அவள் 16
Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

சீரகத்தை எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொண்டு... குமட்டல் வரும் வேளைகளில் இந்தப் பொடியை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால்... குமட்டல் நீங்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ம.ஜெயலட்சுமி, வந்தவாசி

சூடான குக்கர் அல்லது தோசைக் கல்லில் பூண்டினை வைத்து எடுத்தால், சுலபமாக தோலுரிக்கலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- கே.எல்.புனிதவதி, கோவை

வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு பனங்கற்கண்டை சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்... நரம்புத் தளர்ச்சி விலகும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- கே.ராகவி, வந்தவாசி

பாயசம் மிகுந்துவிட்டால் பழங் களை (பப்பாளி, மாம்பழம், கொய்யா, ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு) சின்ன துண்டுகளாக நறுக்கிப் போட்டு ஐஸ்க்ரீம் கலந்தால்... புதுமையான, சுவையான ப்ரூட் சாலட் ரெடி!

டிப்ஸ்... டிப்ஸ்...

- சரோஜா ஸ்ரீநிவாசன், மும்பை

பீட்ரூட் சூப் செய்யும்போது... தக்காளி பாதி, இஞ்சி சிறிதளவு எடுத்து பீட்ரூட்டுடன் சேர்த்து வேகவைத்து மிக்ஸியில் அரைத்தால், பிரமாதமான சுவையில் இருக்கும். ஹீமோகுளோபின் கூடுவதற்கு மாத்திரைக்குப் பதில் இயற்கை வைத்தியம் இது .

டிப்ஸ்... டிப்ஸ்...

- காந்தி சுப்ரா, சென்னை-90

மைதா, அரிசி, கடலை மாவுகளில் ஈரத்தன்மை இருந்தால், அதிக நாட்கள் பாட்டிலில் வைத்திருக்கும்போது சீக்கிரம் கெட வாய்ப்புகள் அதிகம். ஒரு பிரியாணி இலையை மத்தியில் செருகி வைத்தால், ஈரத்தன்மையை இலை உறிஞ்சிவிடும். மாவு சீக்கிரம் கெட்டுப் போகாது.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஹெச்.சீதாலஷ்மி, கேரளா

ருதாணி இலையுடன் சிறிதளவு புளி, மஞ்சள், பாக்கு சேர்த்து நன்கு அரைத்தெடுத்து, மருதாணி இட்டுக்கொண்டால்... சிவப்பு நிறம் நன்றாக பிடித்துக் கொள்ளும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி

ருமல் தொந்தரவா..? பசும்பாலில் மஞ்சள் பொடியையும்  மிளகுப் பொடியையும் போட்டு காய்ச்சி, நன்றாக கொதி வந்ததும் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால்... இரண்டு மூன்று வேளைகளிலேயே இருமல் சரியாகிவிடும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஆர்.பிரகாசம், திருவண்ணாமலை

பூரி நீண்ட நேரம் மொறு மொறுவென்று இருக்க வேண்டும் என்றால், கோதுமை மாவுடன், சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு சேர்த்துப் பிசையவும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- கே.சுபாக்கனி, மேலகிருஷ்ணன்புதூர்