Published:Updated:

"நரபலியிலிருந்து என்னை பெரியார் மண்தான் காப்பாத்தியிருக்கு; இனிமே நான், என்…" – ஷாலினி சர்மா பேட்டி

ஷாலினி சர்மா

"நரபலி குற்றத்திலிருந்து தப்பிக்கத்தான் நான் காதலிக்கிறேன்னு சித்தி பொய் சொல்றாங்க. என் தம்பியை நரபலி கொடுக்கிறதுக்கு முன்னாடிநாள் நைட்டு என்னைத்தான்…” – தமிழகம் தப்பி வந்த ஷாலினி சர்மா பேட்டி

Published:Updated:

"நரபலியிலிருந்து என்னை பெரியார் மண்தான் காப்பாத்தியிருக்கு; இனிமே நான், என்…" – ஷாலினி சர்மா பேட்டி

"நரபலி குற்றத்திலிருந்து தப்பிக்கத்தான் நான் காதலிக்கிறேன்னு சித்தி பொய் சொல்றாங்க. என் தம்பியை நரபலி கொடுக்கிறதுக்கு முன்னாடிநாள் நைட்டு என்னைத்தான்…” – தமிழகம் தப்பி வந்த ஷாலினி சர்மா பேட்டி

ஷாலினி சர்மா
``ஆர்.எஸ்.எஸில் உள்ள என் வளர்ப்புத் தாய் ஏற்கனவே என் தம்பியை நரபலி கொடுத்துவிட்டார். அடுத்து என்னையும் நரபலி கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்ற பகீரிட வைக்கும் குற்றச்சாட்டுடன், 23 வயது இளம்பெண் ஷாலினி சர்மா மத்திய பிரதேசத்திலிருந்து உயிர்தப்பி தமிழகத்திற்கு ஓடிவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தை பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் ஷாலினி ஷர்மாவை விகடனுக்காக சந்தித்துப் பேசினேன். உயிர் அச்சத்திலிருந்து மீளாதவராக நம்மிடம் பேசினார்,

 “மத்திய பிரதேசம் மாநிலம் போபால் டவுனில்தான் அப்பா-சித்தியுடன் வசித்து வருகிறேன். என்னைப் பெற்ற அம்மாவை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை. சித்தியைத்தான் அம்மாவா நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, எனக்கு 17 வயது ஆகும்போதுதான் அவங்க அம்மா கிடையாது சித்தின்னே தெரியும். ஒரு அண்ணன், ரெண்டு அக்கா, ஒரு தங்கச்சி, ஒரு தம்பி. இவங்க எல்லாருமே சித்தி பசங்கன்னு சொன்னாங்க. உண்மையிலேயே சித்தியோட பசங்கதானா? இல்ல அவங்களையும் வளர்க்குறாங்களான்னு தெரியல.

நாங்க எல்லோரும் அண்ணன் தங்கச்சியாதான் பழகிட்டு வர்றோம். ஆனா, வீட்டுல என்ன பிரச்சனை நடந்தாலும் அதுக்கு நாந்தான் காரணம்னு என்னை கார்னர் பண்ணிக்கிட்டே இருப்பாங்க சித்தி. அதேநேரம், சாமி கும்பிடுறதுல ஆரம்பிச்சு எந்த விசேஷம்னாலும் என்னைதான் செய்ய சொல்லுவாங்க. எங்க சித்தி பில்லி, சூனியம், மாந்தீரிகம்னு  மூட நம்பிக்கையில ரொம்ப அடிக்டா இருப்பாங்க” என்றபிறகு ஷாலினி சர்மா சொன்ன தகவல் திகிலூட்டுகிறது.

ஷாலினி சர்மா
ஷாலினி சர்மா

”அப்படித்தான், என் தம்பிக்கு 10 வயசா இருக்கும்போது சாமி கும்பிடவெச்சு அவனுக்கு கடைசியா என்னைத்தான் சாப்பாடு ஊட்ட சொன்னாங்க. மறுநாள் கோயிலுக்கு போறோம்னு தம்பியை கூட்டிக்கிட்டு போனாங்க. வரும்போது தம்பி இல்ல. கேட்டா தம்பி காணாம போயிட்டான்னு எந்தவித பதட்டமும் இல்லாம ரொம்ப சாதாரணமா சொன்னாங்க. உண்மையிலேயே காணாம போயிருந்தா போலீஸ்ல புகார் கொடுத்திருக்கணும் இல்லையா? ஆனா, இப்போவரை, போலீஸ்ல எந்த புகாரும் கொடுக்கல. தம்பி காணாம போனதா சொன்ன நான்கு நாட்களிலேயே எந்த வருத்தமும் தேடலும் இல்லாம சகஜமாகிட்டாங்க. அப்போதே, எனக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சது.

என்னை படம் பார்க்க சினிமாவுக்கு அனுப்பமாட்டாங்க. காலேஜ்,  வீடுன்னு ரொம்ப கட்டுப்பாடா இருப்பாங்க. எல்லா பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளை கட்டுப்பாடா வெச்சிருக்குற மாதிரி நம்ம சித்தியும் வளர்க்குறாங்கன்னு நினைச்சேன். ஆனா, என்னை நரபலி கொடுக்கப்போறாங்கன்னும் அதுக்காகத்தான் என்னை இவ்ளோ கட்டுப்பாடா வளர்க்கிறாங்கன்னும் தெரிஞ்சது” என்கிறவர், தனது சித்தி நரபலி கொடுக்கும் திட்டம் தனக்கு எப்படி தெரியும் என்பதையும் கூறுகிறார்,

