Published:Updated:

Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் சாப்பிடக் கூடாதா?

தைராய்டு
News
தைராய்டு

தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் இத்தகைய காய்கறிகளை பச்சையாகச் சாப்பிடக் கூடாது. இந்தக் காய்கறிகளில் உள்ள ஒருவித கெமிக்கல், தைராய்டு சுரப்பியை பாதிக்கக்கூடிய தன்மை கொண்டது.

Published:Updated:

Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் சாப்பிடக் கூடாதா?

தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் இத்தகைய காய்கறிகளை பச்சையாகச் சாப்பிடக் கூடாது. இந்தக் காய்கறிகளில் உள்ள ஒருவித கெமிக்கல், தைராய்டு சுரப்பியை பாதிக்கக்கூடிய தன்மை கொண்டது.

தைராய்டு
News
தைராய்டு

தைராய்டு உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றை சாப்பிடக் கூடாது என்பது உண்மையா, காரணம் என்ன? இதுபோன்று வேறு எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்?

மருத்துவர் சக்திவேல்
மருத்துவர் சக்திவேல்

பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்.

காலிஃப்ளவர், டர்னிப், லெட்யூஸ் போன்றவற்றை `க்ரூசிஃபெரஸ்' வகை (cruciferous vegetables) காய்கறிகள் என்று சொல்வார்கள். இந்தக் காய்கறிகளில் உள்ள ஒருவித கெமிக்கல், தைராய்டு சுரப்பியை பாதிக்கக்கூடிய தன்மை கொண்டது.

vegetables
vegetables

அதனால் இத்தகைய காய்கறிகளைச் சாப்பிடும்போது தைராய்டு குறைபாடும், தைராய்டு சுரப்பி வீக்கமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு.

அதுவே இந்த `க்ரூசிஃபெரஸ்' வகை காய்கறிகளை சமைக்கும்போது, தைராய்டு பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பிட்ட அந்த கெமிக்கல் அழிக்கப்பட்டுவிடும்.

எனவே, தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் இத்தகைய காய்கறிகளை பச்சையாகச் சாப்பிடக் கூடாது. அதாவது, சாலட்டாக சாப்பிடக்கூடாது

salad
salad

நன்றாக வேகவைத்துச் சாப்பிடும்போது இவற்றால் பிரச்னைகள் ஏற்படுவதில்லை என்பதால் தைராய்டு பாதிப்புள்ளவர்களும் சாப்பிடலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.