Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

சாதனை ஆவணம்!

சேலத்தில் இருக்கிறது மூக்கணேரி. இந்த ஏரியை சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த யாருமே அதை `குப்பைமேடு' என்ற எண்ணத்தோடுதான் கடந்திருப்பார்கள். இன்று மூக்கணேரி ஓர் அழகிய சுற்றுலாத் தலம். அதை அப்படி மாற்றியது, ஓர் இயக்கமோ நிறுவனமோ அரசோ அல்ல... முழுக்க முழுக்க மக்கள் சக்தி. சமூக ஆர்வலர் பியூஸ் மானூஸ் என்பவரின் முயற்சியில், சேலத்து மக்கள் ஒன்றிணைந்து இந்த மாற்றத்தைத் தங்களுடைய ஒருங்கிணைந்த உழைப்பால் நிகழ்த்திக் காட்டினர். சேலம் மக்களின் இந்தச் சாதனையை ஆவணப்படமாக மாற்றியிருக்கிறார் எஸ்.கம்ருதீன். வெள்ளத்தில் மூழ்கியும் வெயிலில் காய்ந்தும் வாடுகிற நகரங்களில் இருக்கிற நீர்நிலைகளை எந்த அளவுக்குப் பாதுகாத்துப் பேணவேண்டும் என்பதை அருமையாகப் ப(ா)டமாக்கியிருக்கிறது இந்தப் படக்குழு. ‘மூக்கணேரி 360 டிகிரி’ என்ற இந்த ஆவணப்படத்தை இணையத்தில் இலவசமாகக் காண முடியும். லிங்க்... goo.gl/Bu4jrt

 சுளீர் சினிமா!

விகடன் சாய்ஸ்

உலகம் முழுக்க திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வென்ற நல்ல குறும்படம் ‘யெல்லோ ஃபெஸ்டிவல்’. தமிழ்நாட்டின் பிரபலமான பூப்புனித நீராட்டு விழாவை மையமாகவைத்து எடுக்கப்பட்ட சுளீர் சினிமா. தன் பள்ளி விழாவில் சாதிக்கத் துடிக்கும் சிறுமி ஒருத்தி பூப்பெய்துவிட, அதற்குப் பிறகு நடக்கிற சம்பவங்களை மிக சுவாரஸ்யமாகவும், இந்த விழாக்களால் குழந்தைகள் என்ன மாதிரியான உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் சொல்கிற படம். பெற்றோர்கள் அவசியம் பார்க்கவேண்டிய குறும்படம். இந்தப் படத்தை காண...
goo.gl/SF85sZ

 இன்ஸ்டன்ட் எச்சரிக்கை!

விகடன் சாய்ஸ்

72 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட பரபரப்பு வீடியோ இது. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களை உண்பதால் உங்கள் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என்பதை வீடியோவாகக் காட்டியிருக்கிறார்கள். பார்க்கிறவர்களை மிரட்டி எடுக்கிற இந்த இரண்டு நிமிட வீடியோ, நம்முடைய உணவுப்பழக்கத்தால் வயிறு படும் பாட்டை படம் போட்டுக்காட்டுகிறது. கூடவே வயிறு ஃப்ரெஷ்ஷான உணவுகளை எப்படி செரிக்கிறது, இந்த திடீர் உணவுகளோடு மல்லுக்கட்டுகிறது என்பதையும் காட்டுகிறது. உடனடி நூடுல்ஸ்களைத் தின்பதால் என்ன மாதிரியான நோய்கள் உண்டாகின்றன, அவற்றின் தயாரிப்பில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்பதையும் விளக்கும் இந்த வீடியோ, ஃபாஸ்ட் ஃபுட் பிரியர்கள் தவறவிடக் கூடாத ஒன்று. லிங்க்... goo.gl/7dQpn5

 செம சேட்டை!

விகடன் சாய்ஸ்

அரசியல் நையாண்டியில் புதிய உச்சங்களைத் தொடுகின்றன, `ஸ்மைல் சேட்டை’ டீமின் கலகல காமெடி வீடியோக்கள். பல்லாயிரக்கணக்கான ஆன்லைன் ரசிகர்களைக்கொண்ட இந்தக் குறும்பு டீமைச் சேர்ந்தவர்கள், கட்சி சார்பின்றி தலைவர் சாய்வின்றி, சகலரையும் ‘வெச்சுசெய்கிறார்கள்.’ இவர்களுடைய ‘பீப் ஷோ’ தமிழில் ஒரு புதிய முயற்சி. அந்தந்த வாரத்தின் டாப் அரசியல் விஷயங்களை எடுத்துக்கொண்டு ரசிக்கும்படியாகக் கலாய்த்துத் தள்ளுகிறார்கள். இவர்களுடைய கலாய்ப்பை சம்பந்தப்பட்ட தலைவர்களே ரசிக்கும் வகையில் உருவாக்குவது இவர்களுடைய சிறப்பு. திரைப்பட விமர்சனங்களும்கூட செய்கிறார்கள். ஓய்வு நேரத்தில் சிரித்து மகிழவும் நிறையவே சிந்திக்கவும் வைக்கிற ‘ஸ்மைல் சேட்டை’ குழுவின் ஆன்லைன் வீடியோ சேனலை மிஸ் பண்ணிடாதீங்க மக்கழே..! யூடியூபில் காண... goo.gl/J7dpVM