Published:Updated:

பட்ஜெட்டுக்குள் பாரம்பர்ய டிசைன்! - டிரெடிஷனை டிரெண்ட் ஆக்கும் டிசைனர்

பாரம்பர்ய டிசைன்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய டிசைன்

பாவாடை - தாவணி நம்ம பாரம்பர்ய உடைங்கிறதால மெட்டீரியல்களை நெசவாளர்கள்கிட்ட இருந்து நேரடியா வாங்குறேன்

பட்ஜெட்டுக்குள் பாரம்பர்ய டிசைன்! - டிரெடிஷனை டிரெண்ட் ஆக்கும் டிசைனர்

பாவாடை - தாவணி நம்ம பாரம்பர்ய உடைங்கிறதால மெட்டீரியல்களை நெசவாளர்கள்கிட்ட இருந்து நேரடியா வாங்குறேன்

Published:Updated:
பாரம்பர்ய டிசைன்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய டிசைன்
பிரியா ரீகன்
பிரியா ரீகன்

பொட்டிக் என்றாலே மேல்தட்டு மக்களுக் கானது, நாகரிக உடைகளுக்கானது என்றொரு பொதுக்கருத்து பலருக்கும் உண்டு. இந்தக் கருத்தை உடைக்கும் விதமாக நடுத்த வர்க்க மக்களின் பட்ஜெட்டில் பாவாடை, தாவணி போன்ற பாரம்பர்ய ஆடைகளை டிசைன் செய்து டிரெண்ட் செட்டர் ஆகியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த டிசைனர் பிரியா ரீகன்.

“எனக்கு சொந்த ஊர் பெரம்பலூர். டிசைனிங் துறைக்கு வந்ததும், நான் டிசைன் பண்ற ஆடைகள், எளிய மக்கள் தொடங்கி எல்லாருக்கு மான தேவைகளையும் பூர்த்தி செய் யணுங்கிற நோக்கத்துல பட்ஜெட் ஃபிரெண்ட் லியா பண்ண ஆரம்பிச்சேன். மெஹந்தி ஃபங்ஷன் தொடங்கி, ரிசப்ஷன்வரை மணப் பெண்களோட சாய்ஸ் லெஹெங்கா, கிராப் டாப் ஸ்கர்ட், கவுன்... இப்படி மாறிப்போச்சு. ஒரு டிசைனரா டிரெண்டை ஃபாலோ பண்ணா தான் இந்தத் துறையில நான் சக்சஸ் பண்ண முடியும். ஆனா, கண்ணுக்கு முன்னாடி பாரம்பர்யம் அழியறது குற்ற உணர்வைக் கொடுத்துச்சு.

பட்ஜெட்டுக்குள் பாரம்பர்ய டிசைன்! - டிரெடிஷனை டிரெண்ட் ஆக்கும் டிசைனர்
பட்ஜெட்டுக்குள் பாரம்பர்ய டிசைன்! - டிரெடிஷனை டிரெண்ட் ஆக்கும் டிசைனர்
பட்ஜெட்டுக்குள் பாரம்பர்ய டிசைன்! - டிரெடிஷனை டிரெண்ட் ஆக்கும் டிசைனர்

அதனால பாவாடை தாவணியை என் கான்செப்ட்டா எடுத்தேன். அதை டிரெண்டுக்கு ஏத்த டிரஸ்ஸா மாத்த நினைச்சேன். வித்தியாச மான கலர் காம்போவுல பாவாடை- தாவணி செட்களை டிசைன் பண்ணேன். சீரியல் நடிகை சைத்ராவை பாவாடை - தாவணியில போட்டோ ஷூட் பண்ணி அந்தப் புகைப் படங்களை இன்ஸ்டாகிராம்ல போட்டேன். பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைச்சதால அடுத்தடுத்து ஸ்ரேயா, பாவ்னி, அர்ச்சனா, ஆயிஷானு சீரியல் நடிகைகள் பலரும் போட்டோ ஷூட்டுக்கு முன்வந்தாங்க.

பாவாடை - தாவணி நம்ம பாரம்பர்ய உடைங்கிறதால மெட்டீரியல்களை நெச வாளர்கள்கிட்ட இருந்து நேரடியா வாங்குறேன். பார்டர் தொடங்கி, குஞ்சம் வரை ஒவ்வொரு செட்டுலயும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும்” என்ற பிரியா, பிரபலங்களுடனான அனுபவங் களையும் பகிர்ந்துகொண்டார்.

‘`சீரியல் நட்சத்திரங்கள் ஸ்ரேயா - சித்தார்த் ஜோடிக்கு சமீபத்துலதான் கல்யாணம் முடிஞ்சது. ஸ்ரேயா கர்நாடகாவைச் சேர்ந்த வங்க. சித்தார்த் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். கணவர் வீட்டுப் பாரம்பர்யத் தைப் பின்பற்றணும்னு ஸ்ரேயா அவங்க மெஹந்தி ஃபங்ஷனுக்கு நான் டிசைன் பண்ண பாவாடை - தாவணி தான் உடுத்தினாங்க. நடிகை விஜி சந்திரசேகரின் மூத்த மகள் டாக்டரா இருக்காங்க. மீடியா வெளிச்சத்தை விரும்பாத அவங்ககிட்ட நான் டிசைன் பண்ண பாவாடை - தாவணியை ஒரு முறை ட்ரை பண்ணச் சொன்னேன். உடுத்திப் பார்த்துட்டு ரொம்ப ஹேப்பியா ஆகிட்டாங்க. அவங்களைவெச்சு போட்டோ ஷூட் பண்ணோம். இந்த மாதிரியான நெகிழ்ச்சியான அனுபவங்கள் தான் பாரம்பர்யத்தை விட்டுக்கொடுக்கக்கூடாதுங் கிற உத்வேகத்தைக் கொடுக்குது...” அக்கறை யாகச் சொல்கிறார் ப்ரியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism