Published:Updated:

த்ரிஷாவும் நீயே... சமந்தாவும் நீயே... டிரெண்டாகும் ரீகிரியேஷன் மேக்ஓவர் மேஜிக்!

மேக்ஓவர் மேஜிக்
பிரீமியம் ஸ்டோரி
மேக்ஓவர் மேஜிக்

இது புதுசு

த்ரிஷாவும் நீயே... சமந்தாவும் நீயே... டிரெண்டாகும் ரீகிரியேஷன் மேக்ஓவர் மேஜிக்!

இது புதுசு

Published:Updated:
மேக்ஓவர் மேஜிக்
பிரீமியம் ஸ்டோரி
மேக்ஓவர் மேஜிக்

மீபத்தில் நடிகைகளைப்போலவே மேக் ஓவர் செய்து கொள்ளும் ரீகிரியேஷன் டிரெண்ட் சமூக வலைதளங்களில் வைரலானது ஜெயலலிதா தொடங்கி, நயன்தாரா, த்ரிஷா, சமந்தா என நடிகைகளின் உருவங்களில் கெத்து காட்டினார்கள் பெண்கள். ‘அட, நம்மகூட நயன்தாரா போல ஆக முடியுமா’ எனும் உங்களின் மைணடு வாய்ஸ் கேட்கிறது. யெஸ்... ரீகிரியேஷன் மேக்கப் மேஜிக்கில் அது சாத்தியமே... சமூகவலைதளங்களில் லைக்ஸ் அள்ளிய ரீகிரியேஷன் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சிலரிடம் பேசினோம்.

த்ரிஷாவும் நீயே... சமந்தாவும் நீயே... டிரெண்டாகும் ரீகிரியேஷன் மேக்ஓவர் மேஜிக்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
த்ரிஷாவும் நீயே... சமந்தாவும் நீயே... டிரெண்டாகும் ரீகிரியேஷன் மேக்ஓவர் மேஜிக்!

ஒலிவியா - சென்னை

“ஹெச்.டி மேக்கப், வாட்டர் ப்ரூஃப் மேக்கப்னு அப்பப்ப நிறைய புது கான்செப்ட் டிரெண்ட் ஆகிட்டே இருக்கும். அந்த வகையில் .இப்போ ரீகிரியேஷன் மேக்ஓவர் டிரெண்டிங்கில் இருக்கு. இதில் மேக்கப்பின் மூலம் ஒருத்தரை அப்படியே ரீகிரியேட் பண்ணுவது, தோற்றத்தின் மூலம் ஆடை, ஆபரணங்கள் வைத்து ரீகிரியேட் பண்ணுவதுனு ரெண்டு வகை இருக்கு. நான் நடிகை நயன்தாராவின் முழுத் தோற்றத்தையும் இன்னொரு பெண்ணுக்கு ரீகிரியேட் பண்ண நினைச்சேன். நயன்தாராவின் முகவெட்டு தனித்துவமானது. அதனால் அதே அளவு ஸ்கின் டெப்த் உள்ள மாடலை ரீகிரியேஷனுக்காக தேர்வு செய்தோம். அந்த மாடலுக்கு நயன்தாராவின் புருவத்தைக் கொண்டுவர முடியலை, அதனால் செயற்கையான புருவங்கள் வெச்சோம். நயன்தாரா படத்தில் பயன்படுத்தியிருந்த அதே நகைகளை அவருக்கு ஸ்பான்ஸர் செய்த கடைகளிலிருந்தே வாங்கினோம். புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதும் நிறைய பேர் பாராட்டினாங்க. இப்போ அடுத்த ரீகிரியேஷனுக்கான திட்டங்களில் இருக்கோம்”.

த்ரிஷாவும் நீயே... சமந்தாவும் நீயே... டிரெண்டாகும் ரீகிரியேஷன் மேக்ஓவர் மேஜிக்!

ஜூடியத் - சென்னை

“சிம்பிளாக மேக்அப் செய்து கொள்வது எப்படினு என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை பதிவிட்டேன். அதன் பிறகு ரீகிரியேஷன் மேக்கப் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட ஆரம்பிச்சேன். நமக்கு நாமே ஒரு நடிகைபோல் எப்படி ரீகிரியேட் பண்ணிக்க முடியும்ங்கிறதுதான் கான்செப்ட். இதுவரை நயன்தாரா, சமந்தா, அமலாபால், த்ரிஷா போன்றவர்களை ரீகிரியேட் பண்ணிருக்கேன். ஒவ்வொரு வீடியோவுக்கும் நடிகைகள் போட்டிருக்கும் ஆடைகள் தொடங்கி நகைகள்வரை தேடித்தேடி வாங்க நிறைய மெனக்கெடுறேன். சமந்தாவை ரீகிரியேஷன் செய்யும்போது அவர் கட்டியிருந்ததுபோல புடவை கிடைக்கவே இல்லை. வேறவழியில்லாம அதே நிற துணிகளை ஒன்றா சேர்த்து நானே புடவை ரெடி செய்தேன். அடுத்து யாருடைய லுக் வேணும்னு கமென்ட் பாக்ஸில் ரசிகர்களே கேட்க ஆரம்பிச்சாங்க. அதில் என்னுடைய முக வடிவமைப்போடு பொருந்தும் செலிபிரிட்டிகளை தேர்வு செய்து ரீகிரியேட் பண்ணிட்டு இருக்கேன்.”

த்ரிஷாவும் நீயே... சமந்தாவும் நீயே... டிரெண்டாகும் ரீகிரியேஷன் மேக்ஓவர் மேஜிக்!
த்ரிஷாவும் நீயே... சமந்தாவும் நீயே... டிரெண்டாகும் ரீகிரியேஷன் மேக்ஓவர் மேஜிக்!

கண்ணன் ராஜமாணிக்கம்- மலேசியா

``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மலேசியாவா இருந்தாலும், பூர்வீகம் மதுரை. அதனால தமிழ்ப் படங்கள் நிறைய பார்ப்பேன். அந்தக் கால தமிழ் கதாநாயகிகளின் ஒப்பனை என்னை அதிகமா கவர்ந்தது. மலேசியாவுல ஒப்பனை கண்காட்சிக்கு ஏற்பாடு பண்ணினேன். அதுல சரோஜாதேவி, சாவித்ரி போன்ற அந்தக் கால கதாநாயகிகளோட காஸ்டியூம் எல்லாம் ரெடி பண்ணி, அவங்களை மாதிரியே சில பெண்களுக்கு மேக்கப் பண்ணினேன். அதுலேருந்து என் கவனம் முழுக்க ரீகிரியேஷன் மேக்கப் பக்கம் திரும்பிடுச்சு. நயன்தாரா, த்ரிஷா, ஷ்ரேயா, ஐஸ்வர்யா ராய், ஜெயலலிதா அம்மா இவங்களோட முக ஜாடைகளை எல்லாம் ரீகிரியேஷன் மூலமா மலேசியாவில் உள்ள சில பெண்களுக்கு கொண்டுவந்தேன். இந்தப் புகைப்படங்களைப் பார்த்துட்டு செலிபிரிட்டீஸ் உட்பட நிறைய பேர் பாராட்டினாங்க.அடுத்தடுத்த முயற்சிகள் தொடர்ந்திட்டிருக்கு”.