என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

வித்தியாச விசில் !

மா.நந்தினி படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

##~##

''மயிலாடுதுறை அருகே உள்ள குறிச்சி       பகுதியைச் சேர்ந்த ரமேஷ், மூக்கு வழியாகவே விசில் அடித்து பாடி அசத்துகிறார்!''- என்று வாய்ஸ் ஸ்நாப்பில் குருமூர்த்தி என்கிற விகடன் வாசகர் தகவல் தந்திருந்தார்.  

டீக்கடை வாசலில் அமர்ந்து நம்முடைய தேசிய கீதத்தை மூக்கால் பாடிக்கொண்டு இருந்தவரைச் சந்தித்தேன். ''சிறு வயசுலேர்ந்து எனக்கு ஏதாவது சாதிக் கணும்னு ஆசை. நான் செய்யுற எந்த ஒரு விஷயமும் மற்றவர்களைவிட வித்தியாசமானதா இருக்கணும்னு நினைச்சேன்.  

சின்ன வயசுல இருந்தே விசில் சவுண்டுல பாடுவேன். அதைப் பார்த்துட்டு என் நண்பர்கள் எல்லாரும் 'வந்துட்டாருய்யா... எஸ்.பி.பி.’னு கிண்டல் பண்ணுவாங்க. அவங்களுக்கு முன்னாடி ஏதாவது புதுசா செய்யணும்னு நினைச்சேன். அதுக்காக முழு மூச்சா மூக்கு, காத்து மூலமா விசில் அடிக்க ஆரம்பிச்சேன். என்னை கிண்டல் அடிச்ச நண்பர்களே வியந்துபோய் பாராட்டினாங்க. நம்ம தேசிய கீதத்தை நான் இப்படிப் பாடுறேன்கிறதைக் கேள்விப்பட்டு, நிறைய பள்ளிக்கூட ஆண்டு விழாக்களில் பாடச் சொன்னாங்க.  

வித்தியாச விசில் !

உலகத்தில் இருக்கிற அத்தனை தேசிய கீதங்களையும் மூக்கு மூலமா பாடணும்னு ஆசை. அதுக்கான முயற்சி களை என் நண்பர்கள் உதவியோடு செஞ்சுக்கிட்டு இருக்கேன். இந்தத் திறமையை கின்னஸ்ல இடம்பெற வைக்கணும். கண்டிப்பா நான் கின்னஸ்ல இடம் பிடிப்பேன்!'' நம்பிக்கை வார்த்தைகளில் பேசுகிறார் சுரேஷ்.