கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஸ்கூல்... காலேஜ்... இன்டர்வியூ... மாப்பிள்ளை அழைப்பு... எல்லாமே ராஜ்தூத்தில்தான்!

பைக்
பிரீமியம் ஸ்டோரி
News
பைக்

வின்டேஜ் பைக்: ராஜ்தூத்

60 கிட்ஸில் ஆரம்பித்து 2K கிட்ஸ் வரை பைக் காதலர்களின் கனவு எப்போதுமே ராயல் என்ஃபீல்டுதான். ஆனால் ராயல் என்ஃபீல்டுக்கே டஃப் கொடுத்து இளைஞர்களின் மனதைக் கவர்ந்த பைக் ராஜ்தூத்.

கேப்டன் கூல் தோனியின் மனசுக்கு நெருக்கமான பைக்கும்கூட! 175 சிசி, 2 ஸ்ட்ரோக் இன்ஜின், ஹெட்லைட்டின் மேல் இருக்கும் கீ பாயின்ட், டூயல் சைலன்ஸர் என கெத்துக்காட்டும் கருப்பு நிற ராஜ்தூத் பைக்கில் கம்பீரமாக வலம் வருகிறார், சென்னையைச் சேர்ந்த அருள் டொமினிக்.

“பைக் காதலர்களை ஈர்க்கும் ரெட்ரோ லுக். 60 வயதான பைக்காக இருந்தாலும், இப்போதும் 40 கி.மீ மைலேஜ், லாங் டிரைவிங்கின்போதும் - கரடுமுரடான சாலைகளிலும்கூட, அதிர்வுகள் இல்லாமல் பயணத்தைக் கொண்டாடச் செய்யும் இன்ஜின் ஸ்மூத்னெஸ்... இதெல்லாம் ராஜ்தூத்தின் ஸ்பெஷல்.

இடதுபுறம் இருக்கும் கியர் லீவர்... இதைவிட இந்த பைக்கைக் காதலிக்க என்ன வேணும் சொல்லுங்க! புது பைக்குகள் பல களம் இறங்கினாலும், ராஜ்தூத் மீதான கிரேஸ் குறையவே இல்ல” என தன்னுடைய ராஜ்தூத்தை முத்தமிட்டபடியே பேச ஆரம்பிக்கிறார் அருள்.

``இந்த பைக்கை 1968-ல் எங்க அப்பா 3000 ரூபாய்க்கு வாங்கினார். எங்க அப்பா தீவிரமான பைக் காதலர். இந்த ராஜ்தூத் தவிர, 1970 ராயல் என்ஃபீல்டு, 1972 ஜாவா, வில்லீஸ் ஜீப்னு நிறைய வின்டேஜ் கலெக்‌ஷன்கள் வீட்டில் இருந்தாலும், எனக்கு ராஜ்தூத் மேலதான் ஈர்ப்பு. அதற்்கு ஒரு காரணமும் இருக்கு.

ஸ்கூல்... காலேஜ்...  இன்டர்வியூ... மாப்பிள்ளை அழைப்பு... எல்லாமே ராஜ்தூத்தில்தான்!

சின்ன வயதில் ஸ்கூலுக்கு அம்மா, அப்பா கூட சேர்ந்து இதில்தான் போவேன். அந்தச் சின்ன வயசு நினைவுகளை, இப்போதும் இந்த பைக் தாங்கி நிற்பதாக உணர்கிறேன். நான் காலேஜ் சேர்ந்தப்போ, ‘புது பைக் வாங்கித் தர்றேன். என்ன மாடல் வேணும்’னு அப்பா கேட்டாங்க. ஒரு நிமிஷம்கூட யோசிக்காமல், `நீங்க வெச்சிருக்கிற ராஜ்தூத்தை எனக்குக் கொடுங்க’னு கேட்டேன். அவ்வளவு கிரேஸ் இந்த பைக் மேல எனக்கு. சொன்னா நம்பமாட்டீங்க... என்னோட கல்யாணத்தில் மாப்பிள்ளை அழைப்புக்கு, நான் இதுலதான் போனேன். இண்டர்வியூ, எக்ஸாம்னு நிறைய செண்டிமென்ட்டான தொடர்பும் இருக்கு.

30 வருஷத்துக்கு முன்னாடி அடிக்கடி பைக் ரேஸ் நடக்கும்.

புல்லட்டுகளோட ஒப்பிடும்போது தனித்துவமான சத்தம், குறைவான எடை, பராமரிப்புச் செலவு என் தலைவன் மாஸ் காட்டுவான்! உண்மையைச் சொல்லணும்னா, பெட்ரோலுக்கு மட்டும் செலவு பண்ணா போதும். இப்போகூட வண்டியில் எந்தப் பிரச்னையும் இல்ல. சென்னையில் இருந்து ஏலகிரி, பரமக்குடி, தூத்துக்குடி, பெங்களூர், அனந்தபூர்னு லாங் டிராவலுக்கு... இந்த ராஜ்தூத்தான். இதோ இந்த லோகோவைப் பாருங்க’’ என ‘குஜால்’ என ஒட்டப்பட்டிருக்கும் மோனோகிராமைக் காண்பித்தார் அருள்.

``30 வருஷத்துக்கு முன்னாடி அடிக்கடி பைக் ரேஸ் நடக்கும். எல்லா பைக் ரேஸ்லையும் எங்க அப்பா இந்த பைக்கோட ஆஜர் ஆகிடுவார். 1979-ல் இருந்து 82 வரை இந்த பைக்தான் சாம்பியன்ஷிப்பை வாங்கியது. அதுக்காக அந்த நிறுவனம் எங்களுக்கு இந்த மோனோகிராமைப் பரிசா கொடுத்தாங்க. அதை இப்போ வரை பைக்கோட சேர்த்துப் பாதுகாத்து வர்றோம்.

நிறைய பேர் இந்த வண்டியை விலைக்குக் கொடுங்கனு கேட்ருக்காங்க. ஆனால் எத்தனை லட்சம் கொடுத்தாலும், இந்த பைக்கை நான் விலைக்குக் கொடுக்க மாட்டேன். எனக்கும் இந்த ராஜ்தூத்துக்குமான காதலை, எந்த பைக்கைக் கொண்டும் நிரப்ப முடியாது.

பைக்
பைக்

நிறைய பேர் இந்த பைக்குக்கு ஒரிஜினஸ் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குறது இல்லைனு சொல்லுவாங்க. ஆனால் 60 வருஷமா வண்டியில் இருந்த முக்கியமான ஸ்பேர் பார்ட்ஸ்ஸை நாங்க மாத்தினதே இல்லங்கிறது தான் உண்மை. எங்க ஏரியாவில் இருக்கற மெக்கானிக் ஷாப்பில் கொடுத்து, சில மாசத்துக்கு ஒரு முறை ஜெனரல் சர்வீஸ் மட்டும் பண்ணிப்போம். சின்ன கீறல்களைக் கூட இந்த பைக்கில் நீங்க பார்க்க முடியாது. பழைய வண்டியாக இருந்தாலும், சர்வீஸில் இப்போதும் புது வண்டிதான்!” என `பட் பட்’ சத்தத்துடன் விடை பெற்றார் அருள்.