செப்டம்பர் மாதம் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஃபேஷன் துறைக்கான நிலையான தீர்மானமான SU.RE( Sustainable Resolution) திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

ஃபேஷன் உடைகள்
ஃபேஷன் உடைகள்
freepik

இந்திய அளவில் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசு குறித்து உலக அளவில் இயங்கிக்கொண்டிருக்கும் ஃபேஷன் துறையினரிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கார்பன் உமிழ்வைக் குறைப்பது, கழிவுநீர் வெளியேற்றத்தைச் சீர் செய்வது என ஃபேஷன் துறையினர், சுற்றுச்சூழல் மாசடைவது குறித்த பல காரணிகளை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஃபேஷன் உடைகள்
ஃபேஷன் உடைகள்
freepik

ஆண், பெண், டீன் ஏஜ் மற்றும் சிறுவர்கள் என அனைவருக்கும் உடை தயாரிக்கும் H&M ஃபேஷன் நிறுவனம் சமீபத்தில் `ஃபேஷன் உடைகள் வாடகைக்கு' எனக் கவர்ந்திழுக்கக்கூடிய ஒரு புது யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள், வாடகைக்கென ஒதுக்கப்பட்ட உடைகளில் அவர்களுக்குப் பொருந்தக்கூடிய உடையை வாடகைக்கு எடுத்துச்செல்லலாம். இத்திட்டம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஸ்வீடன் நாட்டில் 1947-ம் ஆண்டு உருவான இந்த நிறுவனம் அறுபதுக்கும் மேலான நாடுகளில் கிட்டத்தட்ட 4,500- க்கும் அதிகமான கடைகளை நிறுவியுள்ளது. இந்நிறுவனம் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் விதமாக பல விஷயங்களை முன்னிறுத்திவருகிறது.

ஃபேஷன் உடைகள்
ஃபேஷன் உடைகள்
H&M

இதற்கு முன்பு வாடிக்கையாளர்களிடம் பழைய துணிகளைப் பெற்று புதுப்பிக்கும் `ரெஸ்டோர்' எனும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பை நிறைய பழைய துணிகளை வழங்கினால், பதிலாக ஒரு சலுகைக் கூப்பன் கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது.

இத்திட்டத்தில், எந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட உடையாக இருந்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள். இதுதவிர திரைச்சீலை, டேபிள் க்ளாத், டவல் என அனைத்துவிதமான துணிகளையும் வாங்கிப் புதுப்பித்து `ரெஸ்டோர்' என லேபிள் ஒட்டி விற்பனைக்கு வைக்கிறார்கள்.

ஃபேஷன் உடைகள்
ஃபேஷன் உடைகள்
freepik

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு தேவைக்கான உற்பத்தியை மட்டுமே உருவாக்குகிறார்கள். இதுபோல பல மாற்றங்களை முன்னெடுக்கும் H&M நிறுவனத்தின் செயல்பாடுகளைப் போல் அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடித்தால் மாசற்ற தேசம் சாத்தியமே.