Published:Updated:

இது கதைகளைத் தேடும் கலை!

வெடிங் போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
வெடிங் போட்டோகிராபி

விபின் போட்டோகிராபியின் தனித்துவம் என்ன

இது கதைகளைத் தேடும் கலை!

விபின் போட்டோகிராபியின் தனித்துவம் என்ன

Published:Updated:
வெடிங் போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
வெடிங் போட்டோகிராபி

‘`வெடிங் போட்டோகிராபி என்பது தொழில் இல்லை. அது ஒரு கலை. ஒவ்வொரு திருமணத்திலும் கதைகளைத் தேடும் கலை’’ - கவிதையாகப் பேசுகிறார் கேமரா கவிஞர் விபின். 18 வயதிலிருந்தே திருமணப் புகைப்படங்களை எடுக்கத்தொடங்கியவர் விபின். 2008-ல் ‘விபின் போட்டோகிராபி’ என்ற புகைப்பட நிறுவனத்தைத் தொடங்கி 12 ஆண்டுகளில் 750-க்கும் மேற்பட்ட திருமணங்களின் சந்தோஷ தருணங்களை தன் கேமராவுக்குள் அடைத்திருக்கிறார். புகைப்படக்கலையில் கதைகளைத் தேடும் விபினிடம் பேசினோம்.

இது கதைகளைத் தேடும் கலை!

விபின் போட்டோகிராபியின் தனித்துவம் என்ன?

என்னுடைய டீமில் மொத்தம் 27 பேர் இருக்கிறார்கள். எங்களுடைய ஸ்பெஷாலிட்டியே கேண்டிட் மற்றும் போர்ட்ரெய்ட் புகைப்படங்கள்தான். நாங்கள் டிஜிட்டல் ஆர்டிஸ்ட் கிடையாது. போட்டோஷாப் எல்லாம் அதிகம் பயன்படுத்துவது இல்லை. திருமணத் தருணங்களின் எமோஷன்களைப் பிடித்துவைப்பதுதான் எங்கள் நோக்கம். உள்ளதை உள்ளபடியே அழகாக, இயற்கையாகக் காட்டுவதுதான் எங்களின் தனித்தன்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இது கதைகளைத் தேடும் கலை!

வெடிங் போட்டோகிராபி என்றவுடன் ஞாபகத்துக்கு வருவது பீச்சும் பார்க்கும் தாம்... வெடிங் போட்டோகிராபிக்கு போட்டோஷூட் இடம் முக்கியமா?

திருமணத்தைப் பொறுத்தவரை சின்ன திருமணம், பெரிய திருமணம், காஸ்ட்லியானது, பட்ஜெட் கல்யாணம்னு நிறைய வகைகள் இருக்கு. ஆனால், எங்கள் கவனம் முழுக்க அங்கு நடக்கும் பண்பாட்டுத் தருணங்களையும் கதைகளையும் அழகாக எடுத்துக்கொடுக்க வேண்டும் என்பதில்தான் இருக்கும். திருமணம் எப்படிப்பட்ட திருமணம் என்பது முக்கியம் இல்லை. புகைப்படங்களின் அழகு லக்ஸூரி வெடிங், பீச் வெடிங்கில்தான் கிடைக்கும் என்பதில்லை. எல்லா திருமணத்திலும் கதைகள் உண்டு.

இது கதைகளைத் தேடும் கலை!

தீம் வெடிங், டெஸ்ட்டினேஷன் வெடிங் போன்ற போட்டோகிராபி ஸ்டைல் பற்றிச் சொல்லுங்கள்... அதில் இருக்கும் சவால்கள் என்ன?

தீம் வெடிங்கைப் பொறுத்த வரை அது அந்த வெடிங் பிளானர்ஸ் கையில்தான் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட யோசனையை எடுத்து அதற்கேற்ப மேடை அலங்காரம், உடை, இடம் என எல்லாவற்றையும் தயார்படுத்துவார்கள். இதில் போட்டோகிராபரின் வேலை குறைவு. ஆனால், நேர்த்தியானது. அவர்களின் யோசனையை உணர்ந்து அந்தச் சூழலுக்கு ஏற்ப படங்கள் எடுக்க வேண்டும். பொதுவாக தீம் வெடிங் என்று வரும்போது ஈவென்ட் பிளானருக்கும், போட்டோ கிராபருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரொம்பவே முக்கியம். அதனால்தான் பிளானர்ஸ் எப்போதுமே அவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கும் கலைஞர்களோடு மட்டுமே வேலை செய்வார்கள். இப்போது நிறைய பேர் டெஸ்ட்டினேஷன் வெடிங்கில் ஆர்வம்காட்டுகிறார்கள். டெஸ்ட்டினேஷன் வெடிங்கைப் பொறுத்தவரை மனிதர்கள் மட்டுமல்லாமல் அந்த இடத்தின் அழகையும் சேர்த்து கேமராவில் பதிக்க வேண்டும்.

