Published:Updated:

கிட்ஸ் @ கிச்சன்.காம்

ஃப்ளவர் எக் பவுச் !மித்ரா,தி.விஷய்,மாடல்: அகில் ஜென்ஸன்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... செம பசியோடு ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வந்தால், ஸ்நாக்ஸ் எதுவும் இல்லையா? ஃப்ரிட்ஜ்ல முட்டை இருக்கா? எடுங்க அதை. ஒரு குடமிளகாய் போதும்.  'ஃப்ளவர் எக் பவுச்’ பண்ணி, சாப்பிடலாம். உங்க கையால் செய்யும்போது, டேஸ்ட் இன்னும் கூடியிருக்கும். இதை உங்களுக்குச் சொல்லித் தர்றாங்க தனுஜா ஆன்ட்டி.

தேவையானவை:

முட்டை - 2, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு, குடமிளகாய் - 1, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

கிட்ஸ் @ கிச்சன்.காம்

செய்முறை:

குடமிளகாயை, வட்ட வடிவ வளையங்களாக (ரிங்ஸ்) நறுக்கிங்குங்க.

தோசை தவாவை அடுப்பில் வெச்சு, லேசா எண்ணெய் ஊற்றி, குடமிளகாய் வளையங்களைப் போட்டு, பிறகு, திருப்பிப் போட்டு வேகவிடுங்க.

ஒரு முட்டையை உடைச்சு, அந்தக் குடமிளகாய் வளையத்தில் ஊற்றுங்க. உப்பு, மிளகுத்தூள் தூவுங்க.

மூடி போட்டு மூடிடுங்க. சில நிமிடங்கள் கழிச்சு எடுங்க.

சூடாகச் சாப்பிடுங்க. சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

இந்த 'ஃப்ளவர் எக் பவுச்’சை ஒரு பிரெட் துண்டுகளை அழகாகக் கத்தரித்து, தக்காளி வெச்சு, சாண்ட்விச் போலவும் சாப்பிடலாம்.