அரியலூர் ஆர்மி!
##~## |
அரியலூரில் பாலகிருஷ்ணன் ஒன் மேன் ஆர்மி!
அரியலூரில் மக்கள் நலன் சம்பந்தமான கூட்டம் எங்கு நடந்தாலும் முதல் ஆளாக ஆஜராவது அய்யாதான். விழா கமிட்டியினரே கூட தாமதமாகத்தான் வருவார்கள். ஆனால், இவர் முதல் ஆளாக வந்து முதல் ஸீட்டைப் பிடித்து உட்கார்ந்துவிடுவார். கூட்டம்
நடக்கும்போது இவர் தொடுக்கும் கேள்விக்கணைகளைச் சமாளித்து கூட்டத் தைத் தொடர்ந்து நடத்துவது பிரம்ம பிரயத் தனம். இவர் பேசுவது பிறருக்கு காமெடியாக இருந்தாலும் அரியலூரில் பல நல்ல காரியங் கள் பாலகிருஷ்ணனால்தான் அரங்கேறி இருக்கின்றன.

''அரியலூர் தனி மாவட்டமானதே என்னால்தான். சும்மா இல்லை சார். நான் இருக்கிறதாலதான் அரியலூருக்கே பெருமைன்னு கக்கன் அப்பவே சொன்னார். எனக்கு கக்கன், பூவராகவன் நல்ல பழக்கம் சார். 'காங்கிரஸ் தோத்ததற்குக் காரணம் நீங்கதான்’னு விவாதம் பண்ணுற அளவுக்கு எனக்கு நெருக்கமா இருந்தவர் காமராஜர்!
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூரைப் பிரிக்க அவ்வளவு சிரமப்பட்டோம். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஜெயங்கொண்டத்துக்குப் போவதாக இருந்தது. அரி யலூரிலேயே அமைக்கப் போராடி சாதிச்சோம்.
பெரம்பலூர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர், வள்ளலார் கல்வி நிலையத் தலைவர், வரிகொடுப்போர் சங்கத் தலைவர், ஸ்ரீமகாகாளியம்மன் கோயில் தலைவர்னு ஏகப்பட்ட பதவிகள். இந்தப் பதவிகள் வர்றதுக்கு முன்னாடி எனக்கு
சொந்தமா 45 ஏக்கர் நிலம், 20 வீடு இருந்துச்சு. இப்போ 4 ஏக்கரும் 2 வீடும்தான் இருக்கு. இந்த ஊருக்காக நான்தான் நிறைய செஞ்சு இருக்கேன். ஊரு எனக்குச் செய்யலை. ஆனா, அதைப் பத்தி கவலைப்படறது இல்லை. நாம நம்ம ஊருக்குச் செய்யாம யாரு செய்வா?''
நம்மிடம் பேசியபடியே கடிகாரத் தைப் பார்க்கிறார் பாலகிருஷ்ணன். ''சார் நேரம் ஆயிடுச்சு. நான் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத் துக்குப் போகணும். அப்புறம் பார்க்க லாமா?''
- நடையைக் கட்டினார் பால கிருஷ்ணன்!
- தஞ்சை ராமசாமி