Published:Updated:

காதலி, தோழி, சகோதரி... யாருக்கு எந்த நிற ரோஜா கொடுக்க வேண்டும்|#காதலர் தினப் பதிவு!

ரோஜாக்கள்!

ஓர் உறவை நட்பில் இருந்து, காதலுக்குக் கொண்டு செல்ல நினைத்தால், ஆரஞ்சு ரோஜாக்களை கொடுக்கலாம். மஞ்சள் ரோஜாக்கள் நட்புக்கானவை, சிவப்பு ரோஜாக்கள் காதலுக்கானவை, ஆரஞ்சு ரோஜாக்கள் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட பாலம் போன்றவை.

Published:Updated:

காதலி, தோழி, சகோதரி... யாருக்கு எந்த நிற ரோஜா கொடுக்க வேண்டும்|#காதலர் தினப் பதிவு!

ஓர் உறவை நட்பில் இருந்து, காதலுக்குக் கொண்டு செல்ல நினைத்தால், ஆரஞ்சு ரோஜாக்களை கொடுக்கலாம். மஞ்சள் ரோஜாக்கள் நட்புக்கானவை, சிவப்பு ரோஜாக்கள் காதலுக்கானவை, ஆரஞ்சு ரோஜாக்கள் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட பாலம் போன்றவை.

ரோஜாக்கள்!

காதலர் தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பிலிருந்தே காதலர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஏனெனில், பிப்ரவரி 7-ம் தேதி ரோஜாக்கள் தினம், 8-ம் தேதி புரொபோஸல் தினம், 9 -ம் தேதி சாக்லேட் தினம், 10-ம் தேதி டெடி பியர் தினம், 11-ம் தேதி ப்ராமிஸ் தினம், 12-ம் தேதி ஹக் தினம், 13-ம் தேதி முத்த தினம், 14 -ம் தேதி காதலர் தினம். இந்த ஒவ்வொரு நாளிலும் காதலரைக் குஷிபடுத்த வெவ்வேறு முயற்சிகளில் காதலர்கள் ஈடுபடுவதுண்டு.

காதல்!
காதல்!

`பூவே பூவே பெண் பூவே’ என ரோஜாக்கள்தான், காதலர் தினத்துக்கு தொடக்கமாக இருக்கிறது. இந்த நாளில் தங்கள் காதலிக்கு ரோஜாக்களைத் தருபவர்கள் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

நீங்கள் கொடுக்கும் ரோஜாக்கள் உங்களது எண்ணத்தையும், நீங்கள் அவர்கள் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்தும். அதனால் நீங்கள் கொடுக்கவிருக்கும் ரோஜாக்களின் நிறத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தெந்த நிற ரோஜா எதைக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்…

*சிவப்பு ரோஜா - ஆழ்ந்த உணர்வுமிக்க காதல் அன்பின் அடையாளம். காதல் கொண்டிருப்பவர்கள் சிவப்பு ரோஜாக்களை வழங்கலாம்.

*மஞ்சள் ரோஜா - வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும் என நினைக்கும் நட்புக்கு, மஞ்சள் நிற ரோஜாக்களை வழங்கலாம். இந்த ரோஜாக்கள் நேர்மறையானவை, நீங்கள் அக்கறை காட்டும் நபருக்கும் வழங்கலாம். 

காதலி, தோழி, சகோதரி... யாருக்கு எந்த நிற ரோஜா கொடுக்க வேண்டும்|#காதலர் தினப் பதிவு!

*ஆரஞ்சு  ரோஜா - ஓர் உறவை நட்பில் இருந்து, காதலுக்குக் கொண்டு செல்ல நினைத்தால், ஆரஞ்சு ரோஜாக்களை கொடுக்கலாம். மஞ்சள் ரோஜாக்கள் நட்புக்கானவை, சிவப்பு ரோஜாக்கள் காதலுக்கானவை, ஆரஞ்சு ரோஜாக்கள் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பாலம் போன்றவை.

*வெள்ளை ரோஜா- இளம் காதலின் அடையாளம். உங்களுக்கான நபரை நீங்கள் கண்டுவிட்டீர்கள்... ஆனால், அந்த உறவின் தொடக்கத்தில்தான் இருக்கிறீர்கள் என்றால், வெள்ளை ரோஜாக்களை வழங்கலாம்.

*லைட் பிங்க் ரோஜா - இது பாராட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. `எனக்காக நீ செய்யும் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன்' என அம்மாக்களுக்கு, சகோதரிகளுக்கு, நெருங்கிய நண்பர்களுக்கு லைட் பிங்க் ரோஜாக்களை வழங்கலாம். 

*அடர் பிங்க்  ரோஜா - நெருங்கிய நண்பர்களுக்கு இதை வழங்கலாம். மகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் பாராட்டின் அடையாளம்.

*ஊதா ரோஜா - பார்த்தவுடன் ஏற்பட்ட காதல் எனில், ஊதா ரோஜா கொடுக்கலாம். நீங்கள் விரும்பும் பெண் உங்கள் வாழ்வில் முக்கியமானவர் என்றும் அவள் உங்களுக்கு ராணி என்பதைக் குறிக்கவும் இந்த ரோஜாக்களைக் கொடுக்கலாம். 

*நீல ரோஜா - அரிதாகவே இந்த ரோஜாக்கள் வளரும். இந்தக் காரணத்தால் நீங்கள் தனித்துவமானவர், அன்பானவர், ஸ்பெஷல் என்பதைக் குறிக்க இந்த நிற ரோஜாக்களை வழங்கலாம். 

ரோஜா
ரோஜா

*பல வண்ண ரோஜா (கலைடாஸ்கோப் ரோஜா) - இந்த ரோஜாக்களின் நிறம் உங்களது வாழ்க்கைத்துணையின் மல்டி ரோல்ஸை எடுத்துரைக்கும் விதமாக இருக்கும். அவரே உங்களுக்குத் துணை, அவரே உங்கள் நண்பர், காதலர், பாராட்டுக்குரியவர், மதிக்கப்படுபவர், தனித்துவமானவர் எனப் பல டைமென்ஷனை குறிக்க இதைக் கொடுக்கலாம்.

*கறுப்பு ரோஜா - இரண்டு வகையான கருத்துகள் கறுப்பு ரோஜாவைச் சுற்றி இருக்கிறது. ஒன்று, உறவின் முடிவு. மற்றொன்று ஆர்வம் மற்றும் காமத்தின் அடையாளம்.

அப்புறம் என்ன, உங்களது காதலுக்கு ஏற்றபடி ரோஜாக்களைத் தேர்வு செய்து வழங்குங்கள்!

ரோஜா தின வாழ்த்துகள்!