என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

குதிகாலைத் தூக்கினால் நோ பால்... சிக்ஸ் அடிச்சா அவுட் !

இது தஞ்சை ஐ.பி.எல் !

 'ஓங்கி அடிக்கப்பட்ட பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி சிக்ஸாக மாறியதால், பேட்ஸ்மேன் அவுட்டாகி வெளியே செல்கிறார்!’ - இப்படி ஒரு கிரிக்கெட் வர்ணனையைக் கேட்டால் சிரிப்பு சிரிப்பா வருமே? ஆனால், இப்படிப்பட்ட வர்ணனைகள்தான் இப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவிக்கிடக்கின்றன!

குதிகாலைத் தூக்கினால் நோ பால்... சிக்ஸ்  அடிச்சா   அவுட் !
##~##

டெஸ்ட் போட்டி போரடிக்க, ஒன் டே கிரிக்கெட் வந்தது. அதில் 60 ஓவர் போரடிக்க, 50 ஓவராகச் சுருங்கியது. 'போங்கப்பா எல்லாம் போர்!’ என்று 20-20 வந்தது. இப்போது அதுவும் போரடிக்கிறது என்று ஒரு புது கிரிக்கெட் போட்டியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டத் தளபதிகள். பெயர்... 'ஃபோர்- லைன் கிரிக்கெட்’!

பெரிய மைதானம், 11 ஆட்டக்காரர்கள், மூச்சு இறைக்க ஓடி வீசப்படும் பௌலிங்... இப்படி பழைய கிரிக்கெட் ஆட்ட முறை எதுவும் இந்தப் ஃபோர்லைன் கிரிக்கெட்டில் கிடையாது. சின்ன இடம். ஆட்டத்தில் ஒவ்வோர் அணிக்கும் எட்டு வீரர்கள். 12 அடி தூரம் உடைய பிட்ச்சில் பந்து வீச்சாளர் நின்றுகொண்டு குதிகாலைத் தரையில் இருந்து தூக்காமல் பந்து வீச வேண்டும். எல்லையைத் தாண்டி அடித்தால் பேட்ஸ்மேன் அவுட்!

''இது ரொம்ப வேகமான கேம் சார். ஓடி வந்து பந்து வீச வேண்டியது இல்லைங்கிறதால, நேரம் வேஸ்ட் ஆகாது. அரை மணி நேரத்துக்குள்ள சட்டு புட்டுனு ஆட்டம் முடிஞ்சு, ரெண்டு நாளைக்குள்ள டோர்னமென்ட்டே முடிஞ்சிரும். ரொம்ப விறுவிறுப்பா ஆடுறதைப் பார்க்குறதுக்கும் த்ரில்லா இருக்கும்!'' உற்சாகமாகப் பேசுகிறார்கள் பட்டுக்கோட்டை 'யங்-ஸ்டார் கிரிக்கெட் அணி’யினர்!

குதிகாலைத் தூக்கினால் நோ பால்... சிக்ஸ்  அடிச்சா   அவுட் !

துறவிக்காடு 'தமிழன் கிரிக்கெட் அணி’யைச் சேர்ந்த யுவராஜ், ரெமிஜியஸ் ஆகியோர் ''முன்னே எல்லாம் கிரிக் கெட் விளையாட வத்திப்போன குளத்துக்கும் வயல் காடு களுக்கும்தான் போகணும். ஆனா, இந்த கேமுக்கு ஒரு சந்து போதும். சிக்ஸ் அடிச்சா அவுட்ங்கிறதால, தூக்கி அடிக்கப் பயப்படுவாங்க. ரொம்ப தூரம் ஓட வேண்டியதும் இல்லை. மொதல்ல சாதாரணமா அங்ஙனைக்கு அங்ஙன விளையாடிக்கிட்டு இருந்தோம். இப்ப இதுல டோர்னமென்ட் எல்லாம் வந்துடுச்சு. போகப் போக பாருங்க... நாங்க ஆடுற இந்தக் கிரிக்கெட்டைப் பார்த்துட்டு உலக லெவல்ல கேமே மாறப் போகுது!'' என்கின்றனர் ஏகபோக நம்பிக்கையில்.

''ஒரே இடத்துல நின்னுக்கிட்டு ஆடாம, அசையாம, வர்ற பந்தைத் தூக்கிக்கூட அடிக்காமல் ஆடுறதுக்குப் பேரு கிரிக்கெட்டா?'' என்று அவர்களிடம் கேட்டேன். அவ்வளவுதான்... ஆவேசப் பதில்களால் என்னைப் பந்தாடத் தொடங்கிவிட்டார்கள்.

குதிகாலைத் தூக்கினால் நோ பால்... சிக்ஸ்  அடிச்சா   அவுட் !

''பந்தைத் தூக்கி அடிக்கிறது உடம்போட பலத்தைக் காட்டுற விஷயம். ஆனா, பந்தைக் கொஞ்சம் கூடத் தூக்கி அடிக்காமல், சாதுர்யமா ஸ்ட்ரோக் பண்ணி ஆடுறது மூளையின் பலத்தைக் காட்டும் விஷயம். மற்ற கிரிக்கெட் ஆட்டத்துல பேட்ஸ்மேன் அடிக்க முடியாத அளவுக்குப் பந்து போடு வானுங்க. ஆனா, எங்க கிரிக்கெட்ல பேட்ஸ்மேன் நல்லா அடிக்கிற மாதிரி தோதா பந்து போட்டுத்தான் உசுப்பேத்து வானுங்க. வேகமா சைக்கிள் ஓட்டுற போட்டிக்குப் பதிலா, ஸ்லோ சைக்கிள் ரேஸ் கண்டுபிடிச்சாங்களா இல்லையா? அதே மாதிரிதான் இதுவும். இவ்வளவு பேசுறீங்களே... நீங்க வந்து ஒரு ஓவருக்குத் தாக்குப் பிடிச்சு நின்னு பாருங்க. தெரி யும்...'' என்று கிடுக்குப்பிடி போடுகின்ற னர்.

''எந்த விஷயத்திலுமே ஆட்டம் போடு றது ஈஸி சார்... ஆனா, அடங்கிப் போறதுதான் ரொம்ப்ப்பக் கஷ்டம்!'' என்று பன்ச் வைத்தது ஒரு வாண்டு!

- சி.சுரேஷ்
படங்கள்: குணசீலன்