Riding Jackets... சில அடிப்படை புரிதல்கள் - பைக் பிரியர்கள் கவனத்துக்கு!

DOT ஹெல்மெட் அணிந்து ஊட்டி, கொடைக்கானலுக்கு லாங் டிரைவ் அடிக்கும் இளசுகள்கூட குளிருக்கு ஜெர்க்கின் மட்டுமே அணிகிறார்கள். ஜெர்க்கினுக்கும் ரைடிங் ஜாக்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
தலைக் கவசத்தின் அவசியம் தெரிந்திருக்கும் அளவுக்கு நம்மில் பலருக்கும் ரைடிங் ஜாக்கின் முக்கியத்துவம் தெரிவதில்லை. தலை மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதுமா? நமது உடம்பிலும் கொஞ்சம் அக்கறை வேணும் பாஸ். அதற்காகத்தான் இருக்கு ரைடிங் ஜாக். இது நம் உடலைக் காக்கும் கவசம். ஜெர்க்கின்தானே என்று நினைத்தால், தப்பும் இல்லை; சரியும் இல்லை.
ரைடிங் ஜாக்கெட் எவ்வளவு அவசியம்?

DOT ஹெல்மெட் அணிந்து ஊட்டி, கொடைக்கானலுக்கு லாங் டிரைவ் அடிக்கும் இளசுகள்கூட குளிருக்கு ஜெர்க்கின் மட்டுமே அணிகிறார்கள். ஜெர்க்கினுக்கும் ரைடிங் ஜாக்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஜாக், என்னென்ன விதங்களில் எவ்வளவு கிடைக்கிறது எனப் பார்ப்பதற்கு முன்னர், அது ஏன் முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
உடம்பில் தலைக்கு அடுத்து மிகவும் முக்கியமானது ஸ்பைனல் கார்டு. உடற்கூறியலில், மற்ற பாகங்களைக் காட்டிலும் முதுகெலும்பின் தனித்துவம் என்னவென்றால், இதன் ஒவ்வொரு பகுதியும் தனித் தனி எலும்புகளால் ஆனது.
முதுகெலும்பின் மேல் பகுதியான கழுத்தில் உள்ள ஏழு முதுகெலும்பு ஊடாக மின் நீரோட்டங்கள் மேலேயும் - கீழேயும் பயணிக்கும். இவைதான் உடலை மூளையுடன் இணைத்து, செய்திகளை மற்ற பகுதிகளில் இருந்து மூளைக்குக் கொண்டு சென்று மூளையைச் செயலாற்ற அனுமதிக்கிறது. மூளைக்கு நெருக்கமாக உள்ளதால், இந்தப் பகுதி பாதிக்கப்பட்டால், உடலின் பெரும்பகுதியை அது பாதிக்கும்.

முதுகெலும்புக் கால்வாயின் முடிவில் இருக்கும் நரம்புகளில் சேதம் ஏற்பட்டால் - ஒத்திசைவு அல்லது பக்கவாதம், கைகள், விரல்கள், கால்கள் அல்லது கால்விரல்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது உணர்வு இழப்பு, சிறுநீர்ப்பை அல்லது குடல் கட்டுப்பாட்டை இழத்தல் போன்று விளைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். முதுகெலும்பு பலமாக முறியும்போது, காயம் ஏற்பட்ட இடத்திற்குக் கீழே உணர்வு மற்றும் செயல்பாடு நிரந்தரமாகத் தடைப்படுகின்றன.
முதுகுத்தண்டு வடம் இவ்வளவு சிக்கலாக இருப்பினும், மோட்டோ ஜீபி ரேஸர்கள் அதிவேக விபத்தின்போதும் பல பல்டி அடித்துக் கீழே விழுந்து,அடுத்த கணமே எழுந்து நடந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள். காரணம், அவர்களின் ரேஸ் சூட்கள். லட்சங்களில்தான் இதன் விலை ஆரம்பிக்கும். இது நமக்கு ஓவர்டோஸ் என்றாலும், நெடுஞ்சாலைப் பயணங்களுக்கென பயன்படுத்தக்கூடிய ரைடிங் ஜாக்கெட்டுகள் ஐந்தாயிரம் ருபாய் முதலே கிடைக்கும்.
ஹெல்மட்டுகளைப்போல ரைடிங் ஜாக்கெட்டுகளையும் நம் பயன்பாட்டிற்கு ஏற்ப கம்யூட்டர், ஸ்போர்ட், டூரிங் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
அந்த வகையில் கம்யூட்டர் ஜாக்கெட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட்ஸ், டூரிங் ஜாக்கெட்ஸ் ஆகியவை குறித்த தெளிவான தகவல்களுடன்,
முதுகெலும்பில் அடிபட்டால் ஏற்படக்கூடிய Traumatic Spinal Cord Injury (TSCI) காயம் குறித்தும் மோட்டார் விகடன் இதழில் முழுமையாக அறிந்திட > ரைடிங் ஜாக்கெட் எவ்வளவு அவசியம்? https://bit.ly/32Wed7D
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV