Published:Updated:

பூவே பூச்சூடவா... கலக்குது கஜ்ரா ஸ்டைல்

விதவிதமான பூக்களால் கூந்தலை அலங்கரித்துக்கொள்வதே கஜ்ரா ஸ்டைல்

பிரீமியம் ஸ்டோரி
இந்தத் தலைமுறை பெண்கள் பெரும்பாலும் பூ வைக்க விரும்புவதில்லை... அதை மாற்றும் வகையில் டிரெண்டாகி வருகிறது கஜ்ரா ஹேர் ஸ்டைல். அதாவது, விதவிதமான பூக்களால் கூந்தலை அலங்காரம் செய்துகொள்வதுதான் `கஜ்ரா'. எந்த ஆடைக்கு, எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான பூ அலங்காரம் செய்துகொள்ளலாம்... டிப்ஸ் தருகிறார் ஹேர் ஸ்டைலிஸ்ட் துர்கா.
  துர்கா
துர்கா

மல்லிகை, முல்லை, ரோஜா என்று நம் பாரம்பர்யமான பூக்களைத் தாண்டி சால்வியா, ஆர்கிட், ஆஸ்டர், டேலியா, கார்னேஷன், டயான்டஸ் என விதவிதமான பூக்களால் கூந்தலை அலங்கரித்துக்கொள்வதை `கஜ்ரா ஸ்டைல்' என்கிறோம்.

டிரெடிஷனல் லுக்

டிரெடிஷனல் லுக்
டிரெடிஷனல் லுக்

திருமணம், வீட்டு விசேஷங்கள் போன்றவற்றுக்கு கொண்டை இட்டு பூ வைத்தால் ஹோம்லி லுக் கிடைக்கும். எனவே, திருமண நிகழ்ச்சிகளுக்கு பன் ஹேர்ஸ்டைல் செய்துகொள்வது பெஸ்ட் சாய்ஸ். இதில் ஹை பன், லோ பன், மெஸ்ஸி பன், டெக்‌ஸ்ச்சர்டு பன் என நிறைய இருக்கின்றன. பட்டுப்புடவை அல்லது காட்டன் புடவைகளுக்கு எல்லா பன் ஸ்டைலும் பொருத்தமாக இருக்கும். டிசைனர் புடவைக்கு மெஸ்ஸி பன் ஸ்டைலைத் தேர்வு செய்யுங்கள்.

முழுவதுமாக டிரெடிஷனல் லுக் வேண்டும் என்றால் ஹை பன் இட்டு, கொண்டை முழுவதும் இடைவெளி இல்லாமல் மல்லிகைப்பூவை சுற்றிக் கொள்ளலாம். அல்லது கொண்டையில் ஒரு சரம் மட்டும் சுற்றிக்கொள்ளலாம். நடுவில் சின்னச் சின்ன ரோஜா இதழ்களால் அலங்கரித்தால் சூப்பராக இருக்கும்.

டிரெடிஷனல் லுக்
டிரெடிஷனல் லுக்

லோ பன் ஹேர் ஸ்டைலில் கொண்டைக்கு மேலே ரோஜாவில் செய்த வட்ட வடிவ `வேணி'யால் அலங்கரித்துக் கொண்டையின் நடுவில் புடவைக்கு மேட்சிங்காக ஒரு வில்லை வைத்துக்கொள்ளலாம். பன் ஹேர் ஸ்டைல் வேண்டாம். ஆனால், டிரெடிஷனல் லுக் வேண்டும் என்றால், தலையின் முன் பகுதியில் ஸ்ட்ரைக்ஸ் போன்று ஹேர் ஸ்டைல் செய்து, கூந்தலை பின்னல் இட்டு வழக்கம் போல் மல்லிகைப்பூ வைத்தாலே அழகாக இருக்கும். கொஞ்சம் வித்தியாசமான லுக் வேண்டும் என்றால் முன் பகுதியில் ப்ரெய்டு (Braid) ஸ்டைலிங் செய்து கூந்தலை ஃபிஷ் டெயில் போன்று பின்னல் இட்டு, பின்னல்களில் இடைவெளிவிட்டு ஆர்கிட் பூ வைத்தால் அசத்தலாக இருக்கும்.

