Published:Updated:

Doctor Vikatan: அதிக இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரைநோய் ஆபத்து அதிகரிக்குமா?

sweets
News
sweets ( Pixabay )

இனிப்பு சாப்பிடுவதற்கும் நீரிழிவு பாதிப்புக்கும் நேரடி தொடர்பில்லா விட்டாலும் இப்படி மறைமுக ஆபத்து இருக்கிறது. ஒரு நபர் உடல் பருமனோடு இருக்கிறார், அவரின் பெற்றோரில் ஒருவருக்கோ, இருவருக்குமோ நீரிழிவு இருக்கிறது என்ற நிலையில், அதன் விளைவாக நீரிழிவு வரக்கூடும்.

Doctor Vikatan: இனிப்பு சாப்பிடுவோருக்கு சர்க்கரைநோய் வர வாய்ப்பு உண்டா? அதிக இனிப்புகள் சாப்பிட்டால் பரம்பரை பின்னணி இல்லாவிட்டாலும் சர்க்கரைநோய் ஆபத்து அதிகரிக்கும் என்பது உண்மையா?

பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் மருத்துவர் அஷ்வின் கருப்பன்.

மருத்துவர் அஷ்வின் கருப்பன்
மருத்துவர் அஷ்வின் கருப்பன்

இனிப்பு சாப்பிடுவதால் பொதுவாக யாருக்கும் நீரிழிவு வராது. இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தேடல் உள்ளவர்களுக்கும்கூட நீரிழிவு வராது. அடிக்கடியும் அதிக அளவிலும் இனிப்பு சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு தேவையற்ற கலோரிகள் உடலில் சேரும். அதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும். உடல் பருமன் அதிகரிப்பதன் விளைவாக அந்த நபருக்கு நீரிழிவு வர வாய்ப்புகள் 100 சதவிகிதம் அதிகரிக்கும்.

இனிப்பு சாப்பிடுவதற்கும் நீரிழிவு பாதிப்புக்கும் நேரடி தொடர்பில்லாவிட்டாலும் இப்படி மறைமுக ஆபத்து இருக்கிறது. ஒரு நபர் உடல் பருமனோடு இருக்கிறார், அவரின் பெற்றோரில் ஒருவருக்கோ, இருவருக்குமோ நீரிழிவு இருக்கிறது என்ற நிலையில், அதன் விளைவாக நீரிழிவு வரக்கூடும்.

எனவே, இனிப்பு சாப்பிடும் அளவை ஆரம்பத்திலேயே குறைத்துவிடுவதன் மூலம் உடலில் கலோரிகள் சேர்வதும் உடல் பருமனாவதும் தடுக்கப்படும். நீரிழிவு அபாயம் குறையும்.

நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்

தேவையைவிட அதிக கலோரிகள் எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் கொழுப்பாகப் போய்ச்சேரும். அது நீரிழிவுக்கு வழிவகுக்கும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.