Published:Updated:

இந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது! - பல்ஸரில் சுற்றும் பாலாஜி

இந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது! - பல்ஸரில் சுற்றும் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது! - பல்ஸரில் சுற்றும் பாலாஜி

பயணம் - அனுபவம்

இந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது! - பல்ஸரில் சுற்றும் பாலாஜி

பயணம் - அனுபவம்

Published:Updated:
இந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது! - பல்ஸரில் சுற்றும் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது! - பல்ஸரில் சுற்றும் பாலாஜி

யணம்தான் பாலாஜியின் அடையாளம். எப்போது போன் செய்தாலும் பாலாஜியின் மொபைல், நாட் ரீச்சபிள் ஏரியாவிலேயேதான் இருக்கிறது. ‘என்ன... ஏது’ என விசாரித்தால், ``அவன் வீட்ல இருந்து கிளம்பி 8 மாசம் ஆச்சுங்க. எங்கேயாவது பாகிஸ்தான் பார்டர்ல இருப்பான். வாட்ஸ்-அப் பண்ணிப் பாருங்க’’ என்றனர் பாலாஜியின் பெற்றோர். 

இந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது! - பல்ஸரில் சுற்றும் பாலாஜி

ஆம்! ஒரு பல்ஸர் பைக், 2 லட்சம் ரூபாய் பணம், கொஞ்சம் அரிசி/பருப்புடன் 8 மாதத்துக்கு முன்னர் கிளம்பிய பாலாஜி, இந்தியா முழுக்கச் சுற்றிக்கொண்டிருக்கிறார். ``இந்தியாவுல நான் கால் பதிக்காத இடம்னு ஒண்ணுகூட இருக்கக் கூடாது... அதான் இந்தப் பயணம்’’ என்று அசால்ட்டாகச் சொல்கிறார் பாலாஜி.

மெக்கானிக்கல் இன்ஜினீயரான பாலாஜிக்கு, ஊர் சுற்றுவது மிகவும் பிடித்த விஷயம். இதற்காகவே வேலையை விட்டுவிட்டு, தோட்டத்தில் விவசாயம் பார்த்து, அதில் கிடைத்த பணத்தில் இந்திய எல்லைகளை க்ராஸ் செய்யக் கிளம்பிவிட்டார். இதுவரை ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், காஷ்மீர், ஹரியானா, திரிபுரா, ராஜஸ்தான், ஜெய்சல்மர் என ஏகப்பட்ட இடங்களைக் கடந்து செல்ஃபிகளாகக் குவித்துவிட்டார் பாலாஜி. அவரின் வாட்ஸ்-அப் DP-யில்கூட ‘இந்தியாவின் கடைசிக் கிராமம்’ என்ற ஊர்ப்பலகையின் முன்னால் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது! - பல்ஸரில் சுற்றும் பாலாஜி

