Published:Updated:

தக்காளி இருக்கையில் எனக்கென்ன கவலை! | இல்லத்தரசி பகிர்வுகள் | My Vikatan

Representational Image

தினமும் தக்காளி சட்னி, தக்காளி சாதம் மட்டும் செய்தால் போதுமா!? தக்காளியைக் கொண்டு வெரைட்டியான ஐட்டங்கள் சமைத்து வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இனிப்போடு கொண்டாடுவோம் அதுதானே நம் பழக்கம் இதோ ஜாமில் இருந்து ஆரம்பிப்போம் வாங்கள்..

Published:Updated:

தக்காளி இருக்கையில் எனக்கென்ன கவலை! | இல்லத்தரசி பகிர்வுகள் | My Vikatan

தினமும் தக்காளி சட்னி, தக்காளி சாதம் மட்டும் செய்தால் போதுமா!? தக்காளியைக் கொண்டு வெரைட்டியான ஐட்டங்கள் சமைத்து வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இனிப்போடு கொண்டாடுவோம் அதுதானே நம் பழக்கம் இதோ ஜாமில் இருந்து ஆரம்பிப்போம் வாங்கள்..

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

காய்கறி விலைகள் இறக்கை கட்டி பறக்கிற நாட்களில் கூட மலிவான விலையில் மனம் போல் கிடைப்பது அழகான தக்காளி மட்டும் தான். இப்போது கிலோ பத்து ரூபாய்க்கு கிடைக்க ஆரம்பித்து விட்டது. எங்கு திரும்பினாலும்,' தக்காளி'" தக்காளி" கிலோ மூன்று கிலோ 25 ரூபாய் என்ற கூக்குரல் தான். அதற்காக தினமும் தக்காளி சட்னி, தக்காளி சாதம் மட்டும் செய்தால் போதுமா!? தக்காளியைக் கொண்டு வெரைட்டியான ஐட்டங்கள் சமைத்து வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள்.

தக்காளியில் வைட்டமின்கள் கால்சியம் இரும்பு சத்து உட்பட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இனிப்போடு கொண்டாடுவோம் அதுதானே நம் பழக்கம் இதோ ஜாமில் இருந்து ஆரம்பிப்போம்.

Representational Image
Representational Image

தக்காளி ஜாம்

மிக்ஸியில் அடித்து வடிகட்டிய தக்காளி ஜூஸ் இரண்டு கப் சர்க்கரை ஒரு கப் சிட்ரிக் ஆசிட் கால் டீஸ்பூன் மூன்றையும் அடி கனமான வாணலியில் கொட்டி மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருங்கள்‌ பாகுபதத்தில் வந்ததும் (தட்டில் விட்டால் முத்து போல் விழும்) இறக்கி தேவை எனில் ரெட் கலரிங் பவுடர் ஒரு சிட்டிகை, ரோஸ் எசன்ஸ் ஒரு டீஸ்பூன் விட்டு நன்கு கலக்கி ஒரு கண்டெய்னரில் எடுத்து வைக்கவும். சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற பிரமாதமான ஜாம் இது..

*தக்காளி பாஸ்தா

இரண்டு தக்காளியை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும் ஒரு வானலியில் தேவையான தண்ணீர் மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 100 கிராம் பாஸ்தாவை அதில் போட்டு மூடி வைத்து வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில்ல் எண்ணெய் விட்டு சூடாக்கி நாலு பூண்டு பற்கள் ,இரண்டு பச்சை மிளகாய் (கீறிய) மற்றும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும் .பிறகு இதனுடன் சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக இதனுடன் வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி இறக்க சூடான, வித்தியாசமான சுவையில்" தக்காளி பாஸ்தா" ரெடி .

Representational Image
Representational Image

*தக்காளி நூடுல்ஸ் பௌல்

நன்கு சிவந்த கெட்டியான ஐந்து பெங்களூர் தக்காளிகளை கூரிய கத்திக் கொண்டு அழகான க்யூட்டான கூடைகளாக வெட்டி உள்ளிருக்கும் சதையை தக்காளி உடையாமல் எடுக்கவும். அரை பாக்கெட் நூடுல்சை மூன்று டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடம் வேக விட்டு நீரை வடித்து, பிறகு குளிர்ந்த நீரில் நன்கு அலசவும். வானொலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், +வெங்காயம் ஒன்று கேரட் ஒன்று பீன்ஸ் மூன்று மெல்லியதாக நீளமாக நறுக்கவும்) நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

கடைசியாக கால் டீஸ்பூன் மிளகுத்தூள் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு சேர்த்து கிளறி இறக்கவும். இதனை தக்காளி கூடைக்குள் அடைத்து, அதன் மேல் சீஸ் துருவலை (சீஸ் துருவல் நாலு டீஸ்பூன்)பரவலாக வைத்து மூடவும் தவாவை அடுப்பில் காயவைத்து மிதமான தீயில் அதன்மேல் தக்காளி கூடைகளை அடுக்கி மூடி போட்டு பத்து நிமிடம் வைத்து எடுக்கவும்.

