வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ஊரைப்பற்றி பேசணும்ன்னாலே எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.. அப்படி இருக்க... ஊரின் ஸ்பெஷல் சுவையைப் பற்றி பேசாமல் இருந்தால்... எப்பூடி..?
எங்க ஊரில் (வளவனூர்) யார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றாலும் ஏதோ ஒரு ரூபத்தில் வேர்க்கடலை இடம்பெற்றிருக்கும். ஆம் எங்கள் ஊரில் வேர்க்கடலை பயிரிடுவது மிகவும் அதிகம். அதே போல் பனங்கிழங்கு, நுங்கு, கத்தரிக்காய் (நறையூர்) இவைகளும் அதிகம். அவற்றை வைத்து அம்மா செய்யும் சில ரெசிபிகள் இதோ ..
முதலில் ஜூஸிலிருந்து ஆரம்பிப்போம்.
*நுங்கு ஜூஸ்
இளசாக இருக்கும் நான்கு நுங்கு சுளைகளுடன், நாட்டு சர்க்கரை நன்னாரிசிரப் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொண்டு அதில் தேவையான அளவு நீர் சேர்க்க நன்னாரி வாசத்துடன் நுங்கு ஜூஸ் ரெடி. வீட்டிற்கு கோபமாக யாராவது வந்தால் கூட.. இந்த ஜூஸை குடிக்க புன்னகையுடன் செல்வது நிச்சயம்.

*பனங்கிழங்கு சப்ஜி
இலசான நான்கு பனங்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்து, நார் எடுத்து ,சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
நான்கு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்,
பச்சை மிளகாய் ஆறு (காரம் அதிகம் தேவை என்றால் எட்டு)
பொட்டுக்கடலை 4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் கால் டீஸ்பூன்,
சீரகம் கால் டீஸ்பூன் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு தலா 1 எடுத்து சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும் அடி கனமான வாணலியில் என்னை விட்டு காய்ந்ததும் மிளகு, பெருஞ்சீரகம்தலா கால் டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா ஒன்று சேர்த்து தாளித்து, அதில் வெங்காயம் உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
அடுப்பை சிம்மில் வைக்கவும். அத்துடன் நான்கு டம்ளர் நீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து பனங்கிழங்கை சேர்க்கவும் . கலவை சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய மல்லித்தழைத் தூவி சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும். வித்தியாசமான சுவையில் அசத்தும் இந்த பனங்கிழங்கு சப்ஜி.

இலசான நான்கு பனங்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்து, நார் எடுத்து ,சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
நான்கு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
பச்சை மிளகாய் ஆறு (காரம் அதிகம் தேவை என்றால் எட்டு)
பொட்டுக்கடலை 4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் கால் டீஸ்பூன்
சீரகம் கால் டீஸ்பூன் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு தலா 1 எடுத்து சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, பெருஞ்சீரகம் தலா கால் டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா ஒன்று சேர்த்து தாளித்து, அதில் வெங்காயம் உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கவும் அடுப்பை சிம்மில் வைக்கவும் அத்துடன் நான்கு டம்ளர் நீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து பனங்கிழங்கை சேர்க்கவும்.

கலவை சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய மல்லித்தழைத் தூவி சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும். வித்தியாசமான சுவையில் அசத்தும் இந்த பனங்கிழங்கு சப்ஜி.
*வேர்க்கடலை பால்ஸ்
வெறும் வாணலியில் புழுங்கல் அரிசி, பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தலா 200 கிராம்... சிவக்க வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
முக்கால் கிலோ வெல்லத்தில் முக்கால் டம்ளர் நீர் விட்டு பாகு காய்ச்சவும்.உலர்ந்த தோல் நீக்கிய வேர்க்கடலை (ஒன்று இரண்டாக வேண்டுமானாலும் பொடித்துக் கொள்ளலாம்) கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து பாகு உருண்டை பதம் வரும் வரை நன்கு கிளறவும் அகலமான தட்டில் அரைத்த மாவை கொட்டி பாகை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்க சுவையான வேர்க்கடலை பால்ஸ் ரெடி. செம டேஸ்டாக இருக்கும் இந்த வேர்க்கடலை பால்ஸ்.

*கத்தரிக்காய் ( நறையூர்) பால்கறி.
விதையில்லாத பிஞ்சு கத்திரிக்காய் கால் கிலோ காம்பை மட்டும் எடுத்து (முழுசா) நான்காக கீறிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம் பூண்டு தலா பத்து எடுத்து தோல் நீக்கி உரித்து கொள்ளவும் நாட்டு தக்காளி இரண்டு மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் கால் டீஸ்பூன் கசகசா நான்கு முந்திரி பெருஞ்சீரகம் கால் டீஸ்பூன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலில் என்னை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு கத்திரி சேர்த்து வதக்கவும் .பிறகு தக்காளி சேர்க்கவும். எல்லாம் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி (காய் உடையாமல்) மூடவும்.

காய் முக்கால் பாகம் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். (அடிபிடிக்காமல் இருக்க அடுப்பை சிம்மில் வைக்கவும்) நன்கு சிவக்க வரும் வரை கிளறி இறக்கவும். பரிமாறும் சமயம் சிறிதளவு நெய்யில் பிரிஞ்சி இலை, சிறு துண்டு பட்டை, 1 இலவங்கம் தாளித்து கொட்டி பரிமாறவும்.
இந்த கத்தரி பால் கறியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட தேவாமிர்தம்கெட்டது போங்கள்.
எங்க ஊர் ஸ்பெஷல் ரெசிபிகளை நீங்களும் செய்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!
சந்தோஷமா சாப்பிடுவோம் சந்தோஷமா வாழ்க்கையைக் கொண்டாடுவோம் பாஸ்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.