Published:Updated:

கிட்ஸ் @ கிச்சன்.காம்

மித்ரா படங்கள் : எம்.உசேன் மாடல்: ரேஹன்

ஆப்பிள் சீசன் வந்தாச்சு. எங்கே பார்த்தாலும் ஆப்பிள்கள்தான். ஸோ, ஆப்பிளையும்  சாக்லேட்டையும் வெச்சு, செம டேஸ்ட்டா ரெசிப்பியைக் கத்துக்கொடுக்கிறாங்க, திவ்யா ஆன்ட்டி. செய்து சாப்பிடுங்க, சீசனைக் கொண்டாடுங்க!

தேவையானவை:

ஆப்பிள் - 1, டார்க் சாக்லேட் காம்பவுண்டு - 1/2 கப், கார்ன்ஃப்ளேக்ஸ் - கால் கப்.

செய்முறை:

ஆப்பிளைக் கழுவி, நீள நீளத் துண்டுகளாக, தோலுடன் நறுக்கி வெச்சுக்குங்க.

சாக்லேட் காம்பவுண்டு கட்டியை, சின்னச் சின்னத் துண்டுகளா வெட்டி எடுத்துக்குங்க.

கார்ன்ஃப்ளேக்ஸை ஒரு தட்டில் கொட்டி வெச்சுக்குங்க.

கிட்ஸ் @ கிச்சன்.காம்

சாக்லேட் துண்டுகளை, உருகும் வரை பெரியவங்க உதவியோடு மைக்ரோவேவ் அவென்ல வெச்சு எடுங்க. (அவென் இல்லாதவங்க, கேஸ் ஸ்டவ்ல வைக்கலாம்).

சாக்லேட் உருகியதும், ஆப்பிள் துண்டுகளின் மேலே ஊற்றி, `கோட்டிங்’ பண்ணிட்டு, அதை உடனடியா கார்ன்ஃப்ளேக்ஸ்ல புரட்டி எடுத்துடுங்க.
எல்லாத் துண்டுகளையும் இதே மாதிரி, கோட்டிங் செஞ்சதும், ஃப்ரிட்ஜ்ல வெச்சு எடுங்க.

`ஜில்லு’னு சாப்பிடுங்க. ஃப்ரெண்ட்ஸுக்கும் செய்து கொடுத்து, ‘லைக்’ வாங்குங்க!