என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

எங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் !

அமெரிக்கர்களின் வருத்தம்சி.சுரேஷ் படங்கள்: செ.சிவபாலன்

##~##

சர்வதேசப் பெண் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் அமெரிக்க நாட்டின் பொது விவகாரத் துறையின் சார்பில் வாஷிங்டன், ரெவேரா, ஃபுளோரிடா மற்றும் நியூயார்க் நகரங்களில் நடந்தது. அமெரிக்க அரசின் கௌரவம் மிக்க இந்த அரசியல் பரிமாற்ற நிகழ்ச்சி, 1940 முதல் நடைபெற்றுவருகிறது. இதில் இந்த வருடம் இந்தியா சார்பில் பங்குபெற்று இருக்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த புவனேஸ்வரி!

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக் கும் புவனேஸ்வரியைச் சந்தித்தோம். ''என்னுடைய கணவர் டாக்டர் அசோக்குமாரும் நானும் கொஞ்ச வருஷம் அமெரிக்காவில் வேலை பார்த்தோம். இந்தியாவில் வாழணும்கிற ஆசையில இங்கே கிளம்பிவந்துட்டோம்.

கார்த்தி ப.சிதம்பரம் மூலமா எனக்குக் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. மார்ச் 3-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடந்த அந்தக் கருத்த ரங்கில் நான் கலந்துகொண்டதை மறக்கவே முடியாது. நம்ம நாட்டு பெண்களோட அடையாளம் சேலை. அதனால் நான் பெரும்பாலும் சேலை உடுத்திக்கிட்டுதான் கருத்தரங்கம் போனேன். நிறைய நாட்டைச் சேர்ந்தவங்க ஆச்சர்யமா என்னோட சேலையைப் பற்றி விசாரிச்சாங்க. ஹிலாரி கிளின்டன், மிசேல் ஒபாமாவை அங்கே சந்திச்சுப் பேசினது மகிழ்ச்சியா இருந்தது.  

எங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் !

கருத்தரங்கத்தில் மொத்தம் 70 பெண் அரசியல் தலைவர்கள் கலந்துக்கிட்டாங்க. அவங்க எல்லாருமே தமிழர்களைப் பற்றி  நிறைய தெரிஞ்சுவெச்சிருக்காங்க. நம்ம ளோட கலாசாரம் அவங்களுக்கு ரொம்ப வியப்பா இருக்குது. குழந்தைகள் வளர்ப்புப் பற்றிப்  பேசுறப்ப, ஆர்வமா ரொம்பக் கவனமா குறிப்பு எடுத்துக்கிட்டாங்க. நான் பேசி முடிச்சதும் 'எங்களின் மிகப் பெரிய தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான்’னு நிறைய அமெரிக்கர்கள் வருத்தப்பட்டாங்க.

எங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் !

'இந்தியாவில் மட்டுமல்ல; பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் கிராமப்புறங்களில் இப்போதுதான் பெண்கள் அரசியலில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.பொரு ளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கு நசுக்கப்பட்டு உள்ளது. சம்பளம் வாங்கும் பெண் என்றால்கூட, கணவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண் டிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்’னு கருத்தரங்கில் பேசினப்ப, எல்லாரும் ஆழ்ந்து கவனிச்சாங்க.

எங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் !
எங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் !

இது எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம். இந்த மாதிரி திறமையான பெண்கள் நாடு முழுக்கப் பரவி இருக்காங்க. அவங்க எல்லாரும் களத்துக்கு வந்து பெண்கள் சுதந்திரத்துக்காகப் போராடுனா.. இந்தியா உலக அரங்கில் மிகப் பெரிய சக்தியா உருமாறும்!'' கண்கள் மின்ன பேசி முடிக்கிறார் புவனேஸ்வரி!