Published:Updated:

Doctor Vikatan: பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?

பல்லி
News
பல்லி

பொதுவாகவே பலருக்கும் பல்லிகளைக் கண்டால் பயமோ, அருவருப்போ இருப்பது இயல்பு. சாதாரணமாக வீடுகளில் காணப்படுகிற பல்லிகள் விஷத்தன்மை அற்றவை. அவை உணவுகளில் விழும்போது சிறுநீரோ, மலமோ கழிக்கலாம்.

Published:Updated:

Doctor Vikatan: பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?

பொதுவாகவே பலருக்கும் பல்லிகளைக் கண்டால் பயமோ, அருவருப்போ இருப்பது இயல்பு. சாதாரணமாக வீடுகளில் காணப்படுகிற பல்லிகள் விஷத்தன்மை அற்றவை. அவை உணவுகளில் விழும்போது சிறுநீரோ, மலமோ கழிக்கலாம்.

பல்லி
News
பல்லி

Doctor Vikatan: பல்லி விழுந்த உணவை உண்டதால் வாந்தி, மயக்கம், உயிரிழப்பு போன்ற சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். உண்மையில் பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்.

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

உணவுப்பொருள்கள் எப்போதும் மூடியே வைக்கப்பட வேண்டும் என்பதையே இது போன்ற செய்திகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. பூச்சிகள் விழுந்த உணவுகளை உட்கொண்டதால் உணவு நஞ்சாகி, பாதிப்புக்குள்ளான செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

பூச்சிகளில் விஷத்தன்மை கொண்டவை, விஷத்தன்மை அற்றவை என இரண்டு வகைகள் உள்ளன. எந்த வகைப் பூச்சிகளாக இருந்தாலும் அவை உணவில் விழுந்து இறக்கும்போது ஒருவித நச்சுப்பொருளை வெளியேற்றும். அந்த நச்சுகளின் விளைவாக அந்த உணவை உட்கொள்வோர் உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுவே விஷத்தன்மை உள்ள பூச்சிகள் உணவில் விழுந்து, அந்த உணவுகளை உட்கொள்வோருக்கு அதன் பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும். எனவே, உணவு சமைக்கும்போது அதை ஆரோக்கியமாக, சுகாதாரமாக சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதைப் பத்திரப்படுத்துவதும் முக்கியம். உணவுகள் முழுமையாக சமைக்கப்பட வேண்டும். சமைத்த உணவுகளை சரியாக மூடி வைக்க வேண்டும்.

பல்லி
பல்லி

பொதுவாகவே பலருக்கும் பல்லிகளைக் கண்டால் பயமோ, அருவருப்போ இருப்பது இயல்பு. சாதாரணமாக வீடுகளில் காணப்படுகிற பல்லிகள் விஷத்தன்மை அற்றவை. அவை உணவுகளில் விழும்போது சிறுநீரோ, மலமோ கழிக்கலாம். பல்லிகளின் சிறுநீரும் மலமும் நச்சுத்தன்மை அற்றவை என்றாலும் சிலருக்கு அவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதன் காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படலாமே தவிர, பல்லிகள் விழுவதால் உணவு நஞ்சாவதில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.