ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு விருது வழங்கினார்.
சிறை, தனிமனிதர்களை மட்டுமல்ல... குடும்பங்களையும் நிர்மூலமாக்கிவிடுகிறது. உணர்ச்சி வேகத்தில் குற்றமிழைத்து ஒருமுறை சிறைசென்று வந்தவர்கள் சமூகத்தின் பார்வையில் வாழ்நாள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள். அப்படி ஒதுக்கப்படும் மனிதர்களின் மறுவாழ்வுக்காகவும் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் நடந்துகொண்டிருக்கிறார் ராஜா.