என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

சாப்புடு மாப்ள சாப்புடேய்..!

திருச்சி உணவுக் கொண்டாட்டம்

##~##

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானம் இது வரை எத்தனையோ விழாக்களைச் சந்தித்து இருந்தாலும், 'சுவை 2011’ உணவுத் திருவிழா வில் திக்குமுக்காடித்தான் போனது!

 மைதானம் முழுக்கப் பிரபல ஹோட்டல்களின் அறுசுவை உணவு வகைகளின் பந்தி... நடுவே மேடையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கள்... திடலைச் சுற்றி குழந்தைகளுக்கான ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு அம்சங்கள்... கேட்கவா வேண்டும்? குடும்பம் குடும்பமாகக் குவிந்துவிட்டார்கள் திருச்சி வாசிகள்!

குறிஞ்சி ரெஸ்டாரென்ட் ஸ்டாலைகிராமம் போலவே வடிவமைத்து இருந்தார்கள். அமர்ந்து சாப்பிடுவதற்கு கயிற்றுக் கட்டில். அங்கு கிடைத்த சைவ மீன் குழம்பு, சைவ ஈரல், சைவ முட்டைகள் பலரையும் கவர்ந்தன. ''பயப்படாமச் சாப்பிடுங்கோ. இது எல்லாம் வெஜிடேரியன் அயிட்டங்கள்தான்!'' என்று கோயிலுக்குச் செல்ல மாலை போட்டு இருந்த பக்தர் ஒருவருக்குத் தைரியம் கொடுத்தார் கடை ஊழியர். இங்கு கிடைத்த மண் கலயம் இட்லி, சுண்டைக்காய் சூப், நுங்கு பாயசம், நவதானிய இடியாப்பங்கள் அனைத்தும் செம டேஸ்ட்.  ரம்யாஸ் ஹோட்டல் ஸ்டாலில் விதவிதமான கடல் உணவு வகைகள் இருந்தாலும், 'கிரில்டு ஆக்டோபஸ்’ பலரை மிரளவைத்தது. ''வெளி நாட்டுக்காரன் ஆக்டோபஸை ஜோசியம் சொல்லவெச்சு சம்பாதிக்கிறான். நம்ம ஆளுங்க ரோஸ்ட் போட்டு சம்பாதிக்கிறாங்க!'' என்று இளைஞர்கள் கமென்ட் அடித்தபடியே, வாங்கி ஒரு வெட்டு வெட்டினார்கள். கொங்கு பார்க் ஹோட்டல் ஸ்டாலில் ஈமு ஆம்லெட் கமகமத்தது. ''ஒரு முட்டையில் 12 ஆம்லெட் போடலாம். ஒரு முட்டையோட விலையே

சாப்புடு மாப்ள சாப்புடேய்..!

1,300 வருது. இங்க ஆஃபர் விலையில

சாப்புடு மாப்ள சாப்புடேய்..!

50-னு ஆம்லெட் போடுறோம்!'' என்றார் மேனேஜர் விக்ரம்.

சாப்புடு மாப்ள சாப்புடேய்..!

படகு வடிவில் அமைக்கப்பட்டு இருந்த சங்கம் ஹோட்டல் ஸ்டால் முழுக்க கேரள வாசனை. மலபார் மீன் கறி, மலபார் புரோட்டா, சிவப்பு இடியாப்பம் என அவர்கள் அசத்த... கண்ணப்பா ஸ்டாலில் கல் தோசை, நாட்டுக்கோழிக் குழம்பு என்று செட்டிநாட்டு அயிட்டங்கள். ஊழியர்கள் பனியன் சகிதம், முண்டாசுக் கட்டி செட்டிநாட்டு ஸ்டைலில் காட்சி அளித்தார்கள். ஜென்னீஸ் அகாடமி ஸ்டாலில் சைனீஸ் வகைகள். எஸ்.ஆர்.எம். ஹோட்டல் ஸ்டாலில் பரிமாறப்பட்ட ஜாமூன் போண்டா பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.  ஸ்ரீசங்கீதாஸ் ஹோட்டல் ஸ்டாலில் மிளகு, இஞ்சி, பூண்டு, கைமா, சில்லி, தக்காளி, மல்லி, பொடி, கறிவேப்பிலை ஆகிய ஃப்ளேவர்களில் இட்லி, தோசை வகைகள் உணவுப்பிரியர் களைக் கட்டிப்போட்டன.

அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு 'பீமா விருது’! முழு கேக்கைச் சிந்தாமல், சிதறாமல் சாப்பிட்டு முடிக்கவேண்டும். ரயில்வே ஊழியர் கோபிக்கு முதல் இடம். மறுநாள் இட்லி சாப்பி டும் போட்டி. தட்டில் 25 இட்லிகள் வைக்கப்பட... ''சாப்புடு மாப்புளே, சாப்புடுடேய்'' என்று சுற்றி உள்ளவர்கள் முழங்க துவம்சம் செய்தனர் ஹரிசங்கர், தனபாலன், யாசர் மூவரும்.

போட்டிகளுக்கு நடுவராக வந்து இருந்த செஃப் தாமு, பார்வையாளர்களின் சமையல் சந்தேகங் களுக்குப் பதில் அளித்தார். தாமுவுக்கு அன்று பிறந்தநாள். வந்து இருந்த குட்டீஸ்கள் அனைவ ரையும் மேடைக்கு ஏற்றி, அவர்களுக்கு மத்தியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேக் வெட்ட வைக்க... குழந்தைபோல் நெகிழ்ந்தார் தாமு!

- ஆர்.லோகநாதன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்