Published:Updated:

Doctor Vikatan: இரவு உணவுக்கு பழங்களும் சூப்பும் எடுத்துக் கொள்வது எடைக்குறைப்புக்கு உதவுமா?

எடைக்குறைப்பு
News
எடைக்குறைப்பு

முறையான நிபுணர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் பலரும் எடையைக் குறைக்கும் எண்ணத்தில் பல விஷயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.

Published:Updated:

Doctor Vikatan: இரவு உணவுக்கு பழங்களும் சூப்பும் எடுத்துக் கொள்வது எடைக்குறைப்புக்கு உதவுமா?

முறையான நிபுணர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் பலரும் எடையைக் குறைக்கும் எண்ணத்தில் பல விஷயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.

எடைக்குறைப்பு
News
எடைக்குறைப்பு

Doctor Vikatan: தினமும் இரவில் பழங்கள் மட்டுமே சாப்பிடுவது அல்லது சூப் மட்டுமே குடிப்பது எடைக் குறைப்புக்கு உதவுமா? அது சரியான பழக்கமா? அதன் பிறகு இரவு மீண்டும் பசித்தால் என்ன சாப்பிடுவது?

பதில் சொல்கிறார், ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிட்னஸ் எக்ஸ்பர்ட்டும் ஊட்டச்சத்து ஆலோசகருமான கனி செல்வம்...

ஊட்டச்சத்து ஆலோசகர் கனி செல்வம்
ஊட்டச்சத்து ஆலோசகர் கனி செல்வம்

முறையான நிபுணர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் பலரும் எடையைக் குறைக்கும் எண்ணத்தில் இப்படிப் பல விஷயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.

இரவு உணவுக்கு வெறும் பழங்களோ, சூப்போ, அளவு குறைவான உணவுகளையோ எடுத்துக்கொள்ளும்போது அவற்றில் புரதச்சத்து இல்லாத பட்சத்தில், நள்ளிரவில் உங்களுக்குப் பசி உணர்வு எற்படும். அதன் காரணமாக உங்கள் தூக்கமும் பாதிக்கப்படும். அது மட்டுமன்றி நள்ளிரவுப் பசியின் காரணமாக அந்த நேரத்தில் நீங்கள் எதையாவது சாப்பிட முனைவீர்கள். அவை ஆரோக்கியமற்ற உணவுகளாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் சூப்பும் பழங்களும் எடுத்துக்கொண்டதன் பலனே வீணாகிப்போகும்.

சூப்பும் பழங்களும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள். எனவே, நள்ளிரவில் ஏற்படும் பசி உணர்வைக் கட்டுப்படுத்தவும், தூக்கம் பாதிக்கப்படாமலும் இருக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. அதிலும் குறிப்பாக, நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தால், இரவில் சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம்.

Diet
Diet
Pixabay

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கலோரிகள் எடுத்துக்கொள்கிறீர்கள், அதை அந்த நாள் முழுவதும் எப்படி எரிக்கிறீர்கள், அதிலும் பசி உணர்வு இல்லாமல் என்பது தான் முக்கியம். அதுதான் எடைக்குறைப்புக்கும் உதவும்.

எனவே, எடைக்குறைப்பு முயற்சியைத் தொடங்கும் முன் சரியான நிபுணரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையோடு உங்களுக்கான உணவுத்திட்டத்தைக் கேட்டறிந்து பின்பற்றுவதுதான் சரி.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.