Published:Updated:

How to: ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை பராமரிப்பது எப்படி? I How to take care of Aari work clothes?

ஆரி வேலைப்பாடு ஆடைகள்
News
ஆரி வேலைப்பாடு ஆடைகள்

ஷாம்பூ வாஷ் செய்ய, ஒரு வாளியில், உடைக்குத் தேவையான அளவு தண்ணீரை எடுத்து, அதில் மைல்டு ஷாம்பூ சிறிதளவு சேர்க்கவும். பின் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடையை பின்புறமாகத் திருப்பி, அதில் ஊறவிட்டு, கறை ஏதேனும் இருந்தால் அங்கு மட்டும் கைகளால் மென்மையாகத் தேய்த்து, அலசி எடுக்கவும்.

Published:Updated:

How to: ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை பராமரிப்பது எப்படி? I How to take care of Aari work clothes?

ஷாம்பூ வாஷ் செய்ய, ஒரு வாளியில், உடைக்குத் தேவையான அளவு தண்ணீரை எடுத்து, அதில் மைல்டு ஷாம்பூ சிறிதளவு சேர்க்கவும். பின் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடையை பின்புறமாகத் திருப்பி, அதில் ஊறவிட்டு, கறை ஏதேனும் இருந்தால் அங்கு மட்டும் கைகளால் மென்மையாகத் தேய்த்து, அலசி எடுக்கவும்.

ஆரி வேலைப்பாடு ஆடைகள்
News
ஆரி வேலைப்பாடு ஆடைகள்

ஆரி வேலைப்பாடுகள் கொண்ட உடைகளை விரும்புபவர்கள் பலர். விதவிதமான டிசைன்களில், பார்த்தவுடன் பிடித்துவிடும் வகையில் உருவாக்கப்படும் ஆரி வேலைப்பாடு ஆடைகளில், நிறங்கள் முதல் கற்கள், நூல்வரை நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும். இந்த வேலைப்பாடு களாலேயே ஆடை சற்றுக் கனம் ஏறிப்போகும். இவற்றை பராமரிப்பது சிலருக்கு கடினமாக இருக்கும்.

வேலைப்பாடு ஆடை
வேலைப்பாடு ஆடை

ஆரி வொர்க் செய்யப்பட்ட உடைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றி கூறுகிறார், திருச்சியைச் சேர்ந்த ஆரி வொர்க் பயிற்றுநரும், அழகுக் கலை நிபுணருமான திரிலோசினி.

* ஆரி வொர்க் செய்யப்பட்ட உடைகள் என்பது பல வருடங்களாகவே டிரெண்டிங்கில் இருக்கக்கூடியது என்றாலும், தற்போது பலராலும் விரும்பி அணியப்படுகிறது. ஆரி வொர்க்கில் பல வகை உண்டு. அதில் பெரும்பாலோனோரின் விருப்பம், மகம் ஒர்க், ஸ்டோன் ஒர்க், பாசி ஒர்க் போன்றவை.

* நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பதால் ஆரி வொர்க் ஆடைகளைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். அதில் முதன்மையானது, முடிந்த அளவுக்கு அழுக்கு, கறைகள் படாமல் பார்த்துக்கொள்வது. ஏனென்றால், மற்ற ஆடைகளைப்போல இவற்றை அழுந்தத் தேய்த்துத் துவைக்க, அலச முடியாது.

வேலைப்பாடு
வேலைப்பாடு

* ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடைகளைத் துவைக்காமல் இருப்பது நல்லது. உடுத்திய பின்னர் நிழலில் உலர்த்தி எடுத்து வைக்கலாம். கறைகள் இருக்கும் பட்சத்தில் ஷாம்பூ வாஷ், அதாவது ஷாம்பூ கலந்த நீரில் மூழ்கி எடுத்து அலசுவது நல்லது.

* ஷாம்பூ வாஷ் செய்ய, ஒரு வாளியில், உடைக்குத் தேவையான அளவு தண்ணீரை எடுத்து, அதில் மைல்டு ஷாம்பூ சிறிதளவு சேர்க்கவும். பின் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடையை பின்புறமாகத் திருப்பி, அதில் ஊறவிட்டு, கறை ஏதேனும் இருந்தால் அங்கு மட்டும் கைகளால் மென்மையாகத் தேய்த்து, அலசி எடுக்கவும்.

* அலசிய உடைகளை நேரடி வெயிலில் காய வைக்காமல், நிழலில் உலர வைத்து, மடித்து வைத்துக்கொள்ளலாம்.

* இதுபோன்ற உடைகளை இரும்பு பீரோவில் வைக்கும்போது, வேலைப்பாடுகளின் நிறம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, ஒரு காட்டன் துணியில் சுற்றியோ, இதுபோன்ற உடைகளை வைப்பதற்கென்றே கடைகளில் கிடைக்கும் காட்டன் பையில் வைத்தோ, பின்னர் பீரோவில் வைக்கலாம். இதன் மூலம் ஆடை நீண்ட நாள்கள் பொலிவு குறையாமல் இருக்கும்.

 திரிலோசினி, ஆரி வொர்க் பயிற்றுநர்
திரிலோசினி, ஆரி வொர்க் பயிற்றுநர்

* ஆரி வேலைப்பாடு உடைகளில் முக்கிய பிரச்னை, வியர்வை தான். குறிப்பாக, அக்குள் வியர்வையால் அந்தப் பகுதியில் உடை, மற்றும் வேலைப்பாடின் நிறம் மங்கிவிடும் (fade). எனவே, வியர்வையைத் தவிர்க்க அண்டர் ஆர்ம்ஸ் பேடு பயன்படுத்தலாம்.

* முக்கியமாக, வேலைப்பாட்டுடன் கூடிய உடைகளை அணிந்து சென்று வந்தபின் அவற்றை அப்படியே கழற்றி வைத்துவிடாமல், காற்றில் நன்றாக உலரவிட்ட பின்னர், அதன் வேலைப்பாடுகள் சேதம் ஆகாத வகையில் மடித்து வைக்கவும்; சுருட்டியோ, திணித்தோ வைக்கக் கூடாது.