மித்ரா படங்கள் : எம்.உசேன் மாடல்: விவான்
தீபாவளி பக்கத்தில் வந்தாச்சு... டிரெஸ் பர்ச்சேஸ், ஸ்வீட்ஸ் என அமர்க்களப்படும் நேரம். அம்மாவுக்குத் துணையாக நீங்களும் ஒரு தீபாவளி ஸ்பெஷல் பண்ணுங்களேன். வெனிலா கஸ்டர்டு ஜெல்லி பண்றதுக்கு சொல்லித்தர்றாங்க, திவ்யா ஆன்ட்டி.
தேவையானவை: வெனிலா கஸ்டர்டு பவுடர் - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், பால் - 1 லிட்டர், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சீவிய பாதாம், பிஸ்தா துருவல் - சிறிதளவு (அலங்கரிக்க).

செய்முறை:
ஓர் அகலமான பாத்திரத்தில் கொஞ்சமாக பாலை ஊற்றி, கஸ்டர்டு பவுடரைப் போட்டு, நல்லா கலந்துக்குங்க.
நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வெச்சு, மீதிப் பாலை ஊத்திக் காய்ச்சுங்க.
பால் காய்ஞ்சதும், அதிலேயே கஸ்டர்டு கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்து, தொடர்ந்து கிளறுங்க. அடுப்பில் தீயை மீடியமா வெச்சுக்கணும். அப்பப்ப கொஞ்சம் நெய் சேர்த்துக்கணும்.

15 நிமிஷம் கிளறி, கஸ்டர்டு கலவை, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கணும்.
ஓர் அகலமான ட்ரேயில் நெய் தடவி, அதில் கஸ்டர்டு ஜெல்லியைக் கொட்டி, சமமாகப் பரப்புங்க.
நல்லா ஆறியதும் சதுரத் தூண்டுகளாக வெட்டுங்க. பாதாம், பிஸ்தா சீவல்களை மேலே தூவி, அழகா அலங்கரிங்க.
இந்தத் தீபாவளிக்கு உங்க வெனிலா கஸ்டர்டு ஜெல்லிதான், மாஸ்டர்பீஸ்!