பயணம் என்றாலே அனுபவம்தான். பாலாஜியின் டைரி முழுக்க அனுபவம்தான். புலிகள் அடர்ந்த காட்டுக்குள் வழி தெரியாமல் அலைந்து வனத்துறையிடம் மாட்டியது, `பாய்ஸ்’ பட செந்தில் மாதிரி ஒவ்வொரு கோயிலாக அன்னதானம் வாங்கிச் சாப்பிட்டது, உலகின் உயரமான பள்ளத்தாக்கைப் பார்த்தது, 15 அடி நீள ராஜநாகத்திடம் இருந்து நெளிந்து நெளிந்து ஓடியும்... பெரிய காட்டுக் குரங்கிடம் இருந்து தவ்வித் தவ்வியும் தப்பித்தது, டார்ஜிலிங்கில் மைனஸ் டிகிரிக்கும் கீழே உள்ள குளிரில் ஐஸ் கட்டிகளில் பைக் பயணம் செய்தது, பாகிஸ்தான் பார்டரில் ஒரு பாகிஸ்தான் குடும்பத்துடன் லன்ச் சாப்பிட்டது, உறைந்துபோன ‘ட்ஸ்மோரிரி’ எனும் ஏரியில் டென்ட் அடித்துத் தங்கியது, மவுன்ட் எவரெஸ்ட்டில் ரொம்பப் பக்கத்தில் சூரிய உதயம் பார்த்தது, அருணாசலப்பிரதேச ஊர்வாசிகளிடம் திகில் பேய்க்கதை கேட்டது, நேபாளத்தில் சில டிரங்க்கன் மாஸ்டர் துறவிகளால் மயிரிழையில் திருமணத்திலிருந்து தப்பித்தது, தேன் எடுக்கப் போகும்போது இரண்டு முறை மலைத் தேனீக்களிடம் கொட்டு வாங்கி உடம்பு தடித்தது, உணவு கிடைக்காமல் பாம்புக்கறி சாப்பிட்டது, `சாமி 2’ பட பாபி சிம்ஹா மாதிரி ஓர் உயிரினம்கூட இல்லாத உலகின் கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் ஒரு நாள் முழுக்கத் தங்கியது, கிளர்ச்சிப் படையிடம் என்கவுன்ட்டரிலிருந்து தப்பித்தது... என்று தன் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவில் ஏகப்பட்ட மெமரிகளைச் சேர்த்து வைத்திருக்கிறார் பாலாஜி.

இந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது! - பல்ஸரில் சுற்றும் பாலாஜி

`இந்தியாவில் எந்த இடம் பிடிச்ச இடம்?’ என்று பாலாஜிக்கு மெசேஜ் அனுப்பினால், `கிழக்கு இந்தியாதான்’ என்று சட்டென ஸ்மைலி அனுப்பினார் பாலாஜி. ``ஆண்டுக்கு 365 நாளும் கொஞ்சியபடி மழை தூறிக் கொண்டே இருக்கும் சிரபுஞ்சி, வீட்டில் வளர்க்கும் செல்ல மிருகங்கள்போல காண்டாமிருகங்கள் வதவதவெனத் திரியும் கஸிரங்கா தேசியப் பூங்கா, பரபர ரிவர் ராஃப்ட்டிங் செய்ய பிரம்மபுத்ராவின் துணை நதியான சியாங் ஆறு, அதிரப்பள்ளியைப்போல் நான்கு மடங்கு பெரிதான - 100 மீட்டர் உயரத்திலிருந்து விழும் நுராநாங் அருவி, `இண்டியானா ஜோன்ஸ்’ படத்தில் வருவதுபோல் மிரட்டலான குகைகளைக் கொண்ட ஜயின்ந்தியா மலை, மலைகளைக் குடைந்து இயற்கை உருவாக்கிய சுங்காஸ்தர் ஏரி, ஆசியாவிலேயே சுத்தமான கிராமமான மேகாலயாவில் இருக்கும் மாவ்லின்னாங்... 550 சதுர கி.மீ-ல் பரந்து விரிந்த, புலிகள் கொஞ்சி விளையாடும் தம்பா புலிகள் சரணாலயம், `யாக்’ எனும் பனிக் காட்டெருமைச் சவாரி நடக்கும் ஜோங்ரி எனும் இடம்... இப்படி வரலாற்று விரும்பிகள், இயற்கை விரும்பிகள், ஆன்மிக அன்பர்கள் எல்லாருக்குமே வடகிழக்கு இந்தியா செம தீனி போடும்’’ என்கிறார் பாலாஜி.

அநேகமாக நீங்கள் இதைப் படிக்கும்போது, “அண்ணா, லட்சம் கி.மீ ஓட்டிட்டேன்... இந்தியாவுல எல்லா இடத்துலேயும் கால் பதிச்சுட்டேன்” என்று பாலாஜியிடம் இருந்து மெசேஜ் வந்தாலும் வரலாம்.

தமிழ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism