மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்!

என் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்!
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்!

என் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்!

20 வயதில் திருமணம். சில வருடங்களிலேயே மூன்று குழந்தைகளுக்கு அம்மாவானேன். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. ‘இனி என் வாழ்க்கை என் குழந்தை களுக்காகத்தான்’ என்ற எண்ணத்துடன் அம்மா வீட்டில் தஞ்சமானேன்.

என் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்!

படித்த படிப்பு கைகொடுக்க, மார்க்கெட்டிங் வேலை கிடைத்தது. வேலைக்குச் சென்றுகொண்டு அம்மாவின் துணையோடு குழந்தைகளை நன்றாகவே படிக்க வைத் தேன். ‘தாய் வளர்க்கிற பிள்ளைங்க சரியானவங்களா வளர மாட்டாங்க’ எனும் சிலரின் கூற்றைப் பொய்யாக்கு வதற்காக, குழந்தைகளிடம் கண்டிப்பாக இருந்தேன். அவர்களுடைய உடையைத் தேர்ந்தெடுப்பதில் ஆரம்பித்து... படிப்பு, வேலை என்று அனைத்து விஷயங்களிலும் நானே முடிவெடுத்தேன்.

என் அண்ணன் மகனுக்கு, என் மகளைத் திருமணம் செய்துவைக்க நினைத் தேன். அண்ணன் வீட்டில் திருமணத்துக்குச் சம்மதம் சொல்ல... பெரியவர்களான நாங்களே பேசி முடிவெடுத்தோம். ஆனால், ‘எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல. நான் ஒருத்தரை லவ் பண்றேன்’ என்று என்னுள் இடியை  இறக்கினாள் மகள். நான்பட்ட வலிகளையும், வேதனைகளையும் சொல்லி அவளைச் சமாதானம் செய்ய முயன்றும் பயனில்லை. எனக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டாள். மற்ற பிள்ளைகளும் காதல் திருமணம்தான் செய்து கொள்வோம் என்கிறார்கள். இத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தும் அவர்கள் என் பேச்சைக் கேட்காமல் என்னை ஏமாற்றிவிட்டதாகப் புலம்புகிறது உள்ளம். அவர்கள் ஏமாற்றிய வேதனை, தாங்கிக் கொள்ள முடியாததாக, மீண்டும் மீண்டும் நினைத்துத் துடிக்க வைப்பதாக இருக்கிறது. இந்த மனப்போராட்டத்தில் இருந்து வெளியே வருவது எப்படி...? ஆலோசனை அளித்து உதவுங்கள் தோழிகளே!

 - பெயர் வெளியிட விரும்பாத அவள் வாசகி

என் டைரி - 405-ன் சுருக்கம்   

என் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்!

னக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகின்றன. என் கணவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானதிலிருந்தே என் நிம்மதி பறிபோனது. மது அருந்திவிட்டால் வீட்டில் அவர் நடந்துகொள்ளும்விதமே பயங்கரமாக இருக்கிறது. அவர் வரும் சத்தம் கேட்டாலே நானும் குழந்தைகளும் பயந்துபோய் ரூமுக்குச் சென்று கதவைச் சாத்திக்கொள்வோம். அவரிடம் பேசிப்பார்த்தாயிற்று; உறவினர்களிடம் சொல்லி, பஞ்சாயத்து செய்தாயிற்று. எதற்கும் அவர் மசிவதாகத் தெரியவில்லை. கடந்த நான்கரை வருடங்களாக நானும் குழந்தைகளும் எப்படிச் சாப்பிடுகிறோம், ஸ்கூல் பீஸுக்கு என்ன செய்கிறோம் என்றுகூடக் கேட்பதில்லை. வீட்டுச்செலவுக்குப் பணம் தருவதை அறவே நிறுத்திவிட்டார். வீட்டிலேயே குடிக்க ஆரம்பித்தார். எதிர்த்துக் கேள்வி கேட்டால்... வசை, அடி உதை என்று வீடு ரணகளமானது. பொறுத்துப்பொறுத்துப் பார்த்த நான், ஒரு கட்டத்தில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு ஒரு வேலை கிடைக்கும்வரை பெற்றோர் வீட்டில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். என் தீர்மானம் சரியானதுதானா?

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

சொந்தக் காலில் நில்லுங்கள்!

ங்களின் தீர்மானம் மிகவும் சரியானதே, மதுவுக்கு அடிமையான உங்கள் கணவரை இனியும் நம்புவதில் எந்தப் பயனும் இல்லை. பெண்கள் அனைவரும் தங்கள் சொந்தக் காலில் நிற்பதே அவர்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு. எனவே, ஒரு நல்ல வேலைக்கு மிகத் தீவிரமாக முயற்சி எடுங்கள். உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளின் நலனுக்காகவும் வேலை கிடைக்கும்வரை பெற்றோர் வீட்டில் வசிப்பதே சிறந்தது.

-ஆர்.ராஜேஸ்வரி, ஸ்ரீமுஷ்ணம்

விவாகரத்து செய்!

னக்கு வயது 70. உன் நிலைமையை அறிந்தேன். குடிக்க ஆரம்பித்துவிட்டால், விடுவது என்பது சுலபமல்ல. உன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்க முயற்சி செய். பெற்றோரிடம் உன் நிலைமையை எடுத்துக் கூறி வேலை தேடு. அதுதான் நிரந்தரமான தீர்வு என நான் நம்புகிறேன்.

- எஸ்.ரேவதி, ஈரோடு

விமர்சனத்தைப் பொருட்படுத்தாதீங்க!

கப்பனின் குடிகார அடாவடித்தனம் பிள்ளைகளைப் பாதித்துவிடும். பிள்ளைகள் மனம் வாடக் கூடாது என்ற உங்கள் உறுதியில் தெளிவாக, திடமாக இருங்கள். மற்றவர்கள் விமர்சனத்தைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாது, நிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் சொந்த உழைப்பில் உங்கள் பிள்ளைகள் முன்னேற்றம் அடையும்போது, முன்பு தூற்றிய உலகம் பின்னர் போற்றும். கணவரும் மனம் மாறி வருவார். நம்பிக்கைதானே வாழ்க்கை சகோதரி! தைரியத்துடன் நலமாக வாழ வாழ்த்துகள்.

- கலாவதி முருகேசன், சென்னை - 47