ஷாலினி சர்மா
ஷாலினி சர்மா

“சித்தியோட ஃபோன்ல ரெக்கார்டிங் அதிகமானதால தேவையில்லாததையெல்லாம் என்னை டெலிட் பண்ணச் சொன்னாங்க. ஒவ்வொரு ரெக்கார்டிங்கா கேட்டு கேட்டு டெலிட் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போதான், ஒரு ரெக்கார்டிங்கை கேட்டு அதிர்ச்சியானேன். என்னை நரபலி கொடுக்கிறதைப் பற்றி அப்பாவோட தங்கச்சிக்கிட்ட சித்தி பேசிக்கிட்டிருந்ததை கேட்டுட்டேன். என்னால, எதுவுமே சொல்லமுடியல. அந்த நேரத்துல கொரோனா லாக் டவுன். அதனால, என்னால் எங்கேயுமே தப்பிக்க முடியல. நம்பள வளர்த்துட்டாங்க. அவங்களோட நம்பிக்கைக்காக உயிரைகூட கொடுத்துடுவோம்னு வேற வழியில்லாம இருந்தேன்.

அதன்பிறகு, ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியில் என்னையும் சித்தி சேர்த்துவிட்டாங்க. அப்போதான், ’காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பார்த்தேன். உண்மைய சொல்லணும்னா அப்போதான், படமே பார்த்தேன். அந்தளவுக்கு கட்டுப்பாடா வளர்த்தாங்க”என்கிறவர் தப்பித்து வந்த பின்னணியை விளக்குகிறார். 

”வீட்டுல அக்கா, தங்கச்சிங்களோட பேசும்போதே ஒருவித மாற்றம் தெரிஞ்சது. அப்போதான், இந்த சிவராத்திரியில என்னை பலி கொடுக்கப்போற விஷயம் தெரிஞ்சது.  தமிழ்நாட்டைச் சேர்ந்த  தட்சிணாமூர்த்தி போபாலில் சட்டப்படிப்பு படிச்சிட்டிருக்கார். ஏ.பி.வி.பி-யிலும் உறுப்பினரா இருக்கார். அவர் உதவியாலதான் தமிழகத்துக்கு தப்பி வந்தேன்” என்றவரை இடைமறித்து,

”நீங்கள் காதலித்ததால் தமிழகத்திற்கு ஓடிவந்ததாக உங்கள் சித்தி குற்றம் சாட்டி உங்களை ஒப்படைக்கக்கோரி புகார் கொடுத்துள்ளாரே?” என்று நான் கேட்டபோது,

ஷாலினி சர்மா
ஷாலினி சர்மா

 “இந்தமாதிரி பழியை போட்டா அவங்களோட கொலைக் குற்றம் வெளியில தெரியாதுன்னு நினைக்கிறாங்க. இந்த விஷயத்தை ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பிடமும் சொன்னேன். தட்சிணாமூர்த்திக்கிட்டேயும் சொன்னேன். பெரியார் பற்றியெல்லாம் எடுத்துச்சொல்லி தமிழ்நாட்டுக்கு போயிடு, உன் உயிரை காப்பாற்றுவாங்கன்னு சொன்னாங்க. அதனாலதான், இங்க வந்தேன். என்னை நரபலி கொடுக்கப்போறாங்கன்னு போபால் போலீஸிடம் புகார் கொடுத்தும் எங்க ஊரு போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அப்படின்னா, என்னோட சித்தி எவ்ளோ செல்வாக்கானவங்கன்னு யோசிச்சு பாருங்க. நான் தப்பித்து வரும்போது டெல்லிக்கு போற ட்ரெயின்ல செல்ஃபோனை தூக்கி வீசிட்டேன். மூணு மணிநேரத்துல ட்ரேஸ் பண்ணி செல்லை எடுத்துட்டாங்க.

நான், அந்த செல்ஃபோனை கையில வெச்சிருந்தா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சு பாருங்க. என்னைப்பற்றின செய்தியைத்தான் படிச்சிருப்பீங்க. நான் உசுரோடவே இருக்கமுடியாது.  நாங்க பிராமண சமூகம். துர்கா, காளி, சிவனையெல்லாம் எங்க சித்தி கும்பிடுவாங்க. என்னை நரபலி கொடுத்து இன்னும் செல்வ செழிப்பா வாழணும்னு ஆசைப்படுறாங்க. எங்க வீட்டுல எனக்கு யாரும் சப்போர்ட் கிடையாது. திரும்ப அங்க போனோம்னா நிச்சயமா என்னைக் கொன்னுடுவாங்க. இன்னும் நிறைய விஷயங்களை வெளிப்படையா என்னால சொல்லமுடியாது. எனக்கு ஆபத்தா முடியும். இப்போ, நான் தமிழ்நாடு வந்துட்டேன். இனிமே தமிழ்நாடுதான் என் ஊரு. மத்திய பிரதேசம் போகமாட்டேன். இங்க வந்தபிறகுதான் நிம்மதியா இருக்கு. பாதுகாப்பா உணர்றேன். பெரியார் மண்தான் என் உயிரைக் காப்பாத்துனது.

நியூட்ரிஷியன் படிப்பு படிச்சிருக்கேன். ஆங்கிலமும் இந்தியும் நல்லா தெரியும். அதைவெச்சு இங்கேயே வேலை செஞ்சு பொழச்சுப்பேன். பெரியார் மண் எனக்கு துணையா இருக்கும். பெரியார் கொள்கைகளை படிக்கணும். தமிழகத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குத்தான் என்னோட நன்றியை சொல்லணும்” என்கிறார் அதிர்ச்சி விலகாமல்..