வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சற்றே சோம்பலான .. சூரியனார்.. அனலைக் கக்கிக்கொண்டிருந்த மதிய நேரம்... வேகவேகமாக காய் நறுக்கிக் கொண்டிருந்தபோது... என் கண்ணைப் பொத்தி நான்யார் கண்டுபிடியுங்கள் என்று ஒரு குரல்.... என் செல்ல' பிரியா' என்று மிகச் சரியாகச் சொன்னேன்.
மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் படிப்பு படிப்பதற்காக நீட் எக்ஸாம் எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருப்பவள். என் நெருங்கிய தோழி. எப்பவும் சிரித்த முகத்துடன் பளிச்சென்று இருப்பாள்.
என்ன ஆன்ட்டி, யார் வருகிறார்கள் என்று கூட தெரியாமல் மும்முரமாக காய் நறுக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்?! எனக் கேட்டாள்.
எனது மகனின் வட இந்தியத் தோழி ஒருத்தி தனது கணவனுடன் சாப்பிட வருவதாக கூறியிருக்கிறாள்.. அதற்காக இரவு உணவை தயாரிக்கிறேன் என்றேன். அப்பொழுது அவள் , அப்படியானால் அந்த ரெசிபியை எனக்கும் சொல்லுங்கள்.

நானும் வீட்டில் செய்து அசத்துகிறேன் என்றாள்.
இதோ அவளுக்குச் சொன்ன ரெசிபியை உங்களுக்கும் சொல்கிறேன். நீங்களும் செய்து விடுமுறையைக் கொண்டாடுங்கள். சமையலில் மிகுந்த ஆர்வம் கொண்டவள் அவள்... கூடவே வீட்டை சுத்தமாக பராமரிப்பதிலும்...
இந்த காலத்தில் அதுவும் மருத்துவம் படித்த ஒரு பெண் இவவளவு சிம்பிளாக இருக்க முடியுமா?! என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவளின் எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும்.
மெனு? என்று கேட்டாள்.
இட்லி ,மசால் தோசை, இடியாப்பம் கொஞ்சமே கொஞ்சம் புலாவ்... இதுதான் இரவு நேர மெனு. அதற்கு தொட்டுக்கொள்ள வெஜ் சுல்தான், ஒயிட் சால்னா, சோயா பீன்ஸ் கூட்டு... இதற்காக காய்கறிகளை நறுக்கிக் கொண்டு இருந்த போதுதான் ... உன் வருகை என்றேன்.

*கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு ...(தேவையான அளவு) அரை வேக்காடு வேக வைத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிறிதளவு பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.100கிராம் பன்னீரை சின்ன துண்டுகளாக நறுக்கி , சிறிதளவு வெண்ணெயில் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.50கிராம் முந்திரியை ஊற வைத்து வெண்ணெய் போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பூண்டு 10 பல், இஞ்சி சிறு துண்டு, பச்சை மிளகாய்4, 4 வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் ஏலக்காய்த்தூள், வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் ,சர்க்கரை தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு கலவையை நன்கு கொதிக்கவிடவும். பின் வேகவைத்த கேரட், பீன்ஸ், காலிபிளவர், பட்டாணி, போட்டு வதக்கி கடைசியாக வறுத்த பனீர், சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டி ,50 கிராம் உலர் திராட்சைபோட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
பரிமாறும் முன் பாலேடு 50 கிராம், நெய் 2 டீஸ்பூன் சேர்த்து பரிமாறவும். புதுமையான சுவையில் அசத்தும் இந்த வெஜ் சுல்தான்.

*உருளைக்கிழங்கு கேரட் காலிபிளவர் பீன்ஸ். (தேவையான அளவு).
காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரை மூடி தேங்காயைத் துருவி அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியாக வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை , 3 பச்சை மிளகாயை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கியசிறுதுண்டு இஞ்சி,10 பூண்டுபல்,2 வெங்காயம் சின்ன வெங்காயம்10.. சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை முதலில் சேர்க்கவும் நறுக்கிய காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப் பருப்பு அரைத்த பொட்டுகடலை விழுதை சேர்த்து தேவைப்பட்டால் சிறுதுதண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அதனுடன் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து நுரைத்து வந்ததும் இறக்கவும் .தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை மல்லித்தழை தாளித்து கலவையில் சேர்க்கவும். கமகம மணத்துடன் சுவையான ஒயிட் சால்னா தயார்.

*சோயா பீன்ஸ், காராமணி, கொண்டைக்கடலை தலா கால் கப் எடுத்து முதல் நாள் இரவே ஊறப் போட்டு மறுநாள் குக்கரில் உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்த கலவையில் தலா 2 வெங்காயம், தக்காளி தேவையான அளவு மிளகாய்த்தூள், சிறிதளவு மஞ்சள்தூள் 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு சிறிதளவு தேங்காய் துருவலுடன், அரை டீஸ்பூன் சீரகம் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு ,கடுகு கருவேப்பிலை தாளித்து எடுக்க சுவையான சோயா பீன்ஸ் கூட்டு தயார்.
இப்படி அவளிடம் கூறிக்கொண்டே ரெசிபிகளை நான் செய்து முடித்துவிட்டேன்.அவள் என் கன்னங்களில் அன்பு முத்தங்களை பரிசாக அளித்தாள்.நீங்களும் வீட்டில் இந்த ரெஸிபிகளை செய்து இட்லி தோசை இடியாப்பம்,புலாவ் ஆகியவற்றுடன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் பரிமாறுங்கள்.அவர்களும் உங்களுக்கு அன்பு முத்தங்களை பரிசளிப்பர்.
வித்தியாசமான சைட்டிஷ் தயாரித்து இரவு உணவைஜமாயுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.