வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மனநலம் என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். நம்முடைய மனநலம் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாம் எதை வேண்டும் என்றாலும் சிறப்பாக செய்ய முடியும்.
உங்களுக்கு அந்த மாதிரி மனநல பிரச்சினைகள் அல்லது ஒருவித மகிழ்ச்சி இல்லாத தருணமாக உணர்வது, அல்லது எப்பொழுதும் ஒரு இறுக்கமான மனநலையை உணர்ந்தால், அதிலிருந்து வெளி வர பெரிய விஷயங்கள் எல்லாம் ஒன்றும் வேண்டாம்.
சின்ன சின்ன விஷயங்கள் தாம். முயற்சி செய்து பாருங்கள்:
1. மொபைல் போன்கள் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்; எந்நேரமும் சோஷியல் மீடியாவில் இருப்பது, மனநல பிரச்சினைகளில் முக்கியமானதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

2. உங்கள் மனதுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் மனநிலைகளில் என்ன குழப்பங்கள் இருக்கோ, அதை வெளிப்படையாக பேசுங்கள்; அவர் உங்களுடைய நம்பிக்கைக்கு உரியவராக இருப்பாரா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
3. சுற்றுலா தலங்களுக்கு செல்லுங்கள். பிடித்தமான இடங்களில் நின்று மகிழ்ச்சியான புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை என்பது மனதை அமைதிபடுத்த கூடிய மிக முக்கியமான பங்களிப்பை செய்கின்றது.
4. காக்கா, குருவிகள், புறா உள்ளிட்ட பறவைகளுக்கு உணவளியுங்கள்; அதுகூடும் இடங்களில் தாகத்திற்கு நீர் வையுங்கள்.
5. உங்களிடம் இருக்கும் பொருட்களில் தேவைக்கு போக, மிஞ்சியது இருந்தால், இல்லாதவர்களுக்கு தேடிச்சென்று கொடுங்கள். இது நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை உணர வைக்கும்.

6. நீங்கள் செல்லும் வழிபாட்டு தளங்களில் நிற்கும் வழிப்போக்கர்களுக்கு அதிகமதிகம் தான தர்மங்கள் செய்யுங்கள்.
7. உங்களுக்கென்று நல்ல நட்பு வட்டங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் நல்லது கெட்டது எதுவென்றாலும் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
8. நீங்கள் விரும்பிய புத்தகங்களை அல்லது பக்தி நூல்களை தினமும் குறைவான நேரம் வாசித்தாலும், அதை தினமும் செய்யுங்கள்.
9. தினமும் காலை உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமான விளையாட்டை விளையாடுங்கள்.

10. வாய்ப்புகள் இருந்தால் வீட்டில் பறவைகள் வளருங்கள் அல்லது இடவசதி இருந்தால் மாடித்தோட்டம் அமையுங்கள்.
இதுவெல்லாம் மன அழுத்தத்தை குறைத்து, மன நிம்மதியை தரக்கூடிய எளிய வழிமுறைகள் ஆகும். வாய்ப்பிருந்தால் இதை நீங்கள் பின்பற்றி, மன அழுத்தம், மனச்சோர்வு மனக்கவலைகளில் இருந்து நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை பெறுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.