ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும்...

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு
பிரீமியம் ஸ்டோரி
News
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு

கைவினைக்கலைஞர் பூமாதேவி

பூமாதேவி
பூமாதேவி

போகிப் பண்டிகை வருகிறது. பழையன கழிதலுக்குத் தயாராகி இருப்பீர்கள். உங்கள் வீட்டிலுள்ள பழைய துணி க்ளிப்புகளை குப்பையில் வீசாமல், அவற்றை வைத்து அழகிய மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு செய்யலாம். பயனற்ற கிளிப்பில் செய்தது என்று நீங்கள் சத்தியமே செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அன்பளிப்பாகவும் கொடுத்து அசத்தலாம். கற்றுத் தருகிறேன்... கற்றுக்கொள்ள நீங்கள் ரெடியா?

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும்...

தேவையானவை:

துணி கிளிப் (பழைய கிளிப்புகள் போதும்)

ஐஸ்க்ரீம் குச்சிகள் (தேவைக்கேற்ப)

கார்டு போர்டு அட்டை

பசை

பென்சில்

ஸ்கேல்

கத்தரிக்கோல்

விளக்கு

துணி

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும்...

ஸ்டெப் 1: ஒன்றன் பின் ஒன்றாக ஒன்பது கிளிப்புகளை ஒட்ட வேண்டும். இதைப்போல் நான்கு செட் செய்து கொள்ளவும்.

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும்...

ஸ்டெப் 2: நான்கு கிளிப்புகளை சதுர வடிவில் அட்டை யின் மீது வைத்து, அளவெடுத்து அட்டையை வெட்டிக் கொள்ளவும்.

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும்...

ஸ்டெப் 3: வெட்டிய அட்டையின் அளவுக்கேற்ப ஐஸ்க்ரீம் குச்சிகளைக் கத்தரித்து ஒட்டவும்.

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும்...

ஸ்டெப் 4: ஒட்டிய நான்கு செட் கிளிப்புகளை ஐஸ்க்ரீம் குச்சிகளின் மேல் படத்தில் காட்டியுள்ள படி நாலா பக்கமும் ஒட்டினால் அழகான கிளிப் பெட்டி தயார்.

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும்...
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு - பழையன கழிதலும் புதியன புகுதலும்...

ஸ்டெப் 5: கிளிப் பெட்டியினுள் விளக்கை வைத்து ஒளிரச் செய்யலாம். பென்சில் ஸ்டாண்டு, பூந்தொட்டி, ஸ்பூன் ஸ்டாண்டாகவும் பயன்படுத்தலாம்.