Published:Updated:

How to: வளர்ப்பு மீன்களைப் பராமரிப்பது எப்படி? | How to maintain fish aquarium

Fish Aquarium
News
Fish Aquarium ( Photo by Musca Cristian on Unsplash )

``மீன் வளர்ப்பில் மிக முக்கியமான பார்ட், மீன்களை தொட்டியில் விடுவது. முதன்முறை மீன் வளர்க்கிறீர்கள் என்றால், விலை அதிகமான மீன்களை வாங்கி வளர்க்கக் கூடாது. முதலில் சிறிய தொகையில் கிடைக்கும் மீனை வாங்கி வளர்த்து, மீன் வளர்ப்பு பற்றி தெரிந்துகொண்ட பினு, அதிக விலை மீன்களை வாங்கலாம்."

Published:Updated:

How to: வளர்ப்பு மீன்களைப் பராமரிப்பது எப்படி? | How to maintain fish aquarium

``மீன் வளர்ப்பில் மிக முக்கியமான பார்ட், மீன்களை தொட்டியில் விடுவது. முதன்முறை மீன் வளர்க்கிறீர்கள் என்றால், விலை அதிகமான மீன்களை வாங்கி வளர்க்கக் கூடாது. முதலில் சிறிய தொகையில் கிடைக்கும் மீனை வாங்கி வளர்த்து, மீன் வளர்ப்பு பற்றி தெரிந்துகொண்ட பினு, அதிக விலை மீன்களை வாங்கலாம்."

Fish Aquarium
News
Fish Aquarium ( Photo by Musca Cristian on Unsplash )

வளர்ப்பு மீன்கள் பராமரிப்பு, மற்றும் மீன் தொட்டியைச் சுத்தம் செய்யும் முறை பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மீன் வளர்ப்பு நிபுணர் (Aquaculturist) சுரேந்தர்.

``மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கு முன், மீன்களை எப்படி பராமரிப்பது என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.

சுரேந்தர்
சுரேந்தர்

தண்ணீர்

மீன் தொட்டியில் மீன்களை விடுவதற்கு முன் அதனை நன்றாக சுத்தம் செய்து, மீன்களின் தன்மைக்கு ஏற்ற தண்ணீரை தொட்டியில் நிரப்ப வேண்டும்.

உதாரணமாக, கடல் மீன் வளர்க்க விரும்புகிறோம் எனில், கடல் நீரின் அளவிற்கு உப்புத்தன்மை வாய்ந்த தண்ணீரை நிரப்ப வேண்டும். அதுவே நன்னீரில் வாழும் மீன்களாக இருந்தால், அவை ஜீவிக்க தண்ணீரின் pH அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு குழாய் நீரா, நிலத்தடி நீரா, மினரல் நீரா எதை நிரப்ப வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

உப்புநீராக இருந்தால் சீக்கிரமாக தொட்டியை சுற்றி உப்புப் படிந்து விடும். அதனால் தேவையென்றால் மட்டுமே அதைப் பயன்படுத்தவும். இல்லையெனில் தவிர்த்துவிட்டு, க்ளோரின் இல்லாத கேன் வாட்டர், சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீர் (Purified water) பயன்படுத்தலாம்.

உணவு

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஒவ்வொரு மீனுக்கும் உணவின் அளவு மாறுபடும் என்பதால், அதற்கேற்ப மட்டுமே கொடுக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ கொடுப்பது ஆபத்து. அதிகமாக உணவை இடும்போது தொட்டியும் விரைவாக அசுத்தமாகிவிடும்.

மோட்டார்

சிறிய பாட் (pot) தவிர்த்து, மற்ற மீன் வளர்க்கும் தொட்டிகள் அனைத்துக்குமே ஃபில்டருடன் கூடிய மோட்டார் அவசியமான ஒன்று. கூடவே ஏர் பம்ப் மிக அவசியமானது. மீன் தொட்டியில் `ஃபில்டர் மீடியம்' என்ற பொருள் ஃபில்டர் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும். அது அழுக்காகித் தெரிய ஆரம்பிக்கும் பட்சத்தில் அதை உடனடியாக மாற்ற வேண்டும். மோட்டார் தேவைப்படாத மீன்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக கப்பி, ஃபைட்டர் போன்ற வகைகள்.

Fish Aquarium
Fish Aquarium
Photo: Unsplash

லைட்

சில மீன் தொட்டிகளில் வெளிச்சத்திற்கு என லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். அதை 24 மணி நேரமும் எரியவிடக் கூடாது. அதிகபட்சமாக 8 மணிநேரம் இயங்கினால் போதுமானது. இதனாலும் தொட்டி அசுத்தமாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் மீன் தொட்டியை வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அதிகமாகப் பாசி படரும், விரைவில் தொட்டி அசுத்தமாகும்.

கற்கள்

எல்லா வகை மீன்களுக்கும் கற்கள், பொம்மைகள் அவசியம் இல்லை. தேவையானவற்றுக்கு மட்டும் அவற்றை வைத்தால் போதுமானது. மீன் வாங்கும் முன்பே அக்வேரியத்தில் இது குறித்து ஆலோசனை பெறவும்.

மீன்கள்

மீன் வளர்ப்பில் மிக முக்கியமான பார்ட், மீன்களை தொட்டியில் விடுவது. முதன்முறை மீன் வளர்க்கிறீர்கள் என்றால், விலை அதிகமான மீன்களை வாங்கி வளர்க்கக் கூடாது. முதலில் சிறிய தொகையில் கிடைக்கும் மீனை வாங்கி வளர்த்து, மீன் வளர்ப்பு பற்றி தெரிந்துகொண்ட பிறகு, அதிக விலை மீன்களை வாங்கலாம்.

எடுத்தவுடனேயே விலை அதிகமுள்ள மீன்களை வாங்குபவர்கள், அக்வேரியமில் சொல்லி மாதப் பராமரிப்பு செய்து தரக் கேட்கலாம்.

எந்தெந்த வகை மீன்களை ஒன்றாக ஒரே தொட்டியில் விடலாம், எவற்றை விடக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு மீன் இனங்களை வாங்கி தொட்டிக்குள் விட வேண்டும். தொட்டிக்கு ஏற்ற அளவே மீன்களைப் போட வேண்டும்; அதிகமாக போடக் கூடாது.

Fish Aquarium
Fish Aquarium
Photo: Unsplash

தொட்டியை எப்படி சுத்தம் செய்வது?

* தொட்டியில் உள்ள அசுத்தமான தண்ணீரையும், மீன்களையும் இன்னொரு பாத்திரத்துக்கு மாற்ற வேண்டும். அந்த மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து, குளோரின் அல்லாத சாதாரண நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

* முக்கியமான விஷயம், புது நீருடன் பழைய நீரையும் தொட்டியில் மீண்டும் நிரப்ப வேண்டும். புது நீர் 70%, பழைய நீர் 30% என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அல்லது 80:20 என்ற விகிதத்திலாது இருக்க வேண்டும். என்றைக்கும் முழுதாக தண்ணீரை வெளியேற்றிவிட்டு மாற்றக் கூடாது.

மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றினால் மாதத்திற்கு ஒருமுறை தொட்டியைச் சுத்தம் செய்தால் போதுமானது. இடையில், தொட்டி அழுக்காகத் தெரிந்தாலோ, மீன்களின் செயல்பாட்டில் மாற்றம் தெரிந்தாலோ சுத்தம் செய்துகொள்ளலாம்.''