Published:Updated:

கறிவேப்பிலையை இப்படி சமைத்து சாப்பிட்டால் செரிமானம் சிறப்பா இருக்கும்! | My Vikatan

Representational Image

எங்கள் வீட்டில் வளவனூரில் கறிவேப்பிலை மரமே உண்டு. அம்மா வாரத்திற்கு மூன்று நாட்கள் கறிவேப்பிலையை பிரதானமாகக் கொண்டு சமையல் செய்து அசத்துவார். அவர் செய்து நான் சாப்பிட்ட சில ரெசிபிகள் இதோ..

Published:Updated:

கறிவேப்பிலையை இப்படி சமைத்து சாப்பிட்டால் செரிமானம் சிறப்பா இருக்கும்! | My Vikatan

எங்கள் வீட்டில் வளவனூரில் கறிவேப்பிலை மரமே உண்டு. அம்மா வாரத்திற்கு மூன்று நாட்கள் கறிவேப்பிலையை பிரதானமாகக் கொண்டு சமையல் செய்து அசத்துவார். அவர் செய்து நான் சாப்பிட்ட சில ரெசிபிகள் இதோ..

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கறிவேப்பிலையைத் தினமுமே ஒரு கைப்பிடி அளவு உணவில் சேர்த்துக் கொள்ள, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும். ஜீரண சக்தி மேம்படும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகை ஏற்படாது.

எங்கள் வீட்டில் வளவனூரில் கறிவேப்பிலை மரமே உண்டு. அம்மா வாரத்திற்கு மூன்று நாட்கள் கறிவேப்பிலையை பிரதானமாகக் கொண்டு சமையல் செய்து அசத்துவார். அவர் செய்து நான் சாப்பிட்ட சில ரெசிபிகள் இதோ..

*வாசமான கறிவேப்பிலை கஞ்சி.

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை போட்டு மூடி விடவும். சில நிமிடங்கள் கழித்துத் திறந்தால், கறிவேப்பிலையின் சாறு முழுவதும் நீரில் இறங்கி, தண்ணீர் பச்சை நிறமாக இருக்கும். கறிவேப்பிலையை வடிகட்டி எடுத்துவிட்டு, அந்த நீரில் புழுங்கல் அரிசி ரவையை (அரை கப்) வேகவிடவும். நன்கு குழைய வெந்ததும் இறக்கி ஆறியதும் தேவையான உப்பு மற்றும் ஒரு டம்ளர் மோர் சேர்த்து குடிக்க உடல் மிதப்பதைப் போல் உணரலாம்.

Representational Image
Representational Image

*கட்டாமிட்டா கறிவேப்பிலை தொக்கு.

பெரிய எலுமிச்சை அளவு புளி, காய்ந்த மிளகாய் 12 ஒன்றாக சேர்த்து சிறிது நீர் விட்டு ஊறவைத்து அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு கடுகு தாளித்து.. சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை விழுது சேர்த்து நன்கு கிளறவும் வாணலியில் ஒட்டாமல் வரும் சமயம் தேவையான உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.

வெறும் வாணலியில் வறுத்து அரைத்த கடுகு பொடி ஒருடீஸ்பூன் தூவிக் கிளறி சூடான இட்லியுடன் பரிமாறவும். அல்லது இந்த தொக்கை சூடான சோற்றில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். சுவையில் அசத்தும் இந்த "கட்டா மிட்டா கறிவேப்பிலை தொக்கு'

Representational Image
Representational Image

*கறிவேப்பிலை சோறு.

எப்பப் பாரு புளி சாதம் எலுமிச்சை சாதம் தானா? ன்னு பிள்ளைகள் கேட்கிறார்களா? இதோ ஒரு மாறுதலுக்கு கறிவேப்பிலை சாதம் செய்து தாருங்கள் பிறகு வாரம் ஒரு முறை இந்த சாதத்தைத்தான் செய்யச் சொல்லி உங்களை வற்புறுத்துவார்கள்.

மிளகு, கசகசா தலா- ஒரு டீஸ்பூன் , சீரகம்- 2 டீஸ்பூன், முந்திரி- ஆறு, கறிவேப்பிலை -ஒரு கப் ,தேங்காய் துருவல்- இரண்டு டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் -ஆறு இவற்றை வெறும் வாணலில் வறுத்தெடுத்து பொடித்துக் கொள்ளவும். (கறிவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து வெறும் வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்)

எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன் இரண்டையும் சேர்த்து காயவைத்து...கடுகு ,உளுந்து ,கடலை பருப்பு தலா ஒரு டீஸ்பூன்சேர்த்து தாளிக்கவும்.

Representational Image
Representational Image

உதிர் உதிராக வடித்த சோறு இரண்டு கப் எடுத்துக்கொண்டு அதில் பொடித்த பொடி, தாளிதக் கலவை ,தேவையான உப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும். தொட்டுக் கொள்ள உருளை பொடிமாஸ் ஜோர் ஜோர்.


*அம்மியில் அரைக்கும் துவையல்


இரண்டு கைப்பிடி கறிவேப்பிலையை நன்கு அலசி நீர் இல்லாமல் நன்கு உலர விடவும் . வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, எட்டு காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வறுத்து, பிறகு கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்கி கடைசியாக ஒரு கப் தேங்காய் துருவல், பெரிய நெல்லிக்காய் அளவு புளி , தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி ஆற விட்டு அம்மியில் அரைத்து எடுக்க சுவையில் அசத்தும் இந்த துவையல். மிக்ஸியிலும் அரைக்கலாம் .அம்மியில் அரைத்தால்கூடுதல் சுவை அவ்வளவுதான்.. இப்படி.. ஏதேனும் ஒரு வகையில் கறிவேப்பிலையை நம் உடலில் சேர்த்துக் கொள்ள... "இளமை... இதோ இதோ" !என்று பாடலாம்.


என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.