வட்டமான முகம் கொண்டவர்கள், முன் பகுதியில் வாட்டர் ஃபால் ஹேர் ஸ்டைல் செய்து, பின்பக்கக் கூந்தலை கர்லிங் செய்து ஜிப்ஸி பூக்கள் வைத்துக்கொள்ளலாம்.

டிரெண்டி லுக்

ரிசப்ஷன் மற்றும் மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் டிசைனர் புடவைகள் அல்லது லெஹெங்கா, சராரா கிராப் டாப்-ஸ்கர்ட் தான் பலரின் சாய்ஸாக இருக்கும். இந்த ஆடை களுக்கு மெஸ்ஸி பன் இட்டு கொண்டையின் வலது அல்லது இடதுபுறத்தில் சின்னதாக ஒரு ரோஜா வைத்துக்கொண்டால் செம க்யூட்.

டிரெண்டி லுக்
டிரெண்டி லுக்

பூவைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், டிரெண்டியாகவும் தெரிய வேண்டும் என் பவர்கள் முன்புறம் மட்டும் டிவிஸ்டடு ஹேர் ஸ்டைல் செய்து பின்புறம் ஃப்ரீ ஹேர் ஸ்டைல் செய்துகொள்ளலாம்.

டிரெண்டி லுக்
டிரெண்டி லுக்

டிசைனர் புடவை அணியும்போது ஃபிஷ் ப்ரெய்டு ஹேர் ஸ்டைல் செய்து, பின்னலின் மீது டெய்ஸி, டேலியா போன்ற பூக்களால் அலங்காரம் செய்துகொள்ளலாம். கிராண்டான சல்வார் அல்லது அனார்கலி அணிந்தால் தலையின் முன்பகுதியில் மட்டும் ஹேர் ஸ்டைல் செய்து பின்புறம் ஃப்ரீஹேர் விட்டுக் கொள்ளலாம் அல்லது டிவிஸ்டடு ப்ரெய்டு பின்னல்கள் இட்டுக்கொள்ளலாம்.

மணப்பெண் லுக்

மணப்பெண்களுக்கு ரோஜா, மல்லிகைப்பூவால் செய்த வட்ட வடிவ `வேணி'யைக் கூந்தலின் நடுப்பகுதியில் அடுக்கடுக் காகச் சுற்றி, பின்னல்களில் நந்தியாவட்டை பூவால் தயாரிக்கப்படும் நெட்டடு ஜடையால் அலங்காரம் செய்யலாம். மெஹெந்தி நிகழ்ச்சிக்கு பூக்களால் செய்யப்படும் நெட்டடு துப்பட்டா அணிவது இப்போது டிரெண்ட்.

மணப்பெண் லுக்
மணப்பெண் லுக்

கலர் கலராக வேணி வைக்கப் பிடிக்காதவர்கள் டிவிஸ்டடு ஹேர் ஸ்டைல் செய்து அதன் நடுப்பகுதி தொடங்கி பின்னல் முழுவதும் மல்லிகைப் பூக்களைச் சுற்றிக்கொள்ளலாம். நார்த் இந்தியன் லுக் விரும்பும் பெண்கள் பபுள் பன் இட்டு உடைக்கு மேட்ச்சான நிறத்தில் ரோஜாப்பூக்களை பயன்படுத்தி அலங்காரம் செய்துகொள்ளலாம்.

டிப்ஸ்

  • ஹேர் ஸ்டைல் முழுவதும் முடிந்ததும் பூக்களால் ஜடையை அலங்கரிப்பதற்கு முன் ஹேர் ஸ்பிரே பயன்படுத்தி கூந்தலை செட் செய்யவும்.

  • உடையின் நிறத்துக்கேற்ற பூக்களை `கஜ்ரா'வில் சேர்த்து டிசைன் செய்தால் அழகாக இருக்கும்.

  • உங்களின் முகவெட்டுக்கு என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல் பொருந்தும் என்பதை ஹேர் ஸ்டைலிஸ்டிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப கஜ்ரா வடிவமைக்க ஆர்டர் கொடுக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு