Published:Updated:

இவர்தான் ரியல் 'மெலடி கிங்'! - சிலாகிக்கும் 70ஸ் கிட்| My Vikatan

இசையமைப்பாளர்தான் வி. குமார்

இந்திய மற்றும் மேற்கத்திய இசைக் கருவிகளைக் கலந்து பயன்படுத்திய இவரின் இசை மாறுபட்ட மெல்லிசை. தனக்கென்று ஒரு தனி பாணியுடன் ஒரு இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கி , எண்ணற்ற வெற்றி பாடல்களை செவிக்கு இனிய கீதங்களாகத் தந்தவர்.

Published:Updated:

இவர்தான் ரியல் 'மெலடி கிங்'! - சிலாகிக்கும் 70ஸ் கிட்| My Vikatan

இந்திய மற்றும் மேற்கத்திய இசைக் கருவிகளைக் கலந்து பயன்படுத்திய இவரின் இசை மாறுபட்ட மெல்லிசை. தனக்கென்று ஒரு தனி பாணியுடன் ஒரு இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கி , எண்ணற்ற வெற்றி பாடல்களை செவிக்கு இனிய கீதங்களாகத் தந்தவர்.

இசையமைப்பாளர்தான் வி. குமார்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இசை உலக ஜாம்பவான்களான கே வி .மகாதேவன் எம்எஸ். விஸ்வநாதன் என்ற சிகரங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் 'நீர்க் குமிழி' படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர்தான் வி. குமார் அவர்கள்.

இந்திய மற்றும் மேற்கத்திய இசைக் கருவிகளைக் கலந்து பயன்படுத்திய இவரின் இசை மாறுபட்ட மெல்லிசை. தனக்கென்று ஒரு தனி பாணியுடன் ஒரு இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கி, எண்ணற்ற வெற்றி பாடல்களை செவிக்கு இனிய கீதங்களாகத் தந்தவர். இவரின் மனைவி திருமதி கே ஸ்வர்ணா அவர்களும் ஒரு சிறந்த பின்னணி பாடகி. ஏறக்குறைய 150 படங்கள் வரை இசையமைத்திருக்கும் வி குமாரின் தேனினும் இனிய எண்ணற்ற கீதங்களை இவர் இசையமைத்தது என்று தெரியாமலேயே வானொலியில் கேட்டு மகிழும் ரசிகர்கள் இன்றளவும் உண்டு. அவர் இசை அமைத்த பாடல்களில் (எனக்கு) மிகவும் பிடித்த சில பாடல்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்

1. எதிர்நீச்சல் (1968) பி பி ஸ்ரீனிவாஸ் சுசீலா அம்மாவின் இனிய குரல்களில்

"தாமரை கன்னங்கள்

தேன் மலர் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள்

முத்தமாய் சிந்தும் போது

பொங்கிடும் எண்ணங்கள்.."

வாலியின் வைர வரிகள் காதலின் இனிமையை வார்த்தைகளால் சொல்ல, அதை அனுபவித்து இசையமைத்திருப்பார் வி குமார். மனம் வேதனையாக இருக்கும்போது இது போன்ற பாடல்களைக் கேட்க ,'இதுவும் கடந்து போகும்' என தோன்றும்.

"காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் எவ்வளவு அழகான வார்த்தை பிரயோகிப்பு.

"மாலையில் சந்தித்தேன்

மையலில் சிந்தித்தேன்

மங்கை நான் கண்டித்தேன்

காதலன் தீண்டும் போது

கைகளை மன்னித்தேன்... என்ன ஒரு அழகான வர்ணனை. (பாடலின் ஆரம்பத்தில் நாகேஷ் ஒரு அற்புதமான நடை நடப்பார் உற்று கவனித்தால் தெரியும்)

வி. குமார்
வி. குமார்

2. நவகிரகம் (1970 எஸ்பிபி சுசீலாம்மாவின் குரலில்

"உன்னை தொட்ட காற்று வந்து

என்னை தொட்டது

அதுவே போதும் போதும்

என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டது...."

பாடலின் ஆரம்ப ஹம்மிங்கை பாலு ஸார் தொடர, அற்புதமான இசையோடு இணையும் சுசீலா அம்மாவின் குரல் அழகு. எப்போது கேட்டாலும் புத்தம் புதியது போல் இருப்பதுதான் இந்த பாடலின் வெற்றிக்கு காரணம்.

"உன்பாதம் தொட்ட அலைகள் வந்து என் பாதம் தொட்டது" சிவகுமாரின் கால் பாதங்களை தொட்டு கடந்து வரும் அலை லட்சுமியின் கால்களைத் தொட்டு மறைந்து போகும் காட்சி கவிதை.

வி குமாரின் இசையில் வீணையின் நாதம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். ( எஸ்பிபி யின் ஆரம்ப ஹம்மிங் வேற லெவல்)

"மழை தூறல் போட்டு

சாரல் வந்து உன்னை நனைத்தது..

அது உன்னை நனைத்து தெறித்த போது

என்னை நனைத்தது.."வாலி சாரின் குறும்பு தனமான வரிகள் ரசிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?

3. ராஜநாகம் (1974)(எஸ் பி பி சுசீலா, வாலி ,வி குமார் கூட்டணியில் உருவான அற்புதமான பாடல்.

"தேவன் வேதமும் ,

கண்ணன் கீதையும்

ஒரு பாதையில் இங்கு சங்கமம்...

"மாதாவின் வாழ்த்துக்கள்

மணியோசை சொல்லட்டும்

காதல் வாழ்க என்று..".. இன்றளவும் நம் நெஞ்சை விட்டு அகலாத இந்தப் பாடலின் வெற்றிக்கு இதன் இசையே காரணம். .இலங்கை. வானொலியில் இப்பாடல் ஒலிபரப்பாகாத நாட்களே இல்லை எனலாம். அருமையான மெலடி.

"நீ வேறு நான் வேறு அன்று

நீ இன்றி நான் இல்லை இன்று..."

தொலைநோக்குப் பார்வையான வரிகள்...

மதங்களை இணைத்த அழகிய இப்பாடலை கேட்க நாமும் வி குமாரின் இசையில் சங்கமம் ஆகி இருப்போம்.

இசையமைப்பாளர்தான் வி. குமார்
இசையமைப்பாளர்தான் வி. குமார்

4. எல்லோரும் நல்லவரே (1975)

படைத்தானே பிரம்மதேவன்

16 வயது கோலம்

இது யார் மீது பழி வாங்கும் சோதனை

உனை காண்போர்க்கு சுகமான வேதனை..."

பழைய நினைவலைகளை தூண்டக்கூடிய அருமையான பாடல். எஸ்பிபி யின் மயக்கும் குரல் மாயாஜாலம் நிகழ்த்தும். வரிகளின்(புலமைப்பித்தன்) அர்த்தங்கள் புரிந்து மென்மையான இசையை கசிய விட்டிருப்பார் வி. குமார்.

இனிய கானம். ரம்யமான பாடல்.

5. மிட்டாய் மம்மி (1976) டி எம் எஸ் - சுசீலா ம்மா

"திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்.

சிலை போன்ற மாறன்

துணைகாண வந்தாள்..."

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் .இந்த பாடல் ஒளிப்பதிவின்போது வைத்த பெயர் 'மிட்டாய் மம்மி 'பின்னாளில் படம் வெளியீட்டின் போது' தெய்வம் தந்த வீடு 'என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். இசைத்தட்டில் 'மிட்டாய் மம்மி' என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். இனிமையான இந்த பாடலுக்குமெய் மறந்து இசை அமைத்திருப்பார் வி.குமார். நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த பாடல். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் ஒன்று .

P.Susheela
P.Susheela

6. நல்ல பெண்மணி (1976)

கே ஜே ஜேசுதாஸ் ஸ்வர்ணா(திருமதி வி குமார்) குரலில்

"இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் எழுத்துக்களில் இருக்கும் அந்த

மெல்லினம்..

மனதுக்குள்ளே இருக்கும் ஆசை

வல்லினம் -

என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம்

இடையினம்... " இதயத்தில் நுழைந்து இளமையை திரும்பி பார்க்க வைக்கும்.. தமிழ் இலக்கணத்தோடு, இல்லற இலக்கணமும் இணைத்து இனிமையான இசையை கொடுத்திருப்பார் வி குமார்.

பெண்ணினம் "மெல்லினம், வல்லினம், இடையினம், பட்டினம், பூவினம் மீன் நூலினம் தரிசனம் சந்தனம் தேனினம் ,ஓரினம், அஞ்சனம் ,நூதனம்,.. புலமைப்பித்தன் அவர்களின்"னம்" வரிசை அருமையோ அருமை.

"தாங்காது கண்ணா என் தளிர் மேனி

பூவினம்

தூங்காத கண்கள் உன் துணை தேடும்

மீனினம்' அற்புதமான பாடல் வரிகள்.... வி குமாரின் அமைதியானஇசையில் மலர்ந்த இந்த பாடலுக்கு "மகுடிக்கு பாம்பு மயங்குவது போல்' மனசு மயங்கும்.(ஸ்ரீவித்யாவின் கண்கள் கவிதை பேசும்)...

(பாட்டு ன்னா ...இசை ன்னா ...இந்த பாடல் தாங்க!)

7 தூண்டில் மீன் (1976)

பி ஜெயச்சந்திரன் - கே ஸ்வர்ணா

."என்னோடு என்னென்ன ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம். சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ..."

1970 காதலர்கள் கொண்டாடிய ஒரு பாடல். புதுமண தம்பதிகள் கேட்க வேண்டிய பாடல் . .வி.குமாரின் கான இசை நம் இதய வீணையை மீட்டும் .அந்த கிடாரின் இனிய ரிதத்தைக் கேட்டுப் பாருங்கள்.. என்ன ஒரு மென்மை! இந்தப் பாடலின் ராகமும் ,,இசையும் நம்மை அப்படியே வானிலே மிதக்க வைக்கும்.

பாடலில். பெண் குரலின் இனிமையும், ஆண் குரலின் கம்பீரமும்.... பாராட்ட வார்த்தைகளே இல்லை!

இந்தப் பாடல் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்யம் காதல் ,புரிதல்... இப்படி பல பரிணாமங்களில் மின்னும்.இந்தப் பாடலுக்கு உணர்வு பூர்வமாய் இசை அமைத்திருப்பார் வி.குமார்.(பாடலில் லட்சுமியின் முகபாவனை மிக அருமையாக இருக்கும்) ஒரு முறை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.

தூண்டில் மீன்
தூண்டில் மீன்

8.அன்னபூரணி(1978) கே ஜே ஜேசுதாஸ்.

"உன்னைபார்க்க வேண்டும்

ரசிக்க வேண்டும்

பழகவேண்டும்

பேச வேண்டும்

எத்தனையோ ஆசை இந்த மனசிலே ..அது என்னவென்று எடுத்துச் சொல்ல தெரியல.

ஐடோண்ட் நோ...ஐலவ்யூ... காண கந்தர்வனின் குரலில் பட்டையைக் கிளப்பிய பாடல்.

மனதை மயக்கும் துள்ளல் இசை பாடல்.பாடலின்இசை அப்படியே நம்மை கட்டி போட்டு விடும்.. நம்மை மறந்து பாடலை கேட்க கேட்க நாமும் கூடவே பாடுவோம் அதுதான் இந்த பாடலின் வெற்றி.

9. இவள் ஒரு சீதை (1978) பாடும் நிலா பாலு.

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் 18

அவள் பழமுதிர்சோலையில்

தாமரைப் போலே மலர்ந்தது

ஒரு மொட்டு.."கண்ணதாசனின் வரிகளுக்கு(இந்தப் பாடலை வெறும் ஐந்து நிமிடத்தில் எழுதியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருப்பார் கண்ணதாசன் அவர்கள்) வி குமார் அற்புதமாய் இசையமைக்க எஸ்பிபி மிக அருமையாக பாடியிருப்பார்.

எஸ்பிபியின் இளமையான குரலில் பாடல் ச்சும்மா பட்டையைக் கிளப்பும். பாடல் முழுதும் ஹார்மோனியம் தென்றலாய் தவழ்ந்து... நம்மை உரசிச் செல்லும்.

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் பாடல்
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் பாடல்

10. நாடகமே உலகம் (1979)

எஸ்பிபி மற்றும் வாணி அம்மா பாடிய ,"

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்

சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்

நடமாடும் கலைக்கூடம்

விழி ஜாலத்தில் உருவானதோ... அந்த காலத்தில் சிலோன் ரேடியோவின் அபிமான பாடல் இது என்றே சொல்லலாம். வி.குமார் அவர்களின் தாலாட்டும் இசையில் எஸ்பிபி மெய் மறந்து பாடி இருப்பார்.

இப்படி கம்ப்யூட்டர் வராத காலத்தில் மெல்லிசையால் எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் வி. குமார் அவர்கள். அவரது இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் நெஞ்சை மட்டும் அல்ல விண்ணையும் தொடும்!

நீங்களும் இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கும் மிகவும் பிடிக்கும். உண்மையிலேயே மெலடி கிங் என்றால் வி. குமார் தான்.. சந்தேகமே இல்லை.

ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதமாய்... மயிலிறகால் வருடிச் செல்லும்.

இறந்து புதைந்த சில அழகிய நினைவுகள்

சில பாடல்களைக் கேட்கும்போது மட்டுமே மீண்டும் உயிர் பெறும்.. அப்படித்தான் வி குமார் அவர்கள் இசையமைத்த பாடல்களைக் கேட்கும் போதும். ஏதேதோ அழகிய நினைவுகள்...!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.