“திருமணத்துக்கு முன்பு மணமகனும், மணமகளும் சந்திக்கக் கூடாது என்று ரூல்ஸ் போட்ட காலம் எல்லாம் போய்விட்டது. இதற்கு முக்கியமானக் காரணம் சோஷியல் மீடியா.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது கதைகளைத் தேடும் கலை!

ஆணும்-பெண்ணும் திருமணத்துக்கு முன்பு சந்திக்கக் கூடாது என்று விதிமுறைகள் சொல்லும் இந்த சமூகத்தில் ஒரு பக்கம் பிரீ வெடிங் ஷூட் வளர்ந்து வருகிறதே எப்படி?

2013-ல் ஈரோட்டில் ஒரு ரிசப்ஷனில் மணமகளின் தோள்மீது மாப்பிள்ளை கைபோடுவது போல ஒரு படம் எடுக்கும்போது ஷூட்டை நிறுத்திவிட்டு எதுவாக இருந்தாலும் நாளை முகூர்த்தம் முடிந்த பிறகு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், இப்போது எல்லோருமே பிரீ வெடிங் ஷூட் கேட்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு மணமகனும் மணமகளும் சந்திக்கக் கூடாது என்று ரூல்ஸ் போட்ட காலம் எல்லாம் போய்விட்டது. இதற்கு முக்கியமான காரணம் சோஷியல் மீடியா. எல்லோரிடமும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இருக்கிறது. எல்லோருக்கும் தினமும் ஒரு போட்டோ அதில் போட வேண்டும், நிறைய லைக்ஸ், ஹார்ட்ஸ் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிரீ வெடிங் ஷூட்டின் வளர்ச்சிக்கு இதுதான் முக்கிய காரணம்.

இது கதைகளைத் தேடும் கலை!

பிரீ வெடிங் போட்டோ ஷூட்டில் சந்திக்கும் சவால்கள் என்ன?

அந்த போட்டோவைக் கடந்து நாங்கள் அழைத்துச் செல்பவர்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்வதுதான் முதல் சவால். திருமணம் செய்துகொள்ளப்போகும் இருவரும் எங்களை நம்பித்தான் வருகிறார்கள். அதனால் நாங்கள் ஷூட்டுக்கு அழைத்துச்செல்லும் இடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். சரியான அனுமதி பெற்றிருக்க வேண்டும் என முன்னேற்பாடுகள் நிறைய இருக்கின்றன. நம்மோடு வரும் ஜோடி மாடல் கிடையாது. அதனால் அவர்கள் போஸ் கொடுத்துப் பழகுவதற்கு நேரம் எடுக்கும். போட்டோகிராபர் என்பதைக் கடந்து நம்மை அவர்களுக்கு யார் என்றே தெரியாது. அப்படியிருக்க அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப படம் எடுப்பது நிறையவே சவாலான விஷயம். பிரீ வெடிங் போட்டோஷூட்டை முடிக்கும்போது அந்த மணமக்களுக்கும், போட்டோகிராபர்களுக்கும் ஒரு நல்ல நட்பு உருவாகிவிடும். அது திருமணத்தின்போது சிறப்பான படங்கள் எடுக்க உதவியாக இருக்கும்.

இது கதைகளைத் தேடும் கலை!

ஒரு திருமணத்தில் போட்டோகிராபருக்கான பட்ஜெட் எந்த அளவு முக்கியம்?

பட்ஜெட் என்பது ஒவ்வொரு திருமணத்தையும் பொறுத்தது. ஒரு வெடிங் போட்டோகிராபி என்பது ஒரு சில புகைப்படங்களில் மட்டுமே அடக்கிவிட முடியாது. பல வருஷங்கள் படம் எடுக்கிறவர்கள் பெரிய டீம் வைத்திருப்பவர்கள். நிறைய எக்யூப்மென்ட்களைப் பயன்படுத்துகிறவர்களிடம் சென்றால் பட்ஜெட் அதிகமாகவே இருக்கும். எங்களுடைய போட்டோ ஆல்பம் எல்லாம் இத்தாலியன் பிரின்ட் செய்து வாங்குவோம். அப்படியிருக்க அதற்கான செலவுகள் எல்லாம் அதிகம்தான். சில ஸ்டூடியோக்கள் 25 பேரை வைத்து ஒரே நேரத்தில் 10 திருமணங்களில் படம் எடுப்பார்கள். அதே அளவுக்கு ஆள்களை வைத்துக்கொண்டு இரண்டு திருமணங்கள் மட்டுமே எடுக்கிறவர்களும் இருக்கிறார்கள். பட்ஜெட்டில் தரமும் அடங்கியிருப்பதால் புகைப்படங்கள் எவ்வளவு தனித்துவமாக இருக்க வேண்டுமோ அதற்கு ஏற்ப நீங்கள் போட்டோகிராபரின் பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும்.

