Published:Updated:

தேசிய நகைப் போட்டி: நாட்டியப் பெண் மோதிரம், மொட்டு க்ளிப்; கலக்கல் டிசைனில் அசத்திய விபி ஜுவல்லரி!

``கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, நேஷனல் ஜுவல்லரி அவார்டுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு நகைத் தயாரிப்பாளர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடத்திற்கான போட்டியில் மொத்தம் 1,500 நகைத் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்."

ஆல் இந்தியா ஜெம் அண்ட் ஜுவல்லரி டொமெஸ்டிக் கவுன்சில் ( All India Gem and Jewellery Domestic Council ) அமைப்பு நடத்திய தேசிய நகைகளுக்கான போட்டியில், நான்கு உட்பிரிவுகளின் கீழ் உம்மிடி பங்காரு ஜுவல்லரி பரிசினை வென்றுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அமரேந்திரன் உம்மிடியிடம் பேசினோம்.

விபிஜே ஜூவல்லரி
விபிஜே ஜூவல்லரி
R CHADRU
ஆதரவற்ற குழந்தைகளுக்கு புது உடைகள்; கடைக்கே அழைத்துச்சென்று வாங்கிக் கொடுத்த இளைஞர்கள்!

``கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, நேஷனல் ஜுவல்லரி அவார்டுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு நகைத் தயாரிப்பாளர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடத்திற்கான போட்டியில் மொத்தம் 1,500 நகைத் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் ஏழு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. `ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்', `கம்ப்யூட்டர் எய்டடு டிசைனிங்' , `பிரைடல் டிசைனிங்', `கைவினைக்கலை', `அக்ஸஸரீஸ் ஆஃப் தி இயர்' என உம்மிடி பங்காரு ஜுவல்லரி ஐந்து போட்டிகளில் கலந்து கொண்டோம்.

இதில் 8 நடுவர்கள் கலந்து கொண்டு, போட்டியாளர்கள் தயார் செய்திருக்கும் நகைகளை ஆய்வு செய்தார்கள். கைவினைக்கலை பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டிக்கு மட்டும் நான்கு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மற்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு தரம், டிசைனிங், மாடல் எனப் பல்வேறு பிரிவுகளில் முக்கியத்துவம் தரப்பட்டது. பிரைடல் பிரிவில் நடைபெற்ற போட்டிக்கு நாங்கள் `அன்னபக்ஷி' என்பதை கான்செப்ட்டாக எடுத்து ஆரம், நெக்பீஸ் தொடங்கி மணப்பெண்ணுக்கான மொத்த ஆபரணங்களையும் வடிவமைத்திருந்தோம். கம்ப்யூட்டர் எய்டடு டிசைனிங் பிரிவில் ஒரு பெண், பரதம் ஆடுவது போன்ற மோதிரம் வடிவமைக்கப்பட்டது. டிசைன் பிரிவில் பூ மொட்டு போன்ற க்ளிப் ஒன்றை வடிவமைத்தோம். ஸ்டூடன்ட் ஆப் தி இயர் பிரிவில், ஆமையின் உருவத்திலிருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்து ,நெக்பீஸ் ஒன்றை வடிவமைத்தோம். இது போன்ற தனித்துவமான கான்செப்ட்களை நாங்கள் தேர்வுசெய்ததுதான் எங்களின் முதல் வெற்றி.

இதற்கு முந்தைய வருடங்களில் நடைபெற்ற போட்டிகளில்கூட நாங்கள் கலந்து கொண்டோம். அப்போது அதிகபட்சமாக இரண்டு பிரிவுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தோம். இந்த ஆண்டு நான்கு பிரிவுகளின் கீழ் நாங்கள் பரிசு வென்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தென்னிந்திய நகைத் தயாரிப்பாளர்கள் அளவில் நான்கு உட்பிரிவுகளில் ஒரே நிறுவனம் வெல்வது இதுவே முதல்முறையாகும். எங்களை ஊக்கப்படுத்தும் மக்களுக்கும், நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு