Published:Updated:

மினி மஷ்ரூம் டோஸ்ட்!

மித்ரா படங்கள் : எம்.உசேன் மாடல்: சான்யா

உங்களுக்கு மஷ்ரூம் பிடிக்குமா ஃப்ரெண்ட்ஸ்? மஷ்ரூம், ஃப்ரெஷ் க்ரீம் எல்லாம் வெச்சு, டேஸ்ட்டியா ஒரு டோஸ்ட் செய்யக் கத்துத்தர்றாங்க திவ்யா ஆன்ட்டி.

தேவையானவை: பட்டன் காளான் - 200 கிராம், வெண்ணெய் - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 சிட்டிகை, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் - (அலங்கரிக்க) சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, வெள்ளை பிரெட் ஸ்லைஸ் - 4 முதல் 6 வரை.

செய்முறை:வெங்காயம், மஷ்ரூம் ரெண்டையும் பொடியாக நறுக்கிக்குங்க. பிரெட்டை, வட்ட வடிவ ஸ்லைஸா கட் பண்ணி எடுத்துக்குங்க. ஒரு நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வெச்சு, ஒரு டீஸ்பூன் வெண்ணெய் போட்டு, நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு, ரெண்டு நிமிஷம் கிளறுங்க.

மினி மஷ்ரூம் டோஸ்ட்!

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய மஷ்ரூமைச் சேர்த்து, துளி உப்புப் போட்டு வதக்குங்க.
 
பிறகு, அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், வெங்காயத்தாள் எல்லாத்தையும் சேர்த்துக் கிளறணும்.

மஷ்ரூம் வதங்கும்போது, உண்டாகும் தண்ணீர் வத்தினதும், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலந்து, கெட்டியாக வரும் வரை கிளறுங்க. கெட்டியானதும் இறக்கி ஆறவிடுங்க. இதுதான் பிரெட் டோஸ்ட்டின் டாப்பிங்.

இப்போ, பிரெட் ஸ்லைஸை எடுத்து, தோசைக்கல்லில் அல்லது டோஸ்ட்டரில் போட்டு, க்ரிஸ்பியா வரும் வரை டோஸ்ட் பண்ணுங்க. நல்லா டோஸ்ட் ஆனதும் எடுத்து, அதன் மேல் மஷ்ரூம் மசாலாவைவெச்சு, அதுக்கு மேல துருவிய சீஸ் கொஞ்சம், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் கொஞ்சம் தூவி, ஃப்ரெண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க!

இதே மஷ்ரூம் மசாலாவை, நீங்க செய்ற சாண்ட்விச்சுக்கும் யூஸ் பண்ணிக்கலாம்.