என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

மாஸ் எ முட்டை மாஸ்

மாஸ் எ முட்டை மாஸ்

##~##
மிழ்நாட்டில் 'மாஸ்’ என்றால் ரஜினி முதல் டாஸ்மாக் வரை பல அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால், புதுக்கோட்டையில் மாஸ் என்றால், அது முட்டை மாஸ்!

''திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வா, புதுக்கோட்டைக்கு முட்டை மாஸ்! ஒரு மாஸுக்கு ரெண்டு முட்டை. அதை நல்லா வேகவெச்சு நறுக்கி, தக்காளி, காரப்பொடி போட்டு, குருமாகூட சேர்த்து ஃப்ரை பண்ணி எடுத்தா... மாஸ் ரெடி!'' என்கிறார் புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன் மாஸ்டர்.

மாஸ் எ முட்டை மாஸ்

''எங்க கடையில் ஒரு நாளைக்கு எப்படியும் 400 மாஸுக்கு மேல ஓடும். தோசை, சப்பாத்தி, பரோட்டான்னு எல்லாத்துக்கும் இது செம சைடு டிஷ். வேற எதுவும் இல்லாம முட்டை மாஸ் மட்டும் சாப்பிடுறவங்களும் உண்டு!'' என்கிறார் மாஸுக்கு மசாலா ஊற்றிக் கொண்டே.

பரோட்டாவுக்குள் முட்டை மாஸை பார்சல் செய்து லபக்கிக்கொண்டு இருந்த சுகுமாறன், ''எனக்கு மாஸ் இல்லேன்னா, சாப்பிட்டது மாதிரியே இருக்காது. எப்போ டவுனுக்கு வந்தாலும் நாலு பரோட்டா, ஒரு முட்டை மாஸ் சாப்பிடாம ஊருக்குத் திரும்ப மாட்டேன். புதுக்கோட்டையில் எந்தக் கடை யில் முட்டை மாஸ் சாப்பிட்டாலும் ஒரே டேஸ்ட்தான்!'' என்கிறார் பெருமிதமாக!

இரண்டு சப்பாத்திகளுக்குத் தொட்டுக்கொள்ளப் போதுமான அளவில் முட்டை மாஸ் செய்யத் தேவைப்படும் பொருட்கள்...

மாஸ் எ முட்டை மாஸ்

- ச.ஸ்ரீராம்
படங்கள்: பா.காளிமுத்து