Published:Updated:

பூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்!

பூக்களால் செய்த பசு - கன்று மாடல்...
பிரீமியம் ஸ்டோரி
பூக்களால் செய்த பசு - கன்று மாடல்...

திருமணங்களில் மேடை அலங்காரம் இன்று பரவலாக கவனம் பெறுகிறது. அந்த பிசினஸில் தன் க்ரியேட்டிவ் கான்செப்ட்டுகளால் ‘வாவ்’ சொல்லவைக்கிறார், தனுஷ்யா.

பூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்!

திருமணங்களில் மேடை அலங்காரம் இன்று பரவலாக கவனம் பெறுகிறது. அந்த பிசினஸில் தன் க்ரியேட்டிவ் கான்செப்ட்டுகளால் ‘வாவ்’ சொல்லவைக்கிறார், தனுஷ்யா.

Published:Updated:
பூக்களால் செய்த பசு - கன்று மாடல்...
பிரீமியம் ஸ்டோரி
பூக்களால் செய்த பசு - கன்று மாடல்...
பூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்!

‘`என் சொந்த ஊர் திருச்சி. பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை. இன்ஜினீயரிங் முடிச்சுட்டு ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்திட்டிருந்தேன். எனக்கு டிசைனிங்கில் சின்ன வயசிலிருந்தே ஆர்வம் உண்டு. ஆனாலும் அதில் பெருசா கவனம் செலுத்தலை. என் திருமணத்துக்கு அப்புறம் எங்கப்பா தவறிட்டாங்க. அந்த இழப்பிலிருந்து என்னால மீண்டு வரவே முடியலை. ரொம்ப மன அழுத்தம் ஏற்பட்டுச்சு. அப்போதான் என் கணவரும் குடும்பத்தாரும், ‘உனக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு விஷயத்தை, வேலையைச் செய்... மன அழுத்தம் குறையும்’னு சொன்னாங்க.

பூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்!

நான் வேலைபார்த்திட்டிருந்த ஐ.டி நிறுவனத்தின் கிளை கோயம்புத்தூரில் இருந்தது. இடம் மாறினால் நல்லாயிருக்கும்னு தோணினதால, கோயம்புத்தூருக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் யோசிச்சுப் பார்த்தப்ப, என் வாழ்க்கையில என்னுடைய கல்யாணத்தின்போதான ஏழு நாள்கள்தான் எங்கப்பா என்கூடவே இருந்தாங்க. அப்பாவும் நானும் திருமணத்துக்கான வேலைகளைப் பற்றி பேசிய மேடை, ஆல்பம்னு கல்யாணத்தில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் இருக்கலாம்னு நாங்க ரெண்டு பேரும் கலந்தாலோசிச்சுகிட்ட விஷயங்கள்னு அந்த நினைவுகள் எல்லாம் மேலெழுந்தப்பதான், ஒரு விஷயம் க்ளிக் ஆச்சு. வெடிங் பிளானிங் தொடர்பா நம் கரியரை அமைச்சுக்கலாம்னு தோணுச்சு. அதில், ஸ்டேஜ் மற்றும் ஹால் டெகரேஷனை டிக் பண்ணினேன். பிசினஸ் பண்றதுன்னு முடிவெடுத்துட்டாலும், உள்ளுக்குள்ள கொஞ்சம் பதட்டமாதான் இருந்துச்சு. என்னுடைய தோழி நித்யா விஜய், ‘ உன்னால முடியும்’னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினாங்க. டெகரேஷனுக்கு பூக்கள் சப்ளை செய்யும் தொழிலில் இருக்கும் அவர் இப்போதுவரை என்னுடைய அனைத்து புரொஜெக்ட்கும் பூக்கள் சப்ளை செய்து பக்கபலமா இருக்காங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டேஜ் டெகரேஷன் பிசினஸுக்குக் கொஞ்சம் கொஞ்சமா என்னை நானே புரொஃபஷனலா தயார்படுத்திக்கிட்டேன். முதல் ஆர்டரா, கோயம்புத்தூரில் என்னுடைய ஃப்ரெண்ட் ஒருத்தவங்க, அவங்க குடும்ப நிகழ்ச்சிக்கு டெகரேட் பண்ற வாய்ப்பை எனக்குக் கொடுத்தாங்க. ‘என்ன டிசைனிங் தோணுதோ அதைப் பண்ணு. எப்படியிருந்தாலும் ஓகே’ன்னு சுதந்திரமும் கொடுத்தாங்க. அந்த டிசைனிங் செம ஹிட். நிறைய பேர் பாராட்டினாங்க. அதுக்கப்புறம்தான் டிசைனிங்கில் முழுமூச்சா கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ‘Dream Day Designers’ என்ற பெயரில் எங்களுடைய கம்பெனியை ஆரம்பிச்சேன்.

பூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்!