இது கதைகளைத் தேடும் கலை!

ஒரு பட்ஜெட் திருமணத்தில் எடுக்கும் புகைப் படத்துக்கும், வசதியான திருமண நிகழ்ச்சியில் எடுக்கும் படத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா?

நிச்சயம் கிடையாது. எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும் அங்கு காதல், அன்பு, மகிழ்ச்சி என எமோஷன்ஸ் எல்லாமே ஒன்றுதான். இவர்களின் திருமணத்தில் இருக்கும் காதல்தான் பெரியது என்று யாரும் சொல்ல முடியாது. பெரிய திருமணங்களில் அவர்கள் செய்திருக்கும் அலங்காரம், இடம் எனப் பார்க்கும்போது படம் கொஞ்சம் விமர்சையாக இருப்பதுபோல தெரியும். ஆனால், அதில் இருக்கும் கதை எங்கு எடுத்தாலும் அழகானதாக இருக்க வேண்டும். எமோஷன்களை எவ்வளவு அழகாக எடுக்க முடியுமோ அவ்வளவு அழகாகப் பிடித்துவைக்க வேண்டும். 14 பேர் மட்டுமே இருக்கும் கல்யாணத்தையும், பல நூறு பேர் வரும் கல்யாணத்தையும் படம் பிடித்திருக்கிறேன். எந்தப் படத்தைப் பார்த்தாலும் இரண்டுக்கும் ஒரே ஃபீலிங்தான். அதில் மாற்றமே இல்லை.

இது கதைகளைத் தேடும் கலை!

வெடிங் போட்டோகிராபி கமர்ஷியலான விஷயம் என்பதால் உங்களுடைய தனித்துவமான ஸ்டைலை விட்டுக்கொடுக்க வேண்டியது வருமா?

இல்லை. இது ஒரு கலை. அதைக் கலையாகப் பார்ப்பதால் மட்டும்தான் என்னால் சிறந்த புகைப்படங்களைக் கொடுக்க முடிகிறது. என் டீமை வைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் ஏழு திருமணங்கள் வரை படமெடுக்கலாம். ஆனால், நான் இரண்டு திருமணங்களைத் தாண்டி எடுப்பதில்லை. நீங்கள் எப்படி படம் எடுப்பீர்கள் என்பது உங்களிடம் வரும் வாடிக்கையாளருக்கு நன்றாகவே தெரியும். உங்களிடம் இருக்கும் திறமையைத் தேடித்தான் வருகிறார்கள். கமர்ஷியலான படங்கள் வேண்டும் என்பவர்கள் கமர்ஷியலாக எடுப்பவர்களைத் தேடித்தான் செல்வார்கள். அதனால் என்னுடைய தனித்துவத்தை மாற்றிக்கொள்ளத் தேவை ஏற்படவில்லை.

இது கதைகளைத் தேடும் கலை!

ஒரு தொழிலாக வெடிங் போட்டோகிராபி எப்படி?

இது ரொம்பவே நல்ல கரியர். தாராளமாக யார் வேண்டுமானாலும் திருமணத்தில் படம் எடுப்பதைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு முக்கியத் தேவை முதலில் நாம் ஒரு போட்டோகிராபராக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு நல்ல மென்ட்டார் கிடைக்க வேண்டும். ‘பணம் சம்பாதிக்கலாம். மற்ற வேலைகளைவிட இது ரொம்பவே சுலபமான வேலை’ என்றெல்லாம் நினைத்து வந்தால் மூன்று வருடங்களில் இந்தத் தொழிலை வெறுத்துவிடுவீர்கள். ஆர்வம் மிகவும் முக்கியம். ஒரு திறமையான வெடிங் போட்டோகிராபருடன் சேர்ந்து வேலை பார்த்து விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை என் அப்பா விஜயன் ஒரு வெடிங் போட்டோகிராபர். கோவையைச் சுற்றி ரொம்பவே பிரபலம். அவரைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கும் திருமணத்தில் படம் எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. சில வருடங்கள் அவரிடம் கற்றுக்கொண்ட பிறகுதான் தனியாகப் படம் எடுக்கவே தொடங்கினேன். என் அப்பா படம் எடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு இப்போது நான் படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பல தலைமுறைகளைக் கடந்தும் வெடிங் போட்டோகிராபிக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism