தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கலர், கலர், வாட் கலர்...

கலர், கலர், வாட் கலர்...
பிரீமியம் ஸ்டோரி
News
கலர், கலர், வாட் கலர்...

காம்போ முதல் டிரெண்டிங் வரை... கலர்ஃபுல் கைடு

‘இன்னிக்கு எந்த கலர்ல டிரஸ் போடறது...’ என யோசிப்பவர்கள் ஒரு ரகம் என்றால், ‘எந்த கலர் டிரஸ்ல உற்சாகமா இருப்போம்’ என யோசிப்பவர்கள் இன்னொரு ரகம். சில நிறங்கள் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்... சில நிறங்கள் பொலிவாக உணரவைக்கும். இதைத் தாண்டி, எந்த இடத்துக்கு எந்த நிறத்தில் உடை அணிய வேண்டும் என்ற விதிகளும் இருக்கின்றன. கலர் காம்பினேஷன் முதல், வார்ட்ரோபில் இருக்க வேண்டிய அவசிய கலர்கள் வரை விளக்குகிறார் பிரபலங்களின் காஸ்டியூம் டிசைனர் சிந்து.

 சிந்து
சிந்து

கலர் காம்பினேஷன் ஏன் முக்கியம்..?

சாதாரண நாள்களில் அணிகிற உடைகளாகட்டும், விழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு அணிகிற உடை களாகட்டும், கலர் காம்பினேஷன் ரொம்ப முக்கியம். மஞ்சள் நிற டாப்புக்கு, பஞ்சு மிட்டாய் நிறத்தில் டிரவுசர் யாரும் அணிவதில்லைதானே. அழகாக உடையணிவது என்பது நமக்கு பெரிய தன்னம்பிக்கையைத் தரும். உங்கள் ஸ்கின்டோனுக்கு ஏற்ப உடை அணிவதைவிடவும், உங்கள் மனதுக்குப் பிடித்த கலரில் அணியுங்கள். மகிழ்ச்சியாக, மனநிறைவாக உணர்வீர்கள்.

உடை மற்றும் அதன் நிறம் ஒருவருக்கு தன்னம்பிக்கையைத் தருவது எப்படி?

ஒவ்வொருவருக்கும் மனதுக்குப் பிடித்த உடை, நிறம் என இருக்கும். அதை அணியும்போது அந்த நாள் முழுவதும் உற்சாகமாக, தன்னம்பிக்கையோடு உணர் வார்கள். சென்டிமென்ட்டாக சில உடைகள் நல்ல நினைவு களைத் தரும். நான் இப்போதும் புதிய புராஜெக்ட்டில் கையெழுத்துப் போடும்போதும், சோகமாக இருக்கும்போதும் கறுப்பு நிற உடையை அணிந்துகொள்வேன். அதை அணிந்தால் எல்லாம் சரியாக நடக்கும் என ஒரு நம்பிக்கை வரும். கறுப்பு, நேவி ப்ளூ, ஒயின் கலர், பாட்டில் கிரீன் (கரும்பச்சை) போன்ற டார்க் கலர்ஸ் நிறைய பேருக்கு தன்னம்பிக்கையைக் கொடுப்பதாகச் சொல்வார்கள். மனதுக்குப் பிடித்த உடையை அணியும்போது முகத்திலும் பொலிவு கூடும்.

எந்த நிகழ்வுக்கு எந்த கலர்?

கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் காலையில் மெரூன், கரும்பச்சை, மஸ்டர்டு மஞ்சள் போன்ற டார்க் கலர் உடைகள் பிரைட் லுக் கொடுக்கும். காலையில் இந்த நிறங்களில் உடை அணியும்போது தனித்துவமாகத் தெரிவோம். மாலை நேர ரிசப்ஷனுக்கு ப்ளூ, மஞ்சள், பச்சை, க்ரே போன்றவற்றில் பேஸ்டல் கலர்ஸ் பொருத்த மாக இருக்கும். பீச் போன்ற திறந்தவெளியில் ரிசப்ஷன் வைக்கும்போது, இந்த நிறங்கள் ரொம்பவே அழகாக இருக்கும். மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு, மெரூன், ஒயின் ரெட், ராயல் ப்ளூ போன்ற நிறங்களில் கவுன், சல்வார், சேலை என எதுவும் செட் ஆகும். காக்டெயில், பார்ட்டி, கெட்-டுகெதர் போன்ற நிகழ்வுகள் என்றாலே கறுப்புதான் அருமையான சாய்ஸ்.

கலர், கலர், வாட் கலர்...
கலர், கலர், வாட் கலர்...

2023-ன் டிரெண்டிங் நிறங்கள்?

சமீப நாள்களில் லைட் கலர்ஸ் அதிகம் டிரெண்ட் ஆகின்றன. குறிப்பாக நாட்டுக் கத்திரிக்காய், நாகப்பழ நிறம், ஸ்கை ப்ளூ போன்றவை.... இந்த கலர் காம்போவில் தான் பலரும் உடைகளைத் தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் இவைதான் டிரெண்டிங்கில் இருக்கும்.

அதென்ன `ஃபங்கி' கலர்ஸ்...?

ரெட்ரோ கலர்ஸ் அதாவது, நல்ல பிரைட் கலர்ஸை தான் ஃபங்கி கலர்ஸ் என்று சொல்வோம். கொஞ்சம் வித்தியாசமான பிரைட் கலர் காம்பினேஷனை குறிக்கும்.உதாரணத்துக்கு சிவப்பு கலர் சட்டைக்கு ஆரஞ்சு கலர் கால் சட்டை... மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற கலர் களில் உடை அணிவதைத்தான் `ஃபங்கி' (Funky) என்று சொல்கிறோம். மேடை நிகழ்ச்சிகளுக்கும், குழந்தை களுக்கும் ஏற்றவை இந்த `ஃபங்கி' கலர்ஸ்.

அனைவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய 5 கலர் காம்போ?

வெள்ளை, கறுப்பு, நேவி ப்ளூ, மெரூன், கிரே... இந்த 5 கலர்கள் இருந்தால் போதும். இதற்கேற்றபடி டாப், பேன்ட், புடவை என மிக்ஸ், மேட்ச் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் எல்லோரிடமும் இந்த ஐந்து நிறங் களில் உடைகள் இருக்கும்.