(தக்காளியின் அடிப்பகுதியில் லேசாக வெட்டி எடுத்து விட்டால் தவாவில் வைக்கும் போது ஆடாமல் நிற்கும்)

(காய்கறிகளுக்கு பதில் சோயா கிரானுல்ஸ் வைத்தும் சாப்பிடலாம்)

சாப்பிட மட்டுமல்ல பார்க்கவும் மிகவும் அழகாக இருக்கும்.

ஆம்லெட் என்றால் எப்ப பாரு முட்டையில் மட்டும் தான் செய்ய வேண்டுமா? என்ன? இதோ

"தக்காளி ஆம்லெட்" உங்களுக்காக

இரண்டு வெங்காயம், இரண்டு தக்காளி, மல்லித்தழை சிறிதளவு எல்லாவற்றையும் மிகவும் பொடியாக நறுக்கவும். கடலை மாவு பொட்டுக்கடலை மாவு தலா அரைக்கப் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,தக்காளி, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், சீரகத்தூள் அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் சிட்டிகை, தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் நன்கு கரைக்கவும்.

தக்காளி இருக்கையில் எனக்கென்ன கவலை! | இல்லத்தரசி பகிர்வுகள் | My Vikatan

அடுப்பில் தோசை கல்லைகாய வைத்து, சிறிதளவு எண்ணெய் தடவி மாவை சின்ன சின்ன ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்து பரிமாற, சுவையில் சொக்கிப் போவார்கள் .

குழந்தைகளுக்கு பனீர் பிடிக்கும் அல்லவா! இதோ பனீரும் தக்காளியும் சேர்ந்து ஒரு ஸ்நாக்ஸ்..

சிவப்பு தக்காளி 4 ,பனீர் 200 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம்- கால் கப் இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் தனி மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு ,கரம் மசாலாத்தூள்- கால் டீஸ்பூன், மைதா மாவு- அரைக்கப்,

பிரட் தூள் -தேவையான அளவு

உப்பு -சிறிதளவு எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

பனீரை துருவிக் கொள்ளவும் தக்காளியை நான்கு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கவும் அதனுள் உள்ள விதைப் பகுதியை எடுத்து தனியாக வைக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக கிளறி தக்காளி விதை மற்றும் பனீர் சேர்த்து சுருள கிளறி இறக்கவும். மைதா மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தக்காளி துண்டுகளை பனீர் கலவையில் நிரப்பி, மைதா கரைசலில் முக்கி எடுத்து நன்கு பிரட் தூளில் புரட்டி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் புரட்டி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அருமையான ஹோட்டல் சுவையில் அசத்தலான ஸ்நாக்ஸ் ரெடி.

Representational Image
Representational Image

*வெளிய போயிட்டு ரொம்ப டயர்டா வரீங்க . இரவு உணவுக்கு இட்லியும் தொட்டுக்க பொடியும் வைத்துவிடலாம்ன்னு நினைக்கிறீங்க... ஆனா உங்க வீட்ல அலுவலகத்திலிருந்து ரொம்ப பசியா வர்றாங்க. டிஃபன்...இட்லியா? தொட்டுக்க இட்லி பொடியா...? அப்படின்னு .. ரொம்பவே ஷாக்காயிடுகிறார் .ப்ளீஸ் ஒரு சட்னி அரைச்சு குடுப்பா... அப்படின்னு."ப்பா"... ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள இந்த சட்னியை நீங்க அரைச்சிடலாம்.

*ஒன் மினிட் சட்னி

நாலு தக்காளி 1 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள் ,ஒரு டேபிள் ஸ்பூன் புளி கரைசல் சிட்டிகை மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் .

பச்சை மிளகாய் இரண்டு எடுத்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு- தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து, கீறிய பச்சை மிளகாய், ஒரு ஆர்க்கு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.கலவை சற்று கெட்டியானதுடன் இறக்கவும். 5 நிமிடத்தில் மணக்க மணக்க தயாரான தக்காளி சட்னியுடன் ஆவி பறக்கும் இட்லியை வைத்து பரிமாற கணவர் பார்வையிலே நன்றி சொல்லுவார்.

வெரைட்டியான தக்காளி ரெசிபிகளை செய்து குடும்பத்தினரின் நாவுக்கு ருசியையும், உடலுக்கு உறுதியையும் வழங்குங்கள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.