Published:Updated:

கிட்ஸ் @ கிச்சன்.காம்

மித்ரா படங்கள் : தி.விஷய் மாடல்: தர்ஷனா, ஷஷாங்க்

கிட்ஸ் @ கிச்சன்.காம்

'வீக் எண்ட்’ல நண்பர்களோடு சேர்ந்து வீட்டில் படிக்கும்போதோ, விளையாடும்போதோ, நீங்களே செய்து அசத்த, பொட்டேட்டோ லாலி பாப் சொல்லித்தர்றாங்க தனுஜா ஆன்ட்டி. (இது, எண்ணெயில் பொரிக்க வேண்டியது என்பதால், அம்மாவின் மேற்பார்வையில் மட்டுமே செய்யணும்). இனி, வாரா வாரம் உங்கள் வீட்டில் நண்பர்களின் ஆரவாரம்தான்.

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 2, உப்பு, மிளகுத்தூள் - ருசிக்கு ஏற்ப, பிரெட் தூள் - 6 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோளமாவு) - 2 டேபிள்ஸ்பூன், நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸ், கொத்துமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு, சாப் ஸ்டிக்ஸ் (கடைகளில் கிடைக்கும்) - தேவையான அளவு.

கிட்ஸ் @ கிச்சன்.காம்

செய்முறை:

உருளைக்கிழங்கை நல்லா கழுவி, குக்கரில் போட்டு, இரண்டு விசில் வந்ததும் எடுத்துக்குங்க.  ஆறியதும், தோலை உறித்து, கிழங்கை மசித்து, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நல்லா பிசைஞ்சுக்குங்க.

கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி, கிழங்கு மசியலில் சேர்த்துக் கலந்துடுங்க.

சோள மாவினை ஒரு கிண்ணத்தில் கரைச்சு வெச்சுக்குங்க. அதேபோல, பிரெட் தூள், நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸையும் தட்டுகளில் வெச்சுக்குங்க.

கிட்ஸ் @ கிச்சன்.காம்

மசித்த உருளைக்கிழங்கை, உருண்டையாகவோ, விரல் நீளத்திலோ உருட்டி, சாப் ஸ்டிக்கில் குத்தி, சோள மாவுக் கரைசலில் நனைச்சு எடுத்து, பிரெட் தூளில் புரட்டுங்க.

திரும்பவும், சோள மாவுக் கரைசலில் முக்கி எடுத்து, கார்ன்ஃப்ளேக்ஸில் புரட்டி எடுத்துக்குங்க.

தோசை தவாவில் எண்ணெய் விட்டு, லாலிபாப்களைப் போட்டு, தங்க நிறத்தில் வர்ற வரைக்கும் திருப்பிவிட்டு வறுக்கணும்.

தக்காளி சாஸுடன் நண்பர்களுக்குப் பரிமாறுங்க... 'குட்டி செஃப்’ பட்டம் உங்களுக்குத்தான்!