Published:Updated:

Doctor Vikatan: ஒரு வயது குழந்தைக்கு தினமும் சத்துமாவுக் கஞ்சி கொடுக்கலாமா?

கஞ்சி
News
கஞ்சி

உங்கள் குழந்தைக்கு ஒரு வயது என்பதால் பலவித சத்துகளை அறிமுகப்படுத்த வேண்டிய பருவம் இது. இந்த வயதில் குழந்தைகளுக்கு சுவை உணர்வு வளரத் தொடங்கியிருக்கும் என்பதால் விதம் விதமான சுவைகளை முயற்சி செய்ய ஆர்வமாக இருப்பார்கள்.

Doctor Vikatan: என் ஒரு வயது மகனுக்கு தினமும் 2 ஸ்பூன் சத்து மாவில் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கிறேன். இது நல்லதா... தினமும் கொடுப்பது சரியா அல்லது எத்தனை நாள்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்?

Devi Meena, விகடன் இணையத்திலிருந்து...

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.

ஊட்டச்சத்து ஆலோசகர் 
லேகா ஸ்ரீதரன்
ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைக்கு தினமும் முன்பகல் அல்லது மாலை நேரத்தில் கஞ்சி கொடுப்பது நல்லதுதான். ஆனால், நீங்கள் கொடுக்கும் கஞ்சி சத்துமிக்கதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கஞ்சி மாவு என்றால் இன்னும் சிறப்பு.

சத்து மாவுடன், நட்ஸ் கலவையும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இந்தச் சத்துமாவை பால் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் புரதச்சத்தையும் அதிகரிக்க முடியும். ஆனால், இந்தக் கஞ்சியை பிரதான வேளை உணவாகக் கொடுக்க வேண்டாம்.

உங்கள் குழந்தைக்கு ஒரு வயது என்பதால் பலவித சத்துகளை அறிமுகப்படுத்த வேண்டிய பருவம் இது. இந்த வயதில் குழந்தைகளுக்கு சுவை உணர்வு வளரத் தொடங்கியிருக்கும் என்பதால் விதம் விதமான சுவைகளை முயற்சி செய்ய ஆர்வமாக இருப்பார்கள்.

உங்கள் வீட்டில் மற்ற நபர்களுக்கு வழக்கமாக சமைக்கும் உணவுகளையும் உப்பு, காரம், மசாலா அளவுகளைக் குறைத்து, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பிக்கலாம்.

கஞ்சி
கஞ்சி

வீட்டிலேயே சத்து மாவுக் கஞ்சி தயாரிப்பதாக இருந்தால் அதில் கீழ்க்காணும் பொருள்கள் அவசியம் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு சிவப்பரிசி, கோதுமை, முளைகட்டிய கேழ்வரகு, சோளம், பொட்டுக்கடலை, பச்சைப் பயறு, கறுப்பு உளுந்து, ஜவ்வரிசி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு, முந்திரிப்பருப்பு, பிஸ்தா, பாதாம் மற்றும் ஏலக்காய் போன்றவை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.