சின்ன சண்டைன்னாலும் சிங்கப்பூர்ல இருந்து போன் !நீரை.மகேந்திரன்படங்கள்: கே.குணசீலன்
எழுத்ததளர் ஞானதிரவியம்
அத்திவெட்டி
##~## |
''கிராமம், கிராமமாகத்தான் இருக்கிறது. ஆனால், மக்களின் வாழ்க்கை முறைதான் மாறிவிட்டது'' - தஞ்சை மாவட் டத்தில் அமைந்து இருக்கும் தன்னுடைய ஊரான அத்திவெட்டி பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளரும் பேராசிரி யருமான ஞானதிரவியம்.
''ஊர் முழுக்கத் தென்னைதான் பிரதான விவசாயம். என்னோட சிறு வயசுல ஊர் முழுக்க நஞ்சை விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அப்ப விவசாயம் சரியில்லாமப் போக, அதுக்கப்புறம் தென்னை விவசாயத்துல இறங்கினாங்க. இன்னைக்குத் தென்னைதான் எங்க ஊருக்கே சோறு போடுது.
விவசாயம் இல்லாம வெளிநாட்டுக்குப் போக ஆரம்பிச்சாங்க. இப்ப என்னடான்னா பொசுக்குப் பொசுக்குன்னு போயிட்டு வர்ற தூரத்துல வெளிநாடுகள் இருக்குங்கிற மாதிரி ஆயிட்டுது. ஊர்ல அல்லது வீட்டுல ஏதாவது ஒரு சின்ன சண்டைன்னா சிங்கப்பூர்ல இருக்கிறவன் போன் பண்ணி, 'மாப்ள... பக்கத்து வீட்ல சண்டையாம்ல? சேதி தெரியுமா?’னு கேட்கிறான். அந்த அளவுக்கு எங்களுக்கும் சிங்கப்பூருக்கும் நெருங்கிய உறவு வந்துடுச்சு.

அத்திவெட்டி பெரிய ஊரு. கிட்டத்தட்ட 14 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது. ஆனாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் அண்ணன், தம்பி, மச்சான், மாமன்னு உறவுமுறை வெச்சுத்தான் கூப்பிடுவோம். வடக்கால பெரியசாமி கோயிலும் தெக்கால வைரவ சாமி கோயிலும் ஊரோட காவல் தெய்வங்கள்.
பிச்சினிக்காடு இளங்கோ, பெரியதம்பி மழவராயர், ஐயா வே.சிதம்பரம், கே.கே.ராஜப்பா, ஆர்.சி.பழனிவேலு ஐயான்னு நாங்க சின்ன வயசுல பார்த்து கத்துகிறதுக் கும், எங்களுக்குச் சொல்லிக் கொடுக்குறதுக்கும் நிறையப் பேரு இருந்தாங்க. நூலகத்துல படிக்கிறது, அதைக் குளக்கரையில விவாதிக்கிறதுனு இருக்கும் எங்களோட நாட்கள். சமூக அக்கறையைஅவங்க தான் எங்களுக்குக் கத்துக்கொடுத் தாங்க.
எங்க ஊருக்கு நுழைவாயில இருக்கிற பாட்டுவநாச்சி காட்டாற்றைக் கடந்துதான் பட்டுக்கோட்டையோ அல்லது வேறு ஊருக்கோ போக முடியும். நெல் அரைக்க வண்டிகட்டிக்கிட்டு போனோம்னா... ஆத்துக்கு இந்தப் பக்கம் நெல் மூட்டைகளை இறக்கிவெச்சுட்டு, வண்டியைத் தனியாத் தள்ளிக்கிட்டு அந்தப் பக்கம் நிறுத்தி, அதுக்கப்புறம் மூட்டையைத் தூக்கிக்கிட்டு போக ணும். இப்ப தரைப்பாலம் போட் டதுல இருந்து நிலைமை ரொம்ப மாறிடுச்சு.

எங்க ஊருல முக்கிய விசேஷம்னா அது மாசி பிறைதான். ஊரே அப்பதான் திருவிழா களைகட்டும். மாரி யம்மன் கோயிலுக்கு மஞ்சத் தண்ணி, துள்ளு மாவு, கும்புட்டு தண்டம்னு ஆளாளுக்கு ஒரு வேண்டுதல் நிறைவேத்துவாங்க. ஒவ்வொரு தெரு முக்குலயும் பூவரசு கம்பு ஊணி, காமுண்டி கொளுத்துவாங்க. பொங்கல் சமயத்துல சின்னச் சின்ன தேங்காய்களாகப் பொறுக்கி, போர்க்காய் விளையாட்டு விளையாடுவாங்க.

பட்டுக்கோட்டையில் இருந்து ஒரே ஒரு பஸ் காலைலயும், சாயந்தரமும் மட்டும் ஊருக்குள்ள வரும். இப்ப வீட்டுக்கு வீடு பைக் வாங்கிட் டாங்க. வீட்டுக்கு ஒரு சொந்தம் வந்தா பேசிக்கிட்டு இருக்கிற நேரத்துல பட்டுக்கோட்டை போய் மீனோ, காயோ வாங்கிட்டு நிமிஷத்துல ஓடிவந்துடறாங்க. சர்வ சாதாரணமா வெளிநாட்டு கரன்சிகளை மாத்துறது, 10 நாள் வந்து மைனர் மாதிரி திரிஞ் சுட்டு பதினோராம் நாள் ஃப்ளைட் ஏறுறது, வீட்டுக்கு வீடு டிஷ் டி.வி-னு கிராமத்துக்கான எல்லா அடை யாளங்களும் மாறிடுச்சு. இருந்தாலும் எல்லாரும் இப்போ வரைக்கும் ஒத்துமையா இருக்கிறதும், சாமந்தி குளக் கரையும், இதுவரை ஆக்கிரமிக்கப்படாத இரண்டு காடுகளும், குஞ்சாங் குளுவா அந்தக் காட்டுக் குள்ள திரிஞ்சுக்கிட்டு இருக்கிற காடை, கவுதாரி, மைனாவோட சத்தங்களோடும் இருக்கிறதுதான் அத்தி வெட்டியோட ஸ்பெஷல்!''