பெண்கள் அணியும் ஆடைகளில் புடவைகளுக்கு எப்போதும் தனி இடம் உள்ளது. ஆனால், நீளமான புடவையை அவசரத்திற்கு விரைவில் அணிய முடியாது. இதனாலேயே, புடவை வேண்டாம் என்று வேறு ஆப்ஷனுக்கு செல்லும் பெண்களும் உண்டு.

இதற்குத் தீர்வாக இன்று பல பெண்கள், புடவையை pre pleat செய்துவைத்துக்கொண்டு, கிளம்பும்போது ப்ளீட்ஸ் வைக்கும் வேலையும் பதற்றமும் இல்லாமல் அப்படியே எளிமையாக எடுத்து உடுத்திக்கொள்கிறார்கள்.
Pre pleat செய்த புடவையை அணிவதிலும் சில வழிமுறைகள் உள்ளன பின்பற்றுவதற்கு. அதை எப்படி அணியலாம் என்பது குறித்து பகிர்கிறார், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீதேவி தியாகராஜன்.
ஸ்டெப் 1
புடவை அணிவதற்கு முன்பு அதனை pre pleat எடுத்து வைத்துக் கொள்ளவும். தெரியாதவர்கள், வாய்ப்பிருப்பவர்கள் அதற்கென இருக்கும் professionalist-யிடம் கொடுத்து pleat எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

ஸ்டெப் 2
Pre pleat எடுக்கப்பட்ட புடவையை பிரித்து, அதன் ஆரம்பப்பகுதியை எடுத்து, வலதுபக்க இடுப்பு ஓரத்தில் (மிக ஓரத்தில் இல்லாமலும், நடுப்பகுதியில் இல்லாமலும்) டக்-இன் செய்யவும். புடவை கீழே தரையை உரசாதபடியும், ரொம்ப மேலே இல்லாதபடியும் உயரத்தை பார்த்து டக்-இன் செய்யவும். டக்-இன் செய்யும்போது, ஒரே இடத்தில் புடவை சுருக்கமாகச் சேராமல் பொறுமையாக நீவிவிட்டு, இடுப்பைச் சுற்றிலும் இன் செய்யவும்.
ஸ்டெப் 3
அடுத்து, முந்தானைக்கான shoulder pleat-ஐ பிளவுஸில் வைத்து பின் செய்ததுடன், பிளவுஸின் பின்பகுதியிலும் பின் செய்து கொள்ளவும். ப்ளீட்ஸை விரித்துவிடவும்.

ஸ்டெப் 4
முந்தானை மடிப்புகளை சரி செய்தபின், அதன் வலதுபக்க புடவை ஓரத்தை, இடுப்பு - முதுகுப்பக்கம் சரிசெய்து நீவி, இடது பக்கம் வரை வந்து, இன்ஸ்கர்ட் உடன் பின் செய்யவும். தொடர்ந்து இடதுபக்க இடுப்புப் பகுதியில் புடவை மடிப்புகளை சரிசெய்து, அடுக்கடுக்காக எடுத்துக் கொள்ளவும். அதனையும் இன்ஸ்கர்ட்டுடன் சேர்த்து பின் செய்துகொள்ளவும்.
ஸ்டெப் 5
அடுத்ததாக, hip pleat-ல் கீழ் பகுதியிலும், மேல் பகுதிலும் இருக்கும் பின்களை நீக்கவும். மேல் பகுதி ப்ளீட்ஸை அப்படியே தொப்புள் பகுதியில் டக் இன் செய்யவும். தொடர்ந்து, மடிப்பின் மேற்புறத்தில் எக்ஸ்ட்ரா ப்ளீட்ஸ் இருந்தால், அவற்றை டக் இன் செய்யவும்.

முந்தானை மடிப்புகள், புடவையின் உயரம் என அனைத்தையும் சரி செய்துகொள்ளவும். அவ்வளவுதான்... you are ready to go.