Published:Updated:

கள்ளக்குறிச்சி: உயிரிழந்த தந்தை, கண்ணீருடன் 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவி - நெகிழ்ச்சி சம்பவம்!

மாணவி

தந்தை உயிரிழந்த நிலையில், மாணவி ஒருவர் கண்ணீருடன் சென்று 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த தாசர்புரத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு முருகதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மகளான திலகா, அரசு உதவிப்பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

உறவினர்களுடன் மாணவி
உறவினர்களுடன் மாணவி

கடந்த 6-ம் தேதி அன்று பத்தாம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்றைய தினம் ஆங்கிலம் மொழித்தேர்வு நடைபெற்றது. தந்தை உயிரிழந்த துக்கத்திலிருந்த திலகா, இன்று காலை தந்தையைக் கட்டி அணைத்து அழுதுவிட்டு, பொதுத்தேர்வுக்குச் சென்றார். அதனைப் பார்த்த உறவினர்கள், கண்களில் தானாகக் கண்ணீர் ஊற்றெடுத்தது. அந்த மாணவியை உறவினர்கள் கட்டித்தழுவியபடி, 'நல்லபடியா பரீட்சையை எழுதணும்' எனக் கூறி அனுப்பி வைத்தனர். 

தேர்வு எழுத சென்ற மாணவி
தேர்வு எழுத சென்ற மாணவி

தந்தை உயிரிழந்த நிலையில், கண்கள் கலங்கியபடியே மாணவி தேர்வுக்குச் சென்ற காட்சிகள் காண்போரைக் கண் கலங்க வைத்ததோடு, நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.