என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

''கூகுள்... எங்களுக்கு வில்லன்!''

''கூகுள்... எங்களுக்கு வில்லன்!''

##~##
ரு சுற்றுலா வழிகாட்டிக்கு (கைடு) அவர் இருக்கிற இடத்தைப்பற்றி எல்லாம் தெரியும். ஆனால், ஒரு கைடைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? சுமார் 30 வருடங்களாக கைடாக இருக்கும், தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர், ராஜாவிடம் அவரது அனுபவங்களைக் கேட்டோம்.

''ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் ஒவ்வொரு விதம். இங்கிலாந்துக்காரங்க, நம்மை முன்னாடி ஆட்சி செஞ்சதால கொஞ்சம் ஈகோவோடுதான் பழகுவாங்க. அமெரிக்காகாரங்க பத்தி கேக்கவே வேணாம். எக்கச்சக்க ஈகோ இருக்கும். ஜெர்மன், ஃபிரெஞ்சு, இத்தாலி நாட்டுக்காரங்க எல்லாம் பழக ரொம்பவே எளிமையானவங்க... இனிமையானவங்க!

''கூகுள்... எங்களுக்கு வில்லன்!''

இந்தியாவில் அவங்க நிறைய விஷயங்களை ரசிச்சாலும், ரெண்டு விஷயம் அவங்களைப் பாடாப் படுத்துடும். ஒண்ணு, நம்ம ஏப்ரல், மே மாத வெயில்.  கோயில் பிராகாரங்களில் வெறும் காலோடு சூடு தாங்காம பரத நாட்டியம் ஆடிட்டேதான் நடப்பாங்க. இன்னொண்ணு, நம்ம காரசாரமான சாப்பாடு. அதுக்குப் பயந்து, சைவ சாப்பாடு மட்டும்தான் சாப்பிடுவாங்க. அதிலேயும் சமயங்கள்ல குண்டு மிளகாயைக் கடிச்சுட்டு துடிக்கிற துடிப்பு இருக்கே... பாவமா இருக்கும்.

பொதுவா, கைடுன்னா பொய், பொய்யா சொல்லி ஏமாத்துவாங்கன்னு ஒரு எண்ணம் எல்லாருக்குமே இருக்கு. இல்லேன்னா, ஒண்ணுமே தெரியாதவங்கதான் கைடு வேலை பார்க்கிறதா சினிமாவில் காட்டுவாங்க. ரெண்டுமே உண்மை கிடையாது. இப்பல்லாம் சுற்றுலாப் பயணிகள் வீட்டைவிட்டுக் கிளம்பறதுக்கு முன்னாடியே 'கூகுள்’ல எல்லாத் தகவல்களையும் தெரிஞ்சுக்கிட்டுதான் வர்றாங்க. கூகுள் மேப்ஸ் மூலமா வடக்கு வீதி, மூணாவது குறுக்குச் சந்து வரைக்கும் செல்போன்லயே பார்த்து நமக்கே ரூட் சொல்றாங்க. அதனால், டூரிஸ்ட்களை யாரும் ஏமாத்த முடியாது!'' என்கிறார் கைடு ராஜா.

''கூகுள்... எங்களுக்கு வில்லன்!''

20 வருட கைடு அனுபவம்கொண்ட சேகர் மகிழ்வு நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார். ''மேற்கத்திய நாடு களில் இருந்து வர்றவங்க, அவங்க குடும்பத்தினரை அறிமுகப்படுத்துறதே சுவாரஸ்யமா இருக்கும். ஒரு தம்பதிக்கு மூணு பசங்க இருந்தாங்க. இவன் எங்கள் மகன். இவன் என் மகன். இவன் என் மனைவியின் மகன்னு அறிமுகப்படுத்தினாங்க. எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் ஜோக்குதான் ஞாபகத்துக்கு வந்தது. ஆனா, அது அவங்க கலாசாரத்தில் சாதாரணம். டூரிஸ்ட்டா வந்த ஒரு டாக்டர், தனக்கு கைடா இருந்த ஸ்ரீரங்கத்துப் பையனைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அப்போ அந்தப் பையன் ப்ளஸ் டூ-தான் படிச்சிருந்தான். ஆனா, வெளி நாட்டுக்கு அழைச்சுட்டுப் போன அந்த டாக்டர் பொண்ணு, அவனை மேற்கொண்டு படிக்கவெச்சு, சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆக்கிடுச்சு. மூணு வருஷத்துக்கு ஒரு முறை அவங்க குடும்ப சகிதமா இங்கே வந்துட்டுப் போவாங்க.

ரெண்டு நாளோ, மூணு மாசமோ... எத்தனை நாள் இருந்தாலும், திரும்பிப் போகும்போது எங்க சர்வீஸைப் பாராட்டி செல்போன்,வாட்ச், கூலிங்கிளாஸ்னு பரிசு தருவாங்க. இல்லேன்னா, மீதம் இருக்கிற இந்தியப் பணத்தைத் தந்துட்டுப் போவாங்க. சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போன பிறகும், தொடர்பில் இருப்பவர்களும் இருக்காங்க. இப்படி உலகம் முழுக்க நண்பர்கள் வேற எந்த வேலையில் கிடைப்பாங்க சொல் லுங்க?'' என மகிழ்ச்சியாகக் கேட்கிறார் கைடு சேகர்.

உலகம் சுற்றும் மனிதர்களுக்கு இடையில், உலகம் இவர்களைச் சுற்றுகிறது!

- ராஜீவ் காந்தி

''கூகுள்... எங்களுக்கு வில்லன்!''