நாங்க ஒரு கல்யாணத்துக்குப் பண்ணின டிசைனிங்கை இதுவரை இன்னொரு கல்யாணத்தில் ரிப்பீட் செஞ்சதில்லை. கஸ்டமர்ஸ் என்னவெல்லாம் கேட்குறாங்களோ அதோடு எங்களோட க்ரியேட்டிவிட்டியையும் கொட்டி ஒவ்வொரு ஆர்டரையும் ஜொலிக்க வைக்கிறோம். எங்க கம்பெனியில் இப்போ என்னுடன் சேர்ந்து 20 பேர் வேலைபார்க்குறாங்க என்பதால, ஒரே நாளில் ரெண்டு, மூணு வெடிங்க்குக்கூட எங்களால டிசைனிங் பண்ண முடியும். கஸ்டமர்ஸ் எவ்வளவு பட்ஜெட் சொல்றாங்களோ அதுக்குள்ள ஒரு டிசைனை எவ்வளவு பெஸ்ட்டா கொடுக்க முடியும்னு யோசிச்சு பண்ணுவோம். குறைந்தபட்சம் 50,000 ரூபாயிலிருந்து எங்க கட்டணம் ஆரம்பிக்குது’’ என்றவர், மறக்க முடியாத அனுபவங்கள் பற்றிப் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`ஒரு தெலுங்குத் திருமணத்துக்கான டிசைனிங்கை, தாய்லாந்திலிருந்து சிலரை வரவழைச்சு பண்ணினோம். அந்த டெகரேஷன் மூலமா எங்களைப் பற்றி தாய்லாந்தில் சிலருக்குத் தெரியவர, அங்கே நடந்த ஒரு கல்யாணத்துக்கு எங்களை டெகரேட் பண்ணக் கூப்பிட்டாங்க. எங்களோட வேலை அங்கே பலருக்கும் பிடிச்சிருந்தது. அது ரொம்பவே புதுமையான, பெருமையான அனுபவம் எங்களுக்கு. அப்புறம், மதுரையில் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சி ஆர்டர். செம மழை, வெள்ளத்தால அங்கே போய்ச் சேர்றதுக்குள்ளேயே ஒருவழியாகிட்டோம். ஆனா, அந்த ஈவன்ட் என் கரியர்ல பெரிய ஏற்றத்தைக் கொடுத்துச்சு. காரணம், அந்த ஈவன்ட்டுக்கு நாங்க பூக்களாலேயே பண்ணியிருந்த, பசுமாடுகிட்ட கன்னுகுட்டி பால் குடிக்கிற மாதிரியான மாடல். அது செம வைரல் ஆச்சு. பூ கிடைக்காமல், தனியா ஒரு டெம்போவில் பூவை வரவெச்சுனு அதுக்காக நாங்க எடுத்த ரிஸ்க்குக்கும் மெனக்கெடலுக்கும் நல்ல பலன் கிடைச்சது.

பூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்!

இன்னொரு அனுபவம் இது. ஒரே மண்டபத்தில் காலையில் ஒரு ஈவன்ட் ஆர்டர், மாலையில் ஒரு ஈவன்ட் ஆர்டர்னு ரெண்டுமே எங்களுக்கு அமைஞ்சது. முதல் ஈவன்ட் முடிஞ்சு அடுத்த ஈவன்ட் ஆரம்பிக்க இரண்டு மணி நேரம்தான் அவகாசம் இருந்தது. அதுக்குள்ள மண்டபத்தின் லுக்கையே நாங்க மொத்தமா மாத்தியாகணும் என்ற சவாலை ரசிச்சு செய்தோம்.

பூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்!

ஏற்கெனவே சொன்னதுபோல, ஒவ்வொரு ஆர்டரிலும் கஸ்டமரின் விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்போம். திருச்சியில் ஒரு வெடிங் ஆர்டர். மணப்பெண்ணின் தந்தை ஆண்டாள் பக்தர் என்பதால, ஆண்டாள் திருக்கல்யாணம் மாதிரி டிசைனிங் இருக்கணும்னு கேட்டிருந்தாங்க. பேஸிக் டிசைனிங் முடிச்சுட்டு அவங்ககிட்ட காட்ட போயிருந்தப்போ, அவங்க எனக்கு திருப்பாவையை ப்ளே செய்து, அதுல என்னென்ன பொருள்கள் சொல்லியிருக்காங்களோ அதையெல்லாம் வெச்சு அலங்காரம் பண்ணணும்னு சொன்னாங்க. அதன்படி அலங்காரம் முழுக்க வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழை இலை, தென்னங்குருத்து, தாமரைப்பூன்னு பாரம்பர்ய தாவரங்கள் மற்றும் மலர்களைவெச்சு பண்ணியிருந்தோம்’’ என்று சொல்லும் தனுஷ்யா, தன் வெற்றியில் தன் குடும்பம் மற்றும் டீமின் பங்கு பெரிது என்கிறார்.

பூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்!

‘`இது ராத்திரி பகல் பார்க்காம வேலைசெய்ய வேண்டிய தொழில். எனவே, இதில் பெண்களுக்கு குடும்பத்தின் சப்போர்ட் மிகவும் அவசியம். என் கணவர், மாமியார்னு அந்த விஷயத்தில் எல்லோரும் எனக்குத் தூணா இருக்காங்க. என் அம்மா, நிறைய க்ரியேட்டிவ் ஐடியாக்கள் கொடுப்பாங்க. என் எண்ணத்தை எல்லாம் செயலாக்குற என்னுடைய டீமின் பங்களிப்பு என்னுடைய முக்கியமான பலம். இவங்க எல்லாரோட ஆதரவுடன்... தொடர்வோம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism