Published:Updated:

பல்லேலக்கா பல்லேலக்கா பலாசோ! - இது பேண்டெமிக் சீஸன் ஃபேஷன்

ஃபேஷன்

பிரீமியம் ஸ்டோரி

கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு, வொர்க் ஃப்ரம் ஹோம் போன்றவை பெண்களின் உடையலங்காரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் பெரும்பாலான பெண்களின் விருப்பமாக மாறியிருக்கின்றன தளர்வான ஆடைகள். குறிப்பாக பலாசோ பேன்ட்ஸ். அவரவரின் உடல்வாகுக்கேற்ப பலாசோவை எப்படித் தேர்வு செய்வது, எப்படி மிக்ஸ் மேட்ச் செய்வது போன்ற தகவல்களை வழங்குகிறார் சேலத்தைச் சேர்ந்த வஸ்தரா தி லேபிளின் உரிமையாளரான ஃபேஷன் டிசைனர் செளந்தர்யா.

பல்லேலக்கா பல்லேலக்கா பலாசோ! - இது பேண்டெமிக் சீஸன் ஃபேஷன்
பல்லேலக்கா பல்லேலக்கா பலாசோ! - இது பேண்டெமிக் சீஸன் ஃபேஷன்

கேஷுவல் லுக்

நீங்கள் கேஷுவல் லுக் பிரியைகள் எனில் சாதாரண சல்வார் மெட்டீரியலைக்கூட பலாசோ பேன்ட்டாக வடிவமைத்துக்கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் பலாசோ பேன்ட்டை லாங் டாப்ஸுடன் மேட்ச் செய்து அணியலாம். பலாசோ பேன்ட்டை ஸ்லிட் டாப்ஸுடன் தான் மேட்ச் செய்ய வேண்டும் என்றில்லை. லாங், ஓப்பன்லெஸ் டாப்ஸுடனும் மேட்ச் செய்யலாம். வித்தியாசமான லுக் கிடைக்கும்.

பல்லேலக்கா பல்லேலக்கா பலாசோ! - இது பேண்டெமிக் சீஸன் ஃபேஷன்

இண்டோ வெஸ்டர்ன்

பலாசோ பேன்ட்டுடன் புடவையின் மடிப்பு போன்ற பகுதியை வடிவமைத்து இணைத்து அணியலாம். இயல்பான குர்தியுடன் பலாசோ பேன்ட்டை மேட்ச் செய்து, பலாசோவின் நிறத்தில் ஃப்ரீ ஷார்ட் ஓவர் லே ஒன்றை மேட்ச் செய்து அணியலாம். புரொகேட் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட பலாசோ பேன்ட்டுக்கு சிம்பிளான காட்டன் டாப்பை மேட்ச் செய்து இண்டோ வெஸ்டர்ன் லுக்கில் கலக்கலாம்.

பல்லேலக்கா பல்லேலக்கா பலாசோ! - இது பேண்டெமிக் சீஸன் ஃபேஷன்

எத்னிக் லுக்

ரா சில்க் அல்லது சில்க் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட பலாசோ பேன்ட்டை அதற்கு கான்ட்ராஸ்ட்டான லாங் டாப்ஸுடன் மிக்ஸ் மேட்ச் செய்யலாம். துப்பட்டாவை வழக்கம்போல் அணியாமல் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ஃப் போன்றோ அல்லது சைடு பெல்ட்டில் இணைத்தோ அணிந்தால் அசத்தலாக இருக்கும். எத்னிக் லுக்கில் பேஸ்டல் நிறங்களைத் தேர்வு செய்தால் இன்னும் அழகாக இருக்கும். பலாசோவில் ரஃபில் வைத்தோ, எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்தோ அணியலாம்.

பல்லேலக்கா பல்லேலக்கா பலாசோ! - இது பேண்டெமிக் சீஸன் ஃபேஷன்

டிரெண்டி லுக்

பலாசோ மெட்டீரியலிலேயே ஓவர் லே ஒன்றை வடிவமைத்து அதற்கு கான்ட்ராஸ்ட்டான கிராப் டாப்புடன் மேட்ச் செய்து அணிந்தால் வேற லெவலில் இருப்பீர்கள். கிராப் டாப்ஸுடன் லேயர் பலாசோவை மேட்ச் செய்து அணியலாம். லாங் ஸ்லிட் டாப்ஸுடன் பலாசோவை மேட்ச் செய்து அணியலாம். ஃப்ளேர்டு பலாசோவை, குர்தியுடன் மேட்ச் செய்து அணியும்போது டிரெண்டியாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்லேலக்கா பல்லேலக்கா பலாசோ! - இது பேண்டெமிக் சீஸன் ஃபேஷன்

புரொஃபஷனல் லுக்

அலுவலகங்களுக்குச் செல்ல ஸ்ட்ரெயிட் கட் பலாசோ சரியான சாய்ஸ். நேர்க்கோடுகள் கொண்ட டாப் அல்லது பலாசோ நீட் லுக் கொடுக்கும். ஸ்ட்ரெயிட் கட் பலாசோ, அதே மெட்டீரியலில் ப்ளேஸர், ஷார்ட் டாப் என மிக்ஸ் மேட்ச் செய்தால் புரொஃபஷனல் லுக் பக்காவாக இருக்கும்.

பல்லேலக்கா பல்லேலக்கா பலாசோ! - இது பேண்டெமிக் சீஸன் ஃபேஷன்

யாருக்கு எது பெஸ்ட்?

டைப்பகுதி பெரிதாக இருக்கும் பெண்கள் ஷிஃபான் அல்லது ஜார்ஜெட் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட பலாசோக்களைத் தேர்வு செய்யலாம். நீங்கள் அணியும் டாப்ஸ் ஜிக்- ஜாக் வடிவிலோ குறுக்குக் கோடுகள் கொண்டதாகவோ இருந்தால் இடைப்பகுதி அகலமாக இருப்பது தெரியாது.

தோள்பட்டை அகன்று, இடைப்பகுதி சற்று குறுகி காணப்படும் பெண்கள் ஸ்ட்ரெயிட் கட் பலாசோவைத் தேர்வு செய்யலாம். காட்டன் அல்லது சில்க் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட பலாசோக்கள் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

இடைப்பகுதி குறுகலான பெண்கள் ஸ்லிட் டாப்ஸுடன் லேயர்டு பலாசோவை மேட்ச் செய்யலாம்.

டிப்ஸ்:

 டாப்ஸ் சிம்பிளாக இருந்தால்தான் பலாசோ பேன்ட் தனித்துவமாகத் தெரியும்.

 உயரம் குறைவான பெண்கள் லாங் டாப்ஸுடன் பலாசோவை மேட்ச் செய்வதைக் கூடியவரை தவிர்க்கவும்.

 உயரமானவர்கள் பலாசோ பேன்ட் அணியும்போது ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு