மித்ரா படங்கள் : ர.சதானந்த் மாடல்: விபின்
பொட்டேட்டோ எக் ரோல்!
முட்டையும் ஒரு உருளைக்கிழங்கும் இருந்தால் சுவையான 'பொட்டேட்டோ எக் ரோல்’ செய்து, நீங்களும் 'சமையல் சுட்டித் திலகம்’ பட்டம் பெறலாம். இதைச் சொல்லித்தர்றாங்க, தனுஜா ஆன்ட்டி.
தேவையானவை:
பெரிய உருளைக்கிழங்கு - 1, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, கொத்துமல்லித் தழை - சிறிது, கரம் மசாலா, மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது (தலா) - ரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, முட்டை - 1, மைதா - 1 டேபிள்ஸ்பூன், பால் - லு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்துமல்லித்தழை எல்லாத்தையும் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவெச்சு, தோல் உரிச்சு, நடுத்தரமான துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வெச்சு, எண்ணெய் விட்டு, காய்ஞ்சதும், வெங்காயத்தைப் போட்டு வதக்குங்க. அப்புறம், இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டுக் கிளறி, தக்காளியைப் போட்டு வதக்கணும். அதிலேயே கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கணும். கடைசியாக, உருளைக்கிழங்கைப் போட்டு வதக்கிட்டு, கொத்துமல்லித் தழையைச் சேர்த்துக் கிளறி, இறக்கி, ஆறவிடுங்க.
ஒரு கிண்ணத்தில், முட்டையை உடைச்சு ஊற்றி, மைதா, பால், துளி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, நல்லா அடிச்சுக் கலந்துக்குங்க.
தோசை தவாவை அடுப்பில் காயவெச்சு, எண்ணெய் விட்டு, முட்டைக் கலவையை ஊற்றி, திருப்பிப் போட்டு வேகவெச்சு எடுத்துக்குங்க.
கிளறிவெச்சிருக்கிற உருளைக்கிழங்கு மசாலாவை இந்த ஆம்லெட் மேலே பரவலாகப் போட்டு, அப்படியே 'ரோல்ஸ்’ மாதிரி சுத்திடுங்க.
சுடச்சுட சாப்பிடுங்க. சுவையும் சத்தும் அமோகமா இருக்கும்!