ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பி.இ கோலம்... ஆண் கோலம்... ஐ.டி கோலம்!

கோலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலம்

நான் ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பார்க்குறேன். சின்ன வயசுல எங்க அம்மா கோலம் போடுறதைப் பார்த் துட்டே இருப்பேன். அம்மாகூட சேர்ந்து நானும் கோலம் போடுவேன்.

சமூக வலைதளங்களில் எத்தனையோ பேர் டிரெண்ட் ஆகிறார்கள். அந்த வகையில் நம் பாரம்பர்யங்களில் ஒன்றான கோலம் போட்டே டிரெண்டாகி இருக்கும் சிலரின் அனுபவத் தொகுப்பு இங்கே...

பி.இ கோலம்... ஆண் கோலம்... ஐ.டி கோலம்!

பி.இ படிச்சிட்டு கோலம் போடறதா..? - வர்தனி, புதுச்சேரி

“நான் பி.இ முடிச்சிட்டு சிங்கப்பூர்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். இப்போ கரியர் பிரேக்ல இருக்கேன். சின்ன வயசுலருந்தே எனக்கு கோலம் போடுறதுனா பிடிக்கும். மார்கழி மாசம் 30 நாளும் நாலு மணிக்கே எந்திரிச்சு வீட்டு வாசல்ல கலர் கோலம் போடுவேன். அப்புறம் படிப்பு, வேலைனு பிஸி ஆயிட்டேன். இப்போ பிரேக்ல இருக்குறதால பொழுதுபோக்கா மறுபடியும் கோலம் போட ஆரம்பிச்சேன். சோஷியல் மீடியாவில் கோலங் களுக்காகவே பிரத்யேகமான பக்கங்கள் இருக் குறது தெரிஞ்சுது. அந்த டிசைன்களை பார்த்துட்டு எனக்குப் பிடிச்ச மாதிரி டிசைன்ல கொஞ்சம் மாத்தி எங்க வீட்டுல கோலம் போடுவேன். நிறைய பேர் பாராட்டினாங்க. 2019-ல ‘கோலம் வெறி’னு இன்ஸ்டால ஒரு பேஜ் ஆரம்பிச்சு நான் போடுற கோலங்களை வீடியோக்களா எடுத்துப் பதிவிட ஆரம்பிச்சேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு லைக்ஸும், கமென்ட்ஸும் வந்தது. கோலத்துக்காக யூடியூப் சேனலும் ஆரம்பிச்சிருக்கேன். ‘பி.இ படிச்ச பொண்ணு இப்படி கோலம் போட்டுகிட்டு இருக்கே... இதுல நேரத்தை வேஸ்ட் பண்றதுக்கு வேற ஏதாவது பண்ணலாம்ல'னு நிறைய பேர் கேட்கறாங்க. இதைப் பண்ணும்போது நான் ஹேப்பியா இருக்கேன், அவ்வளவுதான். பிடிச்ச விஷயத்தைப் பண்ணும்போது கிடைக்கிற ஆத்ம திருப்தி என்னை தொடர்ந்து இயங்க வைக்குது.

பி.இ கோலம்... ஆண் கோலம்... ஐ.டி கோலம்!

”பொம்பளை மாதிரி கோலம் போடறே..! - ஸ்ரீராம், சென்னை

``நான் ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பார்க்குறேன். சின்ன வயசுல எங்க அம்மா கோலம் போடுறதைப் பார்த் துட்டே இருப்பேன். அம்மாகூட சேர்ந்து நானும் கோலம் போடுவேன். ‘பொம்பள மாதிரி கோலம் போடுற'னு என்னை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. அம்மா வருத்தப்பட்டதால கோலம் போடுறதை விட்டுட்டேன். குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம்தான் கோலம்ங்கிறது ஒரு ஆர்ட் ஃபார்ம். அதுக்கு ஆண், பெண் பாகுபாடு கிடை யாதுனு புரிஞ்சது. யூடியூப் பார்த்து கோலம் போட ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் நானே டிசைன்களும் உருவாக்க ஆரம்பிச்சேன். வாசல்ல கோலம் போட்டு வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸ் வைப்பேன். ஃபிரெண்ட்ஸ் குரூப் புக்கு அனுப்புவேன். எல்லாரும் பாராட்டவே, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ‘ அட் கோலமாலாஜி’ ங்கிற இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கி அதுல நான் போடுற கோலங்களோட போட்டோக்களை பதிவிட ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல இதெல்லாம் வேணாம்னு சொன்ன அம்மாவே இப்போ இன்ஸ்டாவுல வரும் பாசிட்டிவ் கமென்ட்ஸ் பார்த்து ஹேப்பியாயிட்டாங்க. மனசுக்குப் பிடிச்சதை எனக்காக பண்றேன். அவ்வளவுதான்.

பி.இ கோலம்... ஆண் கோலம்... ஐ.டி கோலம்!

’’ஐ.டி பொண்ணுக்கு கோலம் போடத் தெரியுமா? - பிரியா, சென்னை

“சின்ன வயசுல விசேஷ நாள்கள்ல வீட்டு வாசல்ல நான் தான் கோலம் போடுவேன். மேல் படிப்புக்காக ஆறு மாசம் இடைவெளி தேவைப்பட்டது. அதனால வேலையை விட்டேன். வீட்ல இருந்தப்போ ஏதாவது கிரியேட்டிவ்வா பண்ணலாம்னு தோணுச்சு. இன்ஸ்டாகிராம்ல ‘கோழி கூவுது’ங்கிற பக்கத்தை ஆரம்பிச்சு கோலங்களைப் பதிவிட ஆரம்பிச்சேன். சின்ன வயசுல எனக்கு கம்பிக் கோலம் வரவே வராது. அதுல ஒரு ஆர்வம் இருந்துட்டே இருந்துச்சு. அதனால நான் இப்போ அப்லோடு பண்ற எல்லாமே கம்பிக் கோலங்கள் தான். என் ஃபிரெண்ட்ஸுக்கு இந்த இன்ஸ்டா பேஜ் என்னோடதுனு தெரிஞ்சதும் ‘ஐ.டில வேலை பார்க்குற பொண்ணுக்கு கோலம்கூட போடத் தெரியுமா’ன்னு ஆச்சர்யமா கேட்டாங்க. மனசுக்குப் பிடிச்சதைச் செய்ய எதுக்கு யோசிக்கணும்... என் கோல வீடியோக்களை பார்த்துட்டு, அவங்க வீட்டு வாசல்ல கோலம் போட்டுட்டு அதை போட்டோ எடுத்து இன்ஸ்டா கிராம்ல என்னை டேக் பண்ணி ஸ்டோரி போடுறதைப் பார்க்கிறபோது ரொம்ப ஹேப்பியா இருக்கு.”