மித்ரா, ஆ.முத்துக்குமார்
'முட்டை எல்லோருக்கும் ஃபேவரைட். சத்தான உணவு. வீட்ல தோசை மாவு இருந்தா போதும். முட்டையை உடைச்சு ஊத்தி, அதில் கொஞ்சம் கேரட் போட்டு, சூப்பரா ஒரு பணியாரம் செய்யலாம்’ என்கிறார், கிச்சன் இளவரசி ரித்திகா.

முட்டைப் பணியாரம்!
தேவையானவை: முட்டை - 3, தோசைமாவு - 3 குழிக்கரண்டி, மிளகுத் தூள் ஒரு டீஸ்பூன், துருவிய கேரட் -7 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் காரம் தேவைக்கேற்ப, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை:

தோசை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்குங்க.
இன்னொரு பாத்திரத்தில் முட்டைகளை உடைச்சு ஊத்தி, உப்பு மற்றும் மிளகுத் தூள் போட்டு, நல்லா அடிச்சுக்குங்க. இதில், கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சேர்த்து, தோசை மாவில் போட்டு கலந்துக்குங்க.
குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வெச்சு, சட்டி காய்ந்ததும், குழிகளில் கொஞ்சமா எண்ணெய் விடுங்க. கலந்துவெச்ச மாவை, கரண்டியில் எடுத்து, குழிகளில் ஊத்துங்க.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி, இன்னொரு பக்கமும் வேகவிட்டு எடுங்க.
சூடான, சுவையான இந்த முட்டைப் பணியாரத்தை, உங்க ஃப்ரெண்ட்ஸ் ஒரு வெட்டு வெட்டுவாங்க. எல்லோரும் உங்களைப் பாராட்டுவாங்க.
மாடல்: